ரஜினிக்கு அடுத்து விஜய்யை தேர்ந்தெடுத்த சன் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி உலகில் இந்தியளவில் பிரபலமான நிறுவனம் சன் டிவி.

இந்த நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற படத்தை விநியோகம் செய்து திரையுலகில் காலடி வைத்தது.

அதனைத் தொடர்ந்து விஜய் நடித்த வேட்டைக்காரன் மற்றும் சுறா, அஜித் நடித்த மங்காத்தா, சூர்யா நடித்த அயன் உள்ளிட்ட 23 படங்களை சன் பிக்சர்ஸ் விநியோகம் செய்துள்ளது.

ஆனால் அந்நிறுவனம் தயாரித்த ஒரே படம் ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவான எந்திரன் தான். இப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது.

தற்போது 7 வருடங்களுக்கு பிறகு விஜய், ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி62 படத்தை தயாரிக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures selected Vijay after Rajinikanth

ரஜினி-ரஞ்சித் படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2.0 படத்தை முடித்துவிட்டு தனது அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

தனுஷ் தயாரித்து, ரஞ்சித் இயக்கவிருக்கும் இதன் சூட்டிங் மே 28ஆம் தொடங்கவுள்ளது.

இதில் ரஜினியின் ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷிமா நடிக்கிறார்.

இப்படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இடம்பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே, Life of Pi படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவரும், பாகுபலி-2 படத்தில் VFX பணிகளை செய்தவருமான பெட்டா டிராப்பர் இணைகிறாராம்.

Oscar award Winner joins with Pa Ranjith in Thalaivar Rajini movie

கமலுக்கு பிடிக்காத அந்த 3 விஷயங்கள் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல், முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.

தற்போது இதற்கான போட்டோ சூட் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி பிஆர்ஓ ஆன நிகில் முருகன் அவர்கள் கமலுடன் பணியாற்றிய அனுபவங்களை தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது…

கமல் அவர்களுக்கு மூன்று விஷயங்கள் பிடிக்காது. அவை

  1. என்னால் முடியாது
  2. இது ரொம்ப கஷ்டம்
  3. இதற்கு ரொம்ப செலவு ஆகும் என்பவைதான்.

அவரிடம் இதை யாரும் சொல்லக்கூடாது.

நாம் முயன்று செய்யமுடியாமல் தோற்றால் சரி. ஆனால் எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு இப்படி கூறினால் அவருக்கு பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.

Do you know which 3 things Kamal doesnt likes?

தனுஷுக்காக புரொமோ சாங் பணியில் சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு உடன் இணைந்து தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2.

சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சீன்ரோல்டான் இசையமைத்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனை தனுஷ் பிறந்தநாளான ஜீலையில் 28இல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் விளம்பரத்திற்காக ஒரு புரொமோசன் பாடல் ஒன்றை மும்பையில் படமாக்கவிருக்கிறார்களாம்.

அதில் தனுஷ் மற்றும் கஜோல் ஆட, டியோ பாஸ்கோ நடன அமைக்கிறார்.

Soundarya Rajini making promo song for Dhanushs VIP2

ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு; ஆச்சரியமளிக்கும் சுவாரஸ்ய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 15ஆம் தேதி முதல், தன் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

இன்றுடன் நான்கு நாட்கள் ஆகியுள்ளது. அந்த சந்திப்பின் நடந்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே பதிவிடுகிறோம்.

எல்லா ரசிகர்களுக்கும் பார் கோடு கொண்ட அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காலை முதலே வந்துவிடுகின்றனர்.

ரசிகர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சேர்களில் மட்டுமே அவர்கள் அமர அனுமதிக்கப்படுகின்றனர்.

மண்டபத்திற்குள் வந்தபிறகு வெளியே செல்ல அனுமதியில்லை.

சில ரசிகர்கள் ரஜினியிடம் காதோரம் ரகசியம் சொல்கின்றனர்.

அதனை ஆர்வமுடன் கேட்டுக் கொள்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினியை பார்த்தும் அவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆர்ப்பரிக்கின்றனர்.

தலைவா வா, தலைமையேற்க வா.. வருங்கால முதல்வர் என்று கோஷமிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ரசிகருடன் ஒரு குழந்தை வர அனுமதி தரப்பட்டுள்ளது.

குழந்தைகளை ஆரத்தழுவி தன் மடியில் வைத்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

சில ரசிகர்கள் நின்றுக் கொண்டும், சில ரசிகர்கள் உட்கார்ந்துக் கொண்டும், சில ரசிகர்கள் ரஜினியை தொட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

சில ரசிகர்கள் தன்னுடன் கொண்டு வரும் மோதிரம், செயின், வாட்ச், ருத்ராட்சை மாலை ஆகியவற்றை ரஜினியிடம் கொடுத்து அணிவிக்க சொல்கின்றனர். அவரும் அசராமல் செய்து வருகிறார்.

ஒவ்வொரு ரசிகர்கள் மேடைக்கு வரும்போது அவர்களை இன்முகத்துடன் இருகரம் கூப்பி வரவேற்கிறார்.

சில ரசிகர்கள் ஆர்வமிகுதியால் ரஜினி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுகின்றனர். காலில் விழக்கூடாது என முன்பே தெரிவித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.

சந்திப்பின் போது அறுசுவை உணவுகள் தரப்படுகிறது.

 

‘என் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது; ஆனால்…’ ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த நான்கு நாட்களாக தன் ரசிகர்களை ரஜினிகாந்த், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார்.

இதற்காக மாவட்டதோறும் உள்ள நிர்வாகிகள் சென்னைக்கு வந்துள்ளனர்.

இன்று தஞ்சை, கடலுர் மாவட்ட ரசிகர்கள் வந்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்து ரஜினி பேசியதாவது….

என் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதே தவிர அவர்களது உற்சாகம் அந்த துடிப்பு குறையவில்லை.

அவர்களை சந்தித்து வருவது இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

தீய பழக்கங்கள் இல்லாமல் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வளவு சீக்கிரம்இந்த சந்திப்பு முடிகிறதே என நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.

அடுத்த சந்திப்பு விரைவில் நடைபெறும். அதற்கான தேதியை பின்னர் அறிவிப்போம். என்று ரஜினிகாந்த பேசினார்.

அரசியல் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

Superstar Rajinikanth open talk about his fans meeting

More Articles
Follows