சூர்யாவின் ‘எஸ் 3’ பட ரிலீஸ் தேதி உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சிங்கம் 3.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஓர் அறிமுக பாடல் உள்ளது-

இதன் கம்போஸிங்கை அண்மையில் முடித்துள்ளர்.

‘ஓ சோனி சோனி, சூப்பர் சோனிக்’ என்று இப்பாடல் தொடங்குகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

டிசம்பர் 16ஆம் தேதி இப்படத்தை உலகமெங்கும் மிகப்பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தேனாண்டாள் தயாரிக்கும் படத்தில் விஜய்-அட்லிக்கு பேசப்பட்ட சம்பளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கும் பைரவா படத்தை முடித்துவிட்டு அட்லி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ராமநாராயணனின் மகன் முரளி தயாரிக்கிறார் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு சம்பளமாக ரூ. 35 கோடி வரை பேசப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் அட்லிக்கு சம்பளமாக ரூ. 15 கோடி கொடுக்க இருக்கிறார்களாம்.

இதன் மூலம் ஷங்கர், முருகதாஸ் அவர்களின் அடுத்த இடத்தை அட்லி நெருங்கி விட்டார்.

ராஜா ராணி, தெறி ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள அட்லிக்கு தெறி படத்தில் சம்பளமாக ரூ. 3 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சூர்யா-35’ படத்திற்கு பாட்ஷா பட பன்ச் டயலாக் தலைப்பு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ் 3 படத்தை முடித்துவிட்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.

இது இவரது நடிப்பில் வளரும் 35வது படமாகும்.

அனிருத் இசையமைக்க, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் இப்படத்திற்கு ரஜினி நடித்த பாட்ஷா பட பன்ச் டயலாக் ஒன்றை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதில் வில்லன் ரகுவரனிடம் ‘இது தானா சேர்ந்த கூட்டம்’ என்று ரஜினி சொல்வார்.

இதையே டைட்டிலாக வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இது இந்தியில் வெளியான அக்ஷய்குமாரின் ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தழுவல் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘தெறி’யை துரத்தும் ‘கபாலி’; நெருங்குமா.? முடியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டை போன்றே கேரளாவிலும் ரஜினிக்கும் சரி, விஜய்க்கும் சரி ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர்களின் படங்கள் வெளியாகும் நாட்களில் ஒரிஜினல் மலையாளே படங்களை வெளியிட அங்குள்ள நடிகர்கள் தயங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் இதுவரை அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் குறித்த செய்திகள் கிடைத்துள்ளன.

விஜய் நடித்த ‘தெறி’ ரூ.16.52 கோடியை வசூலித்துள்ளதாம்.
ரஜினி நடித்த ‘கபாலி ரூ.16.15 கோடியையும், சூர்யா நடித்த ’24’ படம் ரூ.10.40 கோடியையும் வசூல் செய்துள்ளது.

தெறி வெளியாகி நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. கபாலி தற்போதுதான் இரண்டு மாதங்களை கடந்து என்பது குறிப்பிடத்தக்கது.

தெறி வசூலை கபாலி நெருங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அண்மையில் வெளியான விக்ரமின் ‘இருமுகன்’ ரூ.5.4 கோடியை வசூலித்து இன்னும் கேரளாவில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

சுவாதி கொலையாளி ராம்குமார் தற்கொலை; விஜய் பட இயக்குனர் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதன்பின்னர் கொலையாளி ராம்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை புழல் சிறையில் மின் ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டான்.

இதுகுறித்து விஜய்யின் சச்சின் பட இயக்குனர் ஜான் மகேந்திரன் தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது…

தெறி படம் போல் ராம்குமாருக்கு உண்மையாக நியாயம் கிடைத்ததா? அல்லது விசாரணை படம் போல் இது காவல் துறை செய்த வேலையாக இருக்குமோ? என மீம்ஸ் போட்டுள்ளார்.

இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

செப்டம்பர் 24; அஜித் ரசிகர்களுக்கு வேதாளம் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இவ்வருடம் அஜித் நடிப்பில் எந்த படங்களும் வெளிவராது.

தற்போது சிவா இயக்கும் தல 57 படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாகும் என கூறப்படுகிறது.

இதற்குமுன்பு, அதாவது கடந்த வருடம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைத்த படம் ‘வேதாளம்’.

இதில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு ஆடாத ரசிகர்களே இல்லை என்னுமளவுக்கு பெரும் ஹிட்டடித்தது.

இந்நிலையில் இப்படத்தின் இந்தி பதிப்பினை வருகிற செப். 24ஆம் தேதி சோனி மேக்ஸ் சேனலில் ஒளிப்பரப்ப இருக்கிறார்களாம்.

அப்போ இந்த சனிக்கிழமை தல ரசிகர்களுக்கு ஆலுமா டோலுமாதான்..

More Articles
Follows