தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இது இவரது நடிப்பில் வளரும் 35வது படமாகும்.
அனிருத் இசையமைக்க, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில் இப்படத்திற்கு ரஜினி நடித்த பாட்ஷா பட பன்ச் டயலாக் ஒன்றை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதில் வில்லன் ரகுவரனிடம் ‘இது தானா சேர்ந்த கூட்டம்’ என்று ரஜினி சொல்வார்.
இதையே டைட்டிலாக வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் இது இந்தியில் வெளியான அக்ஷய்குமாரின் ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தழுவல் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
