சுசீந்திரனின் *கென்னடி கிளப்* படம் 2 கோடிக்கு சீனாவில் விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ‘டங்கல்’ மற்றும் ‘பாகுபலி’ போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது.

அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், எப்போதும் முன்மாதிரியாக விளங்கும் என்ற உண்மை ‘Content is King’ மூலம் நிரூபணமாகியிருக்கிறது.

சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள படம் சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்பட்டு தான் சீனாவில் இவ்வளவு பெரியத் தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

இப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மூத்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பாரதிராஜா-சசிகுமார்-சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது சர்வதேச சந்தையிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தைக் கொண்டு உருவாகியுள்ளது ‘கென்னடி க்ளப்’. சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், ‘புதுவரவு’ மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

R.B.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை D.இமான் இசையமைக்கிறார். கலை – B.சேகர்.

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.

Director Susienthirans Kennedy Club Speaks Chinese Now

2.0 படத்துடன் இணையும் சிம்புவின் *வந்தா ராஜாவாதான் வருவேன்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் உருவாகும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சுந்தர் சி.

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

ஐதராபாத்தில் நவம்பர் 30 வரை படப்பிடிப்பை நடத்திவிட்டு பின்னர் பாடல் காட்சிக்காக படக்குழுவின்ர வெளிநாடு செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு அதற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர்.

தற்போது டப்பிங் பேசும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் சிம்பு. அந்த புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நவம்பர் 29ஆம் தேதி ரிலீசாகவுள்ள ரஜினியின் 2.0 படத்துடன் இணைத்து திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனமே தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை திரைக்கு கொண்டு வர லைகா திட்டமிட்டுள்ளது.

Vantha Rajava Than Varuven trailer join with 2point0 movie

திரையுலகில் சரித்திரமாக மாறிய விஜய்சேதுபதி அய்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணிதரன்.

இவர் தற்போது மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து இயக்கியுள்ள படம் சீதக்காதி.

இதில் 80 வயது நாடக நடிகராக அய்யா ஆதிமூலம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.

விஜய் சேதுபதியின் 25வது படமாக இது உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடன் அர்ச்சனா, மவுலி, இயக்குநர் மகேந்திரன், பக்ஸ், நடிகர் வைபவ்வின் அண்ணன் சுனில், காயத்ரி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

96 பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்பட டிரைலர் இன்று காலை வெளியானது.

பெரும்பாலும் டிரைலர் என்றாலே 2 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த டிரைலர் 2.09 நிமிடம் ஓடக்கூடிய வகையில் உள்ளது.

இதில் ரசிகர்கள் கொண்டாடும் அய்யா விஜய்சேதுபதி, திடீரென படப்பிடிப்பு தளங்களுக்கு வராமல் இருக்கிறார்.

அவரது கால்ஷீட்டை பெற்ற பல தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கின்றனர்.

விஜய் சேதுபதி 80 வயது கேரக்டரில் அசத்தலான மேக்அப்பில் உள்ளார்.

டிரைலரில் கடைசியாக “ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான், நானே சரித்திரமாக மாறிவிட்டேன்…” என்ற ஒரு பன்ச் பேசியிருக்கிறார்.

Ayya Vijay Sethupathis Seethakaathi trailer goes Viral

செய்-வண்டி உள்ளிட்ட ஆறு தமிழ் படங்கள் நவ-23ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை மறுநாள் நவம்பர் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள் பற்றி ஒரு பார்வை…

நகுல் நடித்துள்ள செய் படம் என்ற படம் வெளிவருகிறது.

இத்துடன் விதார்த், சாந்தினி நடித்துள்ள வண்டி, விஜய் டிவி புகழ் பாடகர் செந்தில் கணேஷ் நடித்துள்ள கரிமுகன், புதுமுகங்கள் நடித்துள்ள கார்த்திகேயனும் காணாமல்போன காதலியும், வினை அறியார், சகவாசம் உள்ளிட்ட ஆறு படங்கள் ரிலீசாகவுள்ளன.

இதில் செய் மற்றும் வண்டி படங்கள் மட்டும் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறதாம்.

மற்ற படங்கள் 60 முதல் 100 தியேட்டர்களில் வெளியாகின்றன.

இதில் கடைசி நேரத்தில் ஒரு சில படங்கள் வராமலும் போகலாம்.

இத்துடன் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ள ராபின்ஹூட், தி கேர்ள் இன் தி ஸ்பைடர்ஸ் வெப் என்ற இரண்டு ஹாலிவுட் படங்களும் ரிலீசாகின்றன.

Sei and Vandi movies will be released on 23 Nov 2018

ரஜினி பிறந்த நாளில் *பேட்ட* படத்தின் டபுள் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் தன் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

அன்றைய தினத்தில் அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு விருந்தளிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனம் தான் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தை தயாரித்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி பேட்ட பட டீசரையும் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலையும் வெளியிட இருக்கிறார்களாம்.

எனவே 2.0 பட ரிலீசுக்கு பிறகு இதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.

டிசம்பர் இறுதியில் அனைத்து பாடல்களையும் வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Petta Teaser and Single track will be released on Rajini Birthday

பொங்கல் தினத்தில் ரஜினியுடன் மோத மல்லுக்கட்டும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த நடித்துள்ள பேட்ட திரைப்படம் அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

‘பொங்கலுக்கு பராக்’ என ஒரு போஸ்டரையும் அதிரடியாக வெளியிட்டு திரையுலகை அசர வைத்தனர்.

இதற்கு முன்பே அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்து இருந்தனர்.

ரஜினி படங்கள் வெளியானால் மற்ற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ஏகப்பட்ட பிரச்சினை இருக்கும்.

ஒருவேளை பேட்ட படத்துடன் விஸ்வாசம் வெளியானால் குறைந்த எண்ணிக்கையிலேயே தியேட்டர்கள் கிடைக்கும்.

எனவே தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த பிரச்சினையில் தலையிட்டு சுமூகமான தீர்வை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இந்த படங்களுடன் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த வாட்ச்மேன், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி. ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு படங்களின் மோதல் உறுதியானால், பேட்ட படம் ஜனவரி 15ஆம் தேதியும் விஸ்வாசம் படம் ஜனவரி 10ஆம் தேதியும் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Petta and Viswasam movies clash on Pongal news updates

More Articles
Follows