ஜனவரியில் இருந்து தள்ளிப்போனது ரஜினியின் 2.0 ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் ரூ. 400 கோடியில் தயாரித்துள்ள படம் 2.0.

ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகிவிட்டன.

இந்த டிசம்பர் மாதம் டிரைலர் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ட்ரைலரை வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.

இப்படம் ஜனவரி 26, 2018ல் ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் இப்படம் ஏப்ரல் 2018க்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதனை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆனால் ஏப்ரல் மாதம் எந்த தேதி என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. ஏப்ரல் 2வது வாரம் அல்லது இறுதியில் இருக்கலாம் எனத் தெரிகிறது.

Super Star Rajinis 2point0 movie release postponed to April 2018

விஷால் எல்லாம் ரஜினியாக முடியுமா..? தமிழருவி மணியன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற டிசம்பர் 21ஆம் தேதி மறைந்த ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இங்கு அதிமுக, திமுக, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் திடீரென நடிகர் விஷாலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளதாவது…

விஷால் எல்லாம் ரஜினியாக முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Vishal cant become Rajinikanth says Tamilaruvi Manian

ரஜினி அரசியலுக்கு தயாராகிவிட்டார்; வருவது உறுதி : தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் விரைவில் அரசியல் களத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்க்கும் நிலையில், திடீரென ஆர்.கே. நகர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார் விஷால்.

இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் அவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது….

ரஜினிகாந்த் அரசியல் களம் காணவிருப்பது உறுதி. அவர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.” என தெரிவித்துள்ளார்.

Rajini confirmed his political entry He is working out says Tamilaruvi Manian

பிரபுதேவா-சத்யராஜ் இணைந்த களவாடிய பொழுதுகள் இம்மாதம் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுது திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது.

காதலின் வலியை அதன் அனுபவத்தை உணராத அதனை கடந்து செல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

காதலிக்கின்ற அனைவருக்கும் அது கை கூடுவதில்லை.

அழகி திரைப்படம் காதலிக்காதவர்களைக்கூட கலங்க வைத்தது போலவே களவாடிய பொழுதுகள் படமும் அனைவரின் மனதையும் கலங்க வைக்கும் படைப்பாக உருவாகி இருக்கிறது.

இக்கதையை படித்து முடித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து தன் வாழ்நாளில் இதுவரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன் என பிரபுதேவா மெய் சிலிர்க்கிறார்.

அதேபோல் என்றும் மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ் ராஜ் மிக அதிகமான நாட்களை ஒதுக்கி நடித்திருக்கிறார். அதேபோல் பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. ஏற்றுக்கொண்ட ஜெயந்தி என்னும் பாத்திரமாகவே மாறி அவர் வாழ்ந்திருக்கிறார்.

இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்யராஜ்,கருப்பு ராஜா,சத்தியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒரு பாடலை அறிவுமதியும்,மற்ற நான்கு பாடல்களை வைரமுத்துவும் எழுயுள்ளனர்.இசையமைப்பு பரத்வாஜ், கலை கதிர், படத்தொகுப்பு பி.லெனின் மற்றும் பிரேம் கையாண்டுள்ளனர்.

காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம்.

காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறேன் என்கிறார் தங்கர் பச்சான்.

தரமான படங்களையும், பல வெற்றிப்படங்களையும் தந்த ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தனது படங்களிலேயே மிகவும் தனக்குப் பிடித்த படம் என தயாரிப்பாளர் கருணாகரன் பெருமையுடன் சொல்கிறார்.

Kalavaadiya Pozhuthugal movie release plan on Dec 2017

கமல்-ரஜினிக்கு முன்பே அரசியலில் விஷால்; அதிமுக-திமுகவுக்கு போட்டி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 20 வருடங்களாக நான் எப்போ வருவேன்? எப்படி வருவேன்? என தன் அரசியல் பற்றிய கருத்துக்களை கூறிவந்தார் ரஜினிகாந்த்.

அடுத்த வருடம் 2018ல் இவர் கட்சி ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது.

கமல் தன் அரசியல் களத்தை உறுதிசெய்து விட்டு, தன் அரசியல் பணிகளை கவனித்து வருகிறார். ஜனவரியில் கட்சி பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் விஷால் திடீரென் தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் விஷால்.

வருகிற டிசம்பர் 4ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யவிருக்கிறாராம்.

இவருடன் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?

நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மனுதாக்கல் செய்தனர்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

Actor Vishal to contest RK Nagar bypoll

கலைப்புலி தாணுக்கு விஜய்யுடன் துப்பாக்கி; விக்ரம்பிரபு உடன் துப்பாக்கி முனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி, தெறி படங்களை தன் மகன் இயக்கத்தில் இந்திரஜித் படத்தை தயாரித்தார் கலைப்புலி தாணு.

இப்படம் அண்மையில் ரிலீஸ் ஆகி தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தன் அடுத்த படத்தையும் ஆரம்பித்துவிட்டார் தாணு.

இப்படத்திற்கு துப்பாக்கி முனை என்று பெயரிட்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் ‘துப்பாக்கி’ படத்தை தயாரித்திருந்தார். தற்போது துப்பாக்கி முனை என்று பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார்.

இந்திரஜித் புகழ் ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார். புவன் சீனிவாசன்
எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, அன்பறிவ் சண்டைப் பயிற்சிகளை கவனித்துக் கொள்கின்றனர்.

இன்று ‘துப்பாக்கி முனை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் படத்தின் நாயகி யார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

2014 வெளியான விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தையும் தயாரித்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram Prabu teams up with Kalaipuli Thanu for Thuppaki munai

More Articles
Follows