சுசீந்திரன் இயக்கும் “கென்னடி கிளப்” இறுதிகட்ட காட்சிக்காக 2கோடி செலவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடந்து வருகிறார்கள் . ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள்.

படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 கோடி பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ போட்டியாகவே நடத்தி படப்பிடிப்பை பதிவு செய்து வருகிறார்கள் பட குழுவினர். இறுதிப்போட்டியை காண ஏராளமானோரை வரவழைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக்கட்ட காட்சிகளுக்கு மட்டும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்துகிறார்கள். இந்த படப்பிடிப்பு முடிந்ததும் பாடல்கள் மட்டும் படமாக்கப்படுகிறது என்று இதன் தயாரிப்பாளர் தாய் சரவணன் தெரிவித்தார்.

போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பாடல் பாடும் ரோபோ ஷங்கர் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த ஒரு பெரிய இடத்துக்கு போனாலும் நாம் வந்த பாதையை திரும்பி பார்ப்பது என்பதும், அதற்கு மரியாதை செய்வதும் மிகச்சிறந்த ஒரு செயல். நடிகர் போஸ் வெங்கட் புதுமுகங்களை வைத்து இயக்குனராக அறிமுகமாகும் காதல் படத்தில் அதேபோல ஒரு செயலை செய்துள்ளார். அதில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். ஆட்டோ டிரைவர்களின் அன்றாட சோதனைகள் மற்றும் சவால்களை பற்றிப் பேசும் ஒரு பாடல் படத்தில் இருக்கிறது, இந்த பாடலை நடிகர் ரோபோ ஷங்கர் பாடியிருக்கிறார்.

இது குறித்து நடிகர் மற்றும் இயக்குனரான போஸ் வெங்கட் கூறும்போது, “நான் ஆரம்பித்த இடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். நான் ஒரு ஆட்டோ டிரைவராக என் தொழிலை துவங்கினேன், அதற்கு மரியாதை செய்ய விரும்பினேன். பாடல் பற்றிய கருத்தாக்கம் உருவான போதே, அதை ராகம் மற்றும் ஸ்ருதி பற்றி தெரியாத யாரோ ஒருவர் தான் அதை பாட வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். நிச்சயமாக, சாதாரண ஒரு தொழிலாளி பாடுவதை போல பாடல் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம். பாடலை பாட நல்ல பிரபலமான ஒரு குரலை தேடினோம், ரோபோ ஷங்கர் குரல் அதற்கு பொருத்தமாக இருந்தது. பாடலின் இறுதி வடிவம் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு சில யோசனைகள் மற்றும் அனுமானங்கள் இருந்தபோதிலும், இசையமைப்பாளர் ஹரி சாய், அவர் பங்குக்கு சில துள்ளலான விஷயங்களை சேர்த்துக் கொண்டார்.

ஸ்ரீராம் கார்த்திக், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அறிமுக நடிகை காயத்ரி (யார் கண்ணன் மகள்), வலீனா ப்ரின்சஸ், விஷ்ணு ராமசாமி, சூப்பர் குட் சுப்ரமணி மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிசால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய, இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்ய, ஹரி சாய் இசையமைக்கிறார். சிவ சங்கர் (கலை), விவேகா (பாடல்கள்), தினேஷ் சுப்பராயன் (ஸ்டண்ட்ஸ்), ஜோசப் ஜாக்சன் (டிசைன்ஸ்), ஆர்.பாலகுமார் (ப்ரொடக்‌ஷன் கண்ட்ரோலர்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள். ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்கிறார்.

ஏப்ரல் 19 ம் தேதி வெளியாகிறது ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்சன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படமான முனி 4 காஞ்சனா 3 படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது…

சம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 19ம் தேதி உலகம் முழுக்க படத்தை வெளியிட உள்ளனர்…தேர்தல் முடிந்த மறு நாள் படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத் தக்கது…

பிரம்மாஸ்த்ரா படத்தின் லோகோவை தமிழ் மொழியில் வெளியிட்ட தனுஷ் மற்றும் சூர்யா !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் பிரம்மாண்டமான லோகோ வெளியிடப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் லோகோ தமிழ் மொழியில் வெளியானது.. தமிழில் நடிகர் தனுஷ் மற்றும் சூர்யா ஆகியோர் மதியம் 2 மணிக்கு வெளியிட்டனர் .தெலுங்கு மொழியில் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியும் ,பிரபல நடிகர் ராணா டகுபடி -யும் காலை 11 மணிக்கு வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராமாஸ்டரா திரைப்படம் மூன்று பாகங்களை கொண்டது. அதன் முதல் பாகம் கிறிஸ்துமஸ் 2019 ல் வெளியாக இருக்கிறது.

தயாரிப்பு :ஹிரோ யாஷ் ஜோகர் கரண் ஜோகர், அபூர்வா மேஹ்டா , நமிட் மல்ஹோத்ரா , ரன்பீர் கபூர் , அயன் முகர்ஜி, & பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் .

Logo Link – https://youtu.be/jVxP5TQ-NsI

தமிழனின் ஆதி இசையை மியூசிக் அகாடமி மேடையேற்றிய ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் நிலத்தின் கலை வடிவங்களை பொதுமைப் படுத்துவதில் பேரார்வமும், பெருமுயற்சியும் கொண்டிருப்பவர் இயக்குநர் பா.இரஞ்சித்.

அந்த வகையில் சமீபத்தில் அவரின் “நீலம் பண்பாட்டு மையம்” ஒருங்கிணைத்து நடத்திய “வானம் கலைத் திருவிழா” மூன்று நாள் நிகழ்வு பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” மற்றும் “ரூட்ஸ் 2” குழுவினர் ஒருங்கிணைத்த “ஒரு ஒப்பாரி ஷோ” நிகழ்ச்சி மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

நிகழ்த்துக் கலைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் ஒப்பாரியானது, முதல் முறையாக ஒரு பொது மேடையில் அரங்கேறியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தது.

இந்நிகழ்ச்சியில் சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள ஒப்பாரிக் கலைஞர்கள் பங்குபெற்று பாடினார்கள்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்து பார்க்க வந்திருந்த பார்வையாளர்களைத் தாண்டி ஆந்திரா, கேரளா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களில் இருந்து கூட இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மட்டுமே வந்திருந்தவர்களும் இருந்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில், பங்குபெற்ற இசைக் கலைஞர்களுக்கு இயக்குநர் பா.இரஞ்சித் கௌரவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய “மியூசிக் அகாடமி” நிர்வாகத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் முதல் முறையாக ஒப்பாரியை ஒரு பெரிய மேடையில் பார்த்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இயக்குநர் பா.இரஞ்சித் இதுபோல நிகழ்ச்சிகளை தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஒருங்கிணைக்க வேண்டுமென நெகிழ்ச்சியுடன் வேண்டுகோள் வைத்தனர்.

Director Pa Ranjith talks about Oppari Show

மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் சின்னம்; ரஜினி ஆதரவை கேட்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுவயது முதல் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கமல் அவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.

வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது.

அப்போது மக்கள் நீதி மய்யம் சார்பாக ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளார். விரைவில் எந்த தொகுதி? என்பதை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மற்ற தொகுதிகளில் தன் கட்சி உறுப்பினர்கள் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இத்துடன் தமிழகத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தன் கட்சி உறுப்பினர்கள் களம் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதனிடையில் உங்கள் கட்சிக்கு நண்பர் ரஜினி ஆதரவளிப்பாரா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

நான் கேட்பதை விட அவர் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கமல் மறைமுகமாக ரஜினி ஆதரவை கேட்டுள்ளார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என முன்பே ரஜினி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Kamals MNM party gets Torch Light symbol Will Rajini support

More Articles
Follows