சிவகார்த்திகேயன் ஜோடியை கைப்பற்றிய மாகாபா ஆனந்த்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியின் தொகுப்பாளர்களில் பிரபலமான மாகாபா ஆனந்த், தற்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

எனவே தற்போது தனது வழியை ரஜினி வழியாக மாற்றிக் கொண்டு ‘மாணிக்’ என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.

இதில் முழுக்க முழுக்க பாட்ஷா பட ஸ்டைல் ரஜினியாக மாறியிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இதில் நாயகியாக சிவகார்த்திகேயனின் ‘எதிர்நீச்சல்’ படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்த சூசாகுமார் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் மார்ட்டின் இயக்கவுள்ள இப்படத்திற்கு பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

தரண்குமார் இசையமைக்க இப்படத்தை மோஹிதா ஃபிலிம்ஸ் சார்பில் எம்.சுப்பிரமணியம், வினோத் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்ற விஜய் ரசிகைகள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஜீன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் வருகிறது.

அன்றைய தினம் விஜய் சென்னையில் இல்லாவிட்டாலும் அவரது ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டங்களை ஆரம்பித்து விட்டனர்.

தற்போது தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலும் இந்த கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கிவிட்டன.

இதில் ஒரு படி மேலே சென்ற விஜய்யின் தீவிர ரசிகைகள் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்காக அனைத்து வகை ரத்த பிரிவுகளையும் சேகரித்து இருக்கிறார்களாம்.

ஒரு நடிகரின் பிறந்தநாள் விழாவை பொழுதுபோக்காக எண்ணாமல், மனிதாபிமான எண்ணத்துடன் கொண்டாட உள்ள இந்த ரசிகைகளை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

விஜய் படத்தில் வில்லனாக அமலாபாலின் தம்பி அபிஜித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக் கொண்டவர் அமலா பால்.

தற்போதும் படத்தின் நாயகியாக சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் தம்பி அபிஜித் பால் என்பவரும் சினிமாவில் அறிமுகமாகிறாராம்.

அமலாபாலின் கணவரும், இயக்குனருமான ஏ.எல்.விஜய்யின் படத்தில்தான் வில்லனாக நடிக்கிறார்.

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா தயாரித்து நடிக்கும் வரும் படம் ‘தேவி’. இதில் நாயகியாக தமன்னா நடிக்க, வில்லனாக அபிஜித் நடிக்கிறார்.

சூட்டிங் ஸ்பாட்டுக்கு அக்காவே வந்து நடிப்பு சொல்லி கொடுக்கிறாராம்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

‘பகிரி’ படத்தின் மூலம் மியூசிக் டைரக்டராகிறார் கருணாஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய தொழில்நுட்ப சமூகத்தை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டவை ஆட்சி செய்து வருகின்றன.

இதில் வாட்ஸ் அப்பை மையமாக வைத்து ‘பகிரி என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

அதாவது வாட்ஸ் அப் என்றால் ‘பகிரி’ என்று பொருள்படும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

இசக்கி கார்வண்ணன் என்பவர் தயாரித்து இயக்கி வரும் இப்படத்தில் ‘கனாக்காணும் காலங்கள் புகழ் பிரபு ரணவீரன் நாயகனாக நடிக்கிறார்.

ஆந்திராவில் இருந்து இறக்குமதியான ஷர்வியா நாயகியாக நடிக்க, ரவிமரியா, ஏ.வெங்கடேசன், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்.

இப்படம் குறித்து இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறியதாவது…

‘இது பகிர்தல் தொடர்புடைய கதை. எனவேதான் ‘பகிரி’.

தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞன் ஒருவனை மையம் கொள்கிற கதை.

இக்கால இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? விருப்பம், வேலை எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறேன்.

நான் பகிரவேண்டிய செய்தியையும் முழுக்க காமெடியோடு பகிர்ந்திருக்கிறேன்” என்றார்.

வீரகுமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.

கிராமத்து மனிதர்களை கிண்டல் செய்த செல்வராகவன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குனரும் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இவர் இயக்கிவரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க, கௌதம் மேனன் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் சிறுவயது நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.

அதில் தெரிவித்துள்ளதாவது…

“சிறு வயதில் கிராமத்தில் மதியம் உண்டு விட்டு மரத்தடியில் தூங்குபவர்களை பார்த்து நான் கிண்டல் செய்தது உண்டு. இப்பதான் சாமி அந்த அருமை புரியுது.” என்று பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் ரசிகராக மாறிய விஜய்சேதுபதி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வளரும் முன்னணி கலைஞர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனுக்கும் விஜய்சேதுபதிக்கும் முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறிவந்தாலும், இவர்களை போட்டியாளர்களாக கருதியே நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன.

இந்நிலையில் நாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்பதை தன் படத்தில் உள்ள ஒரு காட்சி மூலம் நிரூபிக்க இருக்கிறாராம் விஜய் சேதுபதி.

இவர் தற்போது நடித்து வரும் றெக்க படத்தின் ஒரு காட்சியில், சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு செல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த காட்சி அண்மையில் படமாக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows