தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
இதை தொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘டாணா’ உள்ளிட்டட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சமீபமகாலமாக தமிழில் அவர் பெரிய அளவில் படங்களை நடிப்பதில்லை.
இந்நிலையில், நடிகை நந்திதா ‘பைப்ரோமியால்ஜியா’ என்ற நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகை நந்திதா ஸ்வேதா கூறுகையில், ‘‘பைப்ரோமியால்ஜியா’ என்ற தசை கோளாறால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இது என் உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலை செய்தால் கூட என்னுடைய தசைகளில் இது பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால், அதிக கடினமான வேலைகளையும் உடற்பயிற்சியும் என்னால் செய்ய முடியாது. சில நேரங்களில் உடனடியாக நகர்வதற்குக் கூட கடினமாக இருக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தசை மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி இருக்கும். மேலும், மோசமாக நினைவாற்றலையும் பாதிக்கும். இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி, என்னுடைய அடுத்தப் படத்துக்காக உழைத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும், நடிகை சமந்தா இதே போன்ற அறிகுறி உடைய ‘மயோசிடிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Nandita Swetha Suffering From Fibromyalgia Disease
