ரஜினியின் மகன்களாக நடிக்கும் பாபி சிம்ஹா-சனந்த் ரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் காலா மற்றும் 2.0 என இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இதில் காலா படம் வருகிற ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் ஜூன் 4-ம் தேதி டேராடூனில் தொடங்கவுள்ள நிலையில் 200 பேர் கொண்ட குழுவினர் விரைவில் அங்கு புறப்பட உள்ளனர்.

இதில், ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மெர்க்குரி படத்தில் நடித்தவர்தான் சனந்த் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Sun Pictures and Rajinikanth new project movie updates

மே-28ஆம் தேதி முதல் ராஜ் டிவியில் 5 புதிய மெகா சீரியல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஐந்து வருடங்களாக சின்னத்திரை உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் கோலோச்சி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தான்.

ஸ்ரீ பாரதி குரூப்பின் ஒரு அங்கமான இந்த நிறுவனம் சின்னத்திரையில் மக்கள் விரும்பும் ஜனரஞ்சகமான நெடுந்தொடர்களை தயாரித்து ராஜ் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி, ரேடியோ மிர்ச்சி என முக்கிய சேனல்களில் ஒளிபரப்பி வருகிறது..

இந்த நிறுவனம் தயாரித்துள்ள ‘உறவுகள் சங்கமம்’ மெகா தொடர், சீரியல் வரலாற்றிலயே முதன்முறையாக அதிகப்படியான (40) முன்னணி நடிகர்கள் நடிக்கும் தொடர் என பெயர் பெற்றுள்ளதுடன் 236 எபிசோடுகளை தொட்டுள்ளது.

அந்தவகையில் தனது பொழுதுபோக்கு தயாரிப்புகளை கொண்டு மக்களை மகிழ்வித்துவரும் ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மூலம் 998 எபிசோடுகளை எட்டிவிட்டது.

தனது 1000வது எபிசோடு என்கிற மிகப்பெரிய மைல்கல்லை வரும் மே-28ஆம் தேதி எட்டவுள்ளது. அந்தநாள் வெறுமனே ஒரு சாதாரண நாளாக கடந்துபோகப்போவதில்லை.

ஆம்.. இன்னும் புதிய ஐந்து மெகா தொடர்களை தயாரித்துள்ள ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம், அதேநாளில் இந்த தொடர்களை ராஜ் டிவியில் ஒளிபரப்ப ஆரம்பிக்க இருக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்டான அம்சமே.

கண்ணம்மா, ஹலோ சியாமளா, நலம் நமறிய ஆவல், கடல் கடந்து உத்தியோகம், கங்காதரனை காணோம் என்கிற இந்த ஐந்து நெடுந்தொடர்களுக்கான அறிமுக விழா சென்னை சோழா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஸ்ரீ பாரதி அசோசியேட் சேர்மன் திரு.டி.ஆர்.மாதவன், ராஜ் டிவி நிர்வாக இயக்குனர்கள் ராஜேந்திரன், ராஜரத்தினம், ரவீந்திரன், ரகுநாதன் மற்றும் இந்த தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர்..

இவை ஐந்தும் ஐந்துவிதமான கதையம்சம் கொண்ட தொடர்களாக உருவாகி வருகின்றன. இதில் கண்ணம்மா தொடர், ஒரு பெண் தான் பிறந்தது முதல் வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வர போராடுகிறாள் என்பதை பற்றியது..

ஹலோ சியாமளா தொடரில் நான்கு பெண்களை பெற்ற தாய் ஒருத்தி, அவர்களுக்கு ஒரேநாளில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும் சமயத்தில் திடீரென கர்ப்பமாவதால் உண்டாகும் கலாட்டாக்களை காமெடியாக சொல்ல இருக்கிறது.

இரண்டு நண்பர்களை பற்றிய கதையாக ‘நலம் நலமறிய ஆவல்’ தொடர் உருவாகிறது.

குடும்பத்தை பிரிந்து வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்போரின் வாழ்க்கையையும் வலியையும் பறைசாற்ற வரவிருக்கிறது ‘கடல் கடந்து உத்தியோகம்’ தொடர்..

ஒரு தந்தை தனது பிள்ளைகளால் எப்படி எமோஷனலாக பாதிக்கப்படுகிறார் என்பதை ‘கங்காதரனை காணோம்’ தொடர் வெளிச்சம்போட்டு காட்டவுள்ளது..

இவை அனைத்தும் வரும் மே-28ஆம் தேதியில் ஆரம்பித்து. திங்கள் முதல் வியாழன் வரை இரவு ஏழு மணியில் இருந்து அரை மணி நேர தொடர்களாக அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த தொடர்கள் தவிர கூடிய விரைவில் 2 மாதங்களுக்கு ஒரு புராணம் என்கிற வகையில் ஒவ்வொன்றும் 8 எபிசோடுகளை கொண்ட புராண தொடர்களும் ஒளிபரப்பாகும் வகையில் ஸ்ரீ பாரதி அசோசியேட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

From 28th May Raj TV going to telecast 5 new mega serials

சிவகார்த்திகேயன் படத்திற்கு பயிற்சி தரும் ஆஸ்திரேலிய வீரர் டேவ் வாட்மோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் படம் கனா.

இதில் பெண்கள் கிரிக்கெட் ப்ளேயராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.

ஒரு வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களை சாதாரண பெண் எப்படி வென்று காட்டுகிறார்? என்பதே இப்படத்தின் கதை.

இப்படத்திற்கு கிரிக்கெட் தொடர்பான பயிற்சிகளை கொடுக்கிறாராம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான டேவ் வாட்மோர்.

இவரிடம்தான் பயிற்சியும் ஆலோசனையும் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Sivakarthikeyans maiden production movie Kanaa updates

விக்ரம் பிரபுவை இயக்கும் விஜய் ஆண்டனியின் சூப்பர் ஹிட் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சலீம்’. இப்படத்தை நிர்மல் குமார் என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றாலும் இப்படத்திற்குப் பிறகு நிர்மல் குமார் எந்தப் படத்தை இயக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

தற்போது, ‘அசுரகுரு’, ‘துப்பாக்கி முனை’ படங்களில் நடித்து வருகிறார் விக்ரம் பிரபு.

இப்படங்களை முடித்துவிட்டுதான் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிப்பார்.

Salim fame Nirmal kumar directes Vikram Prabu

தொடர் தோல்வி படங்களால் ஷாம்லி கவலை; அஜித் காப்பாற்றுவாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஷாம்லி.

இவரின் அக்கா ஷாலினி நடிகர் அஜித்தின் மனைவி என்பது தங்களுக்கு தெரியும்தானே..

குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கிய ஷாம்லி தற்போது நாயகியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வீரசிவாஜி படம் மூலம் அறிமுகமானார். அந்த படம் படு தோல்வியை சந்தித்தது.

அண்மையில் நாகசவுரியாவுடன் ஷாம்லி நடித்த அம்மம்மாகரிலு என்ற தெலுங்கு படமும் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இது ஷாம்லிக்கு பெரும் கவலையை உண்டாக்கியுள்ளதாம்.

இனி தல அஜித் அவரது படத்தில் கைகொடுத்தால்தான் உண்டு என நலம் விரும்பிகள் கூறி வருகின்றனர்.

தல என்ன செய்வார் என்பதை பார்ப்போம்.

Actress Shamili and her movie updates

சந்தானத்திற்கு உள்ள தைரியம் எனக்கில்லை.. – சதீஷ் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காமெடி நடிகர்கள் விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து சூரி, சதீஷ் ஆகியோரும் விரைவில் நாயகர்களாக நடிப்பார்கள் என எதிர்பார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் காமெடியன் சதீஷ் தமிழ்படம் 2.0 படத்தில் மெயின் வில்லனாக நடித்து வருகிறாராம்.

இதுபற்றி சதீஷ் கூறியதாவது…

’நான் அறிமுகம் ஆனதே சிஎஸ். அமுதன் இயக்கிய தமிழ் படம் பாகம் 1 இல் தான்.

இப்போது இதன் 2ஆம் பாகத்தில் வில்லனாக நடிக்கிறேன்.

இதில் எனக்கு 15 கெட்டப்கள் இருக்குது. இந்த படம் எனக்கு மட்டும் அல்ல சிவாவுக்கும் நல்ல பெயரை வாங்கித் தரும்.

ஆனால் நான் ஹீரோவாக நடித்து மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்க விரும்பவில்லை.

சந்தானத்தை எடுத்துக்கொண்டால் அவர் ஹீரோ ஆவதற்கான தகுதிகளை வளர்த்து பின் ஹீரோ ஆனார்.

உடலை குறைத்து சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்தார். அதுதான் சரியான வழி. எனக்கு அந்த தைரியம் இல்லை.” என்றார்.

Comedian Sathish going to as Villain in Tamilpadam 2point0

More Articles
Follows