‘நான் ஒதுங்கல; பதுங்குறேன்; பாயப் போறேன்..’ டிஆர் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கத் தேர்தல் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி.ராஜேந்தர்.

“தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இருந்து டி ஆர் ஒதுங்கி விட்டதாக நினைக்கிறார்கள்.

நான் ஒதுங்கவில்லை. பதுங்கி இருக்கிறேன்.

புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்.

என் மகன் சிம்பு நடித்த வாலு படத்தின் வெளியீட்டின் போது பல பிரச்சினைகளை சந்தித்தது.

அப்படம் வெளியீட்டிற்கு தாமதம் ஆக, தயாரிப்பாளர்கள் சங்கம்தான் காரணம்.

தயாரிப்பாளர் சங்கம், என்னை கடன் வாங்க வைத்தது.

அந்த பணத்தை சன் நிறுவனத்திடமிருந்து விரைவில் வாங்கி தருவதாக வாக்குறுதியளித்தார்கள்.

ஆனால் ஒரு வருடம் ஆகியும் அந்த பணத்தை பெற்று தர தயாரிப்பாளர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்படிப்பட்ட சங்கம் எப்படி தயாரிப்பாளர்களின் தலையெழுத்தை மாற்றும்.

ஒரு தாடியை தோற்கடிக்க எத்தனை கோடி? என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் மீது கூறினார் டி ராஜேந்தர்.

விஷாலே எத்தனை முறை அடிக்கல் நாட்டுவீங்க? ரஜினி-கமலுக்கு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் விஷால் அணி, ராதாகிருஷ்ணன் அணி உள்ளிட்ட அணிகள் போட்டி போடுகின்றன.

இதில் ராதாகிருஷ்ணன் தலைமையிலான முன்னேற்ற அணி பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர்கள் கலைப்புலிகள் தாணு மற்றும் ஜி.சேகரன், டி.சிவா, சுரேஷ் காமாட்சி, சிவசக்தி பாண்டியன், கே. ராஜன், ஜே.கே. ரித்தீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் பேசும்போது, விஷாலை சாடினார்.

இதுநாள் வரை நடிகர் சங்க கட்டிடம் பற்றி வாய் திறக்காத விஷால், தற்போது அரசு அனுமதி கிடைத்துள்ளதாகவும், உடனே அடிக்கல் நாட்டு விழா நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, மார்ச் 5ஆம் தேதி எனக்கும் நாசருக்கும் பிறந்தநாள்.

அன்றைய தினம் அவர் அடிக்கல் நாட்டினார்.

தற்போது மறுபடியும் அடிக்கல் நாட்டு விழா என்கிறார். ஒரு கட்டிடத்திற்கு எத்தனை முறை அடிக்கல் செய்வீர்கள்.?

இப்போது அழைப்பிதழ் அச்சிடப்பட்டு விழா நடக்க உள்ளது.

இது தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை குறிவைத்தே விஷால் இப்படி செய்கின்றார்.” என்று பேசினார்.

இந்த விழாவில் ரஜினி-கமல் கலந்துக் கொள்ளக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது உண்மையானால், இது ரஜினி-கமல் போன்ற நடிகர்களுக்கு தெரியாதா?

Actor JK Rithesh slams Vishal in Nadigar Sangam Building issue

 

 

புரொடியூசரையே சூட்டிங்கிலிருந்து விரட்டியவர் விஷால்; போட்டுக் கொடுத்த தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் கோடை வெயிலை மிஞ்சும் வகையில் சினிமாவிலும் அரசியலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்.

வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் போட்டியிடும் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’ சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு பேசினார்.

பேசிக் கொண்டே இருக்கும்போதே, விஷாலால் பாதிக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளரின் கண்ணீர் கதையை கேளுங்கள் என்று சமர் பட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு அவர்களுக்கு போன் செய்தார்.

அப்போது அந்த தயாரிப்பாளர் போனில் பேசியதாவது…

‘சமர்’ படத்தில் நடித்த போது, ஆந்திரா வெளியீட்டு உரிமையை கேட்டார் விஷால். அது ஏற்கெனவே விற்றுவிட்டது. அதனால் கொடுக்க முடியாது என்றேன்.

அதன்பின் சமர் படத்தின் சூட்டிங்குக்கு ஒருமுறை என் குடும்பத்துடன் சென்றேன்.

ஆனால் நான் இருந்தால், விஷால் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.

அதன்பின் தமிழ் படங்களை தயாரிப்பதை விட்டுவிட்டு, தெலுங்கு சினிமாவுக்குப் போய் விட்டேன்.

இதுபோன்ற நிலைமை வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது’ என்றார்.

Many producers affected by Vishal says Kalaipuli Thanu

ரசிகர்களை தலைவர் சந்திக்கவில்லை; ரஜினி தரப்பு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி ரஜினிகாந்த், தன் ரசிகர்களை சந்திக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வந்தன.

சென்னையில் இக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் தற்போது ரஜினி சந்தித்து வரும் அரசியல் சூழ்நிலை பற்றி விவாதிக்க உள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

மேலும் ரஜினியை கட்சிக்குள் இழுக்க, பா.ஜ.க தரப்பு முயற்சித்து வருவதாகவும் அதனால் இதுவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இந்த தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் தலைவர் ரஜினி ரசிகர்களை சந்திக்கவில்லை என ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thalaivar will not meet his fans on April 2nd 2017 says Rajini PRO

பாலைவனம் நோக்கி படையெடுக்கும் விஜய்-அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் விஜய் 61 படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

இதில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யாமேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் முறுக்கு மீசையுடன் உள்ள விஜய்யின் காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் தன் அடுத்த படப்பிடிப்புக்காக இப்படக்குழு ராஜஸ்தான் செல்லக்கூடும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

இதற்காக அட்லி அங்கு சென்று, பாலைவனப் பகுதிகளை பார்வையிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் இந்த பகுதிகளில் சூட்டிங் நடைபெறும் எனத் தெரிகிறது.

இதனையடுத்து வெளிநாடு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Atlee in Rajasthan for location scouting for his Vijay 61 movie

தயாரிப்பாளர் ஆகிறார் ரஜினி-விஜய்-தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யுன் தெறி, விக்ரமுடன் ஐ மற்றும் தனுஷுடன் தங்க மகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.ஓ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் நண்பருடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கவிருக்கிறாராம்.

ஆனால் முழுநீளம் படமில்லையாம். குறும்படம் என சொல்லப்படுகிறது.

மிருகங்களும் அதனை எப்படி பாதுகாப்பதும் பற்றிய குறும்படம் இதுவாம்.

இந்த குறும்படத்தில் எமி ஜாக்சன் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Amy jackson turns producer

More Articles
Follows