பேட்ட சிங்காரத்திற்கு அடித்த சான்ஸ்..; தமன்னாவுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட சிங்காரம், பேட்ட வில்லன், ரஜினி வில்லன் நவாசுதீன் சித்திக், தமன்னா அனுராக் காஷ்யப், தமன்னா பாலிவுட்
பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் நவாசுதின் சித்திக்.

இவர் பாலிவுட் திரையுலகில் முக்கியமான நடிகர் ஆவார்.

இந்த நிலையில் ‘போலே சுடியான்’ படத்தில் நவாசுதீன் சித்திக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

நவாசுதின் சித்திக்கின் சகோதரர் சமாஸ் சித்திக் இப்படத்தை இயக்குகிறார்.

‘இமைக்கா நொடிகள்’ பட வில்லன் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

தமன்னா நடிப்பில் அண்மையில் வெளியான கண்ணே கலைமானே, தேவி2 ஆகிய தமிழ்படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை.

ஜூலை 3-ம் தேதி விக்ரம் ரசிகர்களுக்கு கமல்ஹாசனின் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடித்துள்ள படம் `கடாரம் கொண்டான்’.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கமலின் ஆஸ்தான ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டப்பிங் பணியை விக்ரம் முடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் ஜூலை 3-ந் தேதி படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது-

காலம் பேசாது ஆனால் பதில் சொல்லும்.; சூப்பர் ஸ்டாரின் சூப்பர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பேச்சாளர் சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ராமாயணம் எழுதியதால்தான் கம்பருக்கு பெருமை. அதே மாதிரி, இந்த நூலை எழுதியதால் சாலமன் பாப்பையா சாருக்கு மிகப் பெரிய புகழ் வந்துசேரும்.

திருச்சி சிவா பேசும்போது, இந்த நூலை எல்லோருக்கும் போய் சேரும்படி செஞ்சிடுங்க. இல்லைனா, ஸ்டாலின் முதல்வரானதும் அதை நாங்க பண்ணிடுவோம்னு சொன்னார்.

அதை கேட்ட பிறகு (அதிமுக அமைச்சர்) மாஃபா. பாண்டியராஜன் சார் பதறிப்போய், இல்லை இல்லை நாங்களே இந்த நூலை எல்லோருக்கும் போய் சேரும்படி செஞ்சிடுறோம்னு சொன்னார்.

ஆக மொத்தம், இந்த நூல் எல்லோருக்கும் போய் சேர்ந்தால் ரொம்ப சந்தோசம். இந்த நூல் எல்லா இளைஞர்களுக்கு போய் சேரணும்.

காலம் பேசாது ஆனால், பதில் சொல்லும்.

கம்பர், ராமாயணம் பத்தி, தமிழ் இலக்கியங்களை பத்தி பேசின பாப்பையா சார் வாய் ரஜினி பத்தியும் பேசியது எனக்கு பெருமை. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் அவர் என்னிடம் பேசுவார்.

அவர் நூறாண்டு ஆரோக்கியமாக வாழந்து இந்த நூல் மாதிரி நிறைய பொக்கிஷங்களை மக்களுக்கு கொடுக்கணும்னு வேண்டிக்கிறேன்.” இவ்வாறு ரஜினி பேசினார்.

Rajinikanth speaks at Solomon Pappaiahs Book launch event

ரஜினி-கமல் செட்டாச்சு; சிவகார்த்திகேயனிடம் சிக்காத எம்ஜிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இதை அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்.

எனவே தன் படத்திற்கு ரஜினிமுருகன், வேலைக்காரன் என்ற ரஜினி படத்தலைப்புகளை வைத்தார்.

அதுபோல் கமல் நடிப்பில் வெளியான காக்கி சட்டை என்ற படத்தலைப்பிலும் நடித்தார்.

இதனிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு, ‘எங்க வீட்டு பிள்ளை’ என்ற எம்.ஜி.ஆர். படத்தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.

இதனையடுத்து எங்க வீட்டு பிள்ளை’ என்ற எம்.ஜி.ஆர். பட தலைப்பை பயன்படுத்த யாருக்கும் உரிமை கொடுக்கவில்லை என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடெக்சன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே எம்ஜிஆர் படத்தலைப்பு கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறதாம் படக்குழு.

No MGR movie title for Sivakarthikeyans movie

ஸ்ரீதிவ்யாவின் தங்கைக்கு குவியும் ஹீரோயின் வாய்ப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஜீவா படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையாக நடித்தவர் மோனிகா.

இவர் அண்மையில் வெளியான ஜீவி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார்.

தற்போது தோழர் வெங்கடேசன் என்ற படத்திலும் கமலி என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

மகாசிவன் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் ஹரி சங்கர் நாயகனாக நடித்துள்ளார்.

இதில் படம் முழுக்க மேக்கப்பே போடாமல் நடித்திருக்கிறாராம் மோனிகா.

மேலும் தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல் தானே ஸ்பாட்டுக்கு வந்து அமைதியாக நடித்துவிட்டு செல்கிறாராம்.

Jiivi fame Actress Monica Chinnakotla getting heroine chances

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் ‘வாழ்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் “கனா” மற்றும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என பாராட்டுக்களை குவித்த இரண்டு வெற்றி திரைப்படங்களை தயாரித்து ஒரு மிகச்சிறந்த பிராண்டாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களோடு, வெவ்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு படங்களும், சமூக பிரதிபலிப்பை கொண்டிருந்தன, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே வெற்றிப்படமாக அமைய காரணமாக இருந்தது. தொடர்ச்சியாக விதிவிலக்கான திரைப்படங்களை தயாரிக்கும் லட்சிய உந்துதலுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், தற்போது அதன் மூன்றாவது முயற்சியான ‘வாழ்’ என்ற படத்தை முழுவீச்சில் தயாரித்து வருகிறது. இந்த படம், அருவி படத்தின் மூலம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாவதால் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறது. இயற்கையாகவே, படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், அதன் கதையை பற்றிய ஏராளமான யூகங்களை ஏற்படுத்தி, மிகப்பெரிய அளவில் படத்தை கொண்டு சேர்த்திருக்கிறது.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ இசை வெளியீட்டு விழாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் இந்த படத்துக்கு ஒரு சரியான துவக்கம் கிடைத்ததை மொத்த குழுவும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறது. மேலும், குழுவினர், படத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க, காலில் சக்கரங்களை கட்டிக் கொண்டு இடைவிடாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஷெல்லி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பிரதீப் குமாரின் இசை கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும், ஏனெனில் பன்முகப்படுத்தப்பட்ட பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அவரிடம் எதிர்பார்க்கலாம். இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மற்றும் குட்டி ரேவதி ஆகியோருடன் இணைந்து அவரும் பாடலை எழுதுகிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா (படத்தொகுப்பு), ஸ்ரீராமன் (கலை), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), ஜெய்கர் பி.எச் (ஒலி வடிவமைப்பாளர்), தினேஷ் மனோகரன் (ஆடை வடிவமைப்பாளர்), அக்கு ஸ்டுடியோஸ் ஸ்ரீ ராமன் & குழு (அனிமேட்ரோனிக்ஸ்), எஸ் மாதேஸ்வரன் (கலரிஸ்ட்), பிரவீன் டி (சிஜிஐ), கபிலன் (போஸ்டர் டிசைன்ஸ்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெறுகிறது என்றால், அதற்கு காரணம் முதல் உதவி இயக்குநர்கள் பாக்கியராஜ் கோதை, யஸ்வந்த் இன்மொழி, இரண்டாம் உதவி இயக்குனர்கள் ராகுல் ராஜா, எம்.எஸ். கிருஷ்ணா, மிருதுளா ஸ்ரீதரன் மற்றும் பயிற்சி உதவி இயக்குநர்கள் – சந்தோஷ் நந்தீஸ்வரன், நிர்மலா ஆகியோரை உள்ளடக்கிய உதவி இயக்குனர்கள் குழு தான். இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மதுரம் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கலை அரசு இணை தயாரிப்பாளராகவும், ரா சிபி மாரப்பன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

அருண் பிரபு புருஷோத்தமன் எழுதி இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

More Articles
Follows