BREAKING தம்பி தங்கைக்கு சூர்யாவின் அன்பான அட்வைஸ்; மீரா மிதுனுக்கு மறைமுக பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாகவே திரையுலகில் உள்ள பல நடிகர், நடிகைகள் கடுமையாக கேவலமாக விமர்சித்து வருகிறார் நடிகை மீரா மிதுன்.

சூர்யாவுக்கு ஆக்டிங் என்றால் என்னவென்றே தெரியாது. அவருக்கு நடிக்கவே தெரியாது என வசைபாடி இருந்தார். மேலும் விஜய் தந்தை

இதனால் விஜய், சூர்யா ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.

இதனையடுத்து நேற்று மீரா மிதுனுக்கு தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார் பாரதிராஜா.

மேலும் இதனை கண்டுக் கொள்ளாத நடிகர்கள் சங்கத்தையும் கண்டித்து இருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் சூர்யா தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்…

எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்..

இத்துடன் கடந்த 2018 ஜனவரி மாதம் 20ஆம் தேதி அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவையும் பகிர்ந்துள்ளார்.

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற #AnbaanaFans

Suriya reaction towards Meera Mithuns controversial speech

BREAKING டிசம்பர் வரை பள்ளி-கல்லூரிகள் மூடல் – மத்திய உயர் கல்வித்துறை செயலாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் 16ஆம் தேதியோடு மூடப்பட்டது.

இதனையடுத்து பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

தற்போது கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு 5 மாதங்கள் ஆன நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது என கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் காரே, “கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்றின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்கும் வாய்ப்பு குறைவு என மத்திய அரசு மதிப்பீடு செய்திருந்தாலும் zero academic year அறிவிக்கப்படாது.

டிசம்பர் மாதம் வரை ஆன்லைன், சமூக ரேடியோ, தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு அடுத்த 15 நாட்களுக்குள் வெளியாகும்.

மத்திய அரசின் சமீபத்திய தரவுகளின்படி, 416 கேந்திரிய வித்யாலயாக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்கின்றன. இதன் அடிப்படையிலே பள்ளிகளைத் டிசம்பர் மாதம் வரை திறக்க வேண்டாம் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதே நிலையில் மாநில பள்ளிகளைப் பொறுத்தவரையில், கொரோனாவின் தீவிரத்தைப் பொறுத்து, கல்வியாண்டு தொடங்கப்படும் போது அந்தந்த மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம் என மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Schools and Colleges will not be opened till December 2020

வனிதாவிடம் 1.25 கோடி கேட்கும் லட்சுமி.; லட்சுமியிடம் 2.50 கோடி கேட்கும் வனிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு சமயத்தில் தன் வீட்டிலேயே மிக எளிமையாக பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார் நடிகை வனிதா.

அது தொடர்பான வீடியோக்களையும் படங்களை இணையத்தில் வனிதா வெளியிட அதுவே சர்ச்சையானது.

மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவி இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க இந்த விவகாரம் விஸ்வரூபம் பெற்றது.

இதனையடுத்து வனிதாவை பலரும் விமர்சிக்க தொடங்கினர். முக்கியமாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்டவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இதற்கு அடிக்கடி தக்க பதிலடியும் கொடுத்து வந்தார் வனிதா.

நீ பேருக்கு ஒரு புருசன் வச்சிருக்க.. எத்தனை பேரு கூட நீ இருந்தன்னேன்னு எனக்கு தெரியாதா? என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா சரமாரியாக விமர்சித்தார்.

இதனையடுத்து தன்னை தரக்குறைவாக பேசியதாகக் குறிப்பிட்டு, வனிதா விஜயகுமார் மீது ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது வனிதாவும் லட்சுமியிடம் இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத் ஆஸ்பத்திரியில் அனுமதி.; இப்போ எப்படி இருக்கார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்கள் மூச்சுத் திணறல் காரணமாக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரின் தற்போதையே உடல்நிலை குறித்து அவரே பகிர்ந்துள்ளார்.

‘மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், எனக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் தான் நலமுடன் இருப்பதாகவும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பிவிடுவேன் எனவும் சஞ்சய் தத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய்-ஜூனியர் என்.டி.ஆர்-ஸ்ருதிக்கு சவால் விட்ட சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நல்ல விஷயத்தை பிரபலமாக்க பல பிரபலங்கள், தங்களுக்குள் மாறி மாறி ஒருவரை டேக் செய்து சவால்விடுவது வழக்கம்.

அதாவது வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, யோகா அல்லது உடற்பயிற்சி செய்வது உள்ளிட்டவற்றை செய்து அந்த வீடியோவை எடுத்து இணையத்தில் பதிவிட்டு சக நடிகருக்கு சவால் விடுவார்கள்.

இதனையடுத்து அந்த நடிகர் அந்த சவாலை ஏற்பாரா? என ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

அதுபோல தற்போது #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு படம் எடுத்து வெளியிட்டு மற்ற மூவருக்கு சவால்விட வேண்டும்.

இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு அவரது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றை வைக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியாது. இந்த #GreenIndiaChallenge சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன்.

இந்தச் சங்கிலி எல்லைகளைக் கடந்து தொடரட்டும். நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

அரசியலுக்கு வந்து பதவி கிடைச்சா தான் சேவையா..? – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

இவர் தன் அம்மாவுக்காக கோயிலும் கட்டியிருக்கிறார். மேலும் சமூக பணிகளுக்காக அறக்கட்டளை நிறுவி நடத்தி வருகிறார்.

இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் தத்தெடுத்து அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய ட்விட்டர் பதிவில்… “அரசியலுக்கு வந்து ஒரு பதவி பெற்று அதன் பிறகு ஏழைகளுக்கு நான் தொண்டு செய்வேன் என்று கூறி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு அதில் உடன்பாடில்லை.

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியாக சமூகத்திற்கு சேவை செய்வேன்.

அரசியலில் நுழையாமல் மக்களுக்கு தேவையான சேவைகளை செய்ய முடியும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நான் வெளியிட்ட வீடியோ எனது 12 வருட முயற்சி மற்றும் நம்பிக்கையின் சான்று. அந்த வீடியோவில் பல குழந்தைகளின் கனவு நனவாகியிருப்பதை நீங்கள் பார்க்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows