ஜோதிகாவின் “காற்றின் மொழி” படத்திற்காக டப்பிங் பேசிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி ‘ படத்தில் நடிகர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

நேற்று இப்படத்திற்கு சிம்பு டப்பிங் பேசி முடித்தார். பெரும் எதிர்பார்புக்குள்ளான இப்படத்தில் ஜோதிகா நடிக்க பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளார்கள் .

இப்படத்தில் FM ரேடியோ ஷோ ஒன்றில் கதாநாயகி ஜோதிகாவுடன் திரைப்பட நட்சத்திரமாக சிம்பு தோன்றுவது போல் காட்சி இடம் பெறுகிறது.

அவர் வரும் சீன்களை கேட்டதும் சிம்புவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. அவர் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. கண்டிப்பாக நடிக்கிறேன் என்று நடித்துக்கொடுத்தார் சிம்பு.

டப்பிங் பேசி முடித்த சிம்பு தன்னுடைய காட்சி சிறப்பாக வந்துள்ளதாக என்னை அழைத்து கூறினார். அவர் இந்த படத்தில் பணியாற்றியது படத்துக்கு பெரிய பலம். அவருக்கும் இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்றார் தாயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

காற்றின் மொழி போஸ்ட் புரொடக்சன் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வருகிற அக்டோபர் 18 ஆயுத பூஜை சிறப்பு வெளியீடாக வெளியாகவுள்ளது இத்திரைப்படம். அக்டோபர் 18 நாயகி ஜோதிகாவின் பிறந்த நாள் என்பது கூடுதல் தகவல்.

STR dubs for his portions in Jyotika starrer Kaatrin Mozhi

சூர்யாவை சுற்றி வளைத்து ராஜு பாய் என கோஷமிட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனின் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் வைத்து நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யா பங்குபெற்று நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் வேகமாக அங்கு படமாக்கப்பட்டு வருகிறது.

சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டதிலிருந்து. அங்குள்ள ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

நேற்று சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ரசிகர்கள் கேரவனில் இருந்து வெளியே வந்த சூர்யாவை சூழ்ந்தனர்.

சூர்யாவை சூழ்ந்து ராஜு பாய், சூர்யா என்று கோஷங்கள் எழுப்பிய வண்ணம் அவருக்கு அன்பு வரவேற்பு அளித்தனர்.

சூர்யாவும் அவர்களுக்கு கையசைத்து அவர்களின் அன்பை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

தெலுங்கில் தமிழுக்கு நிகராக சூர்யாவுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. அவரை நேற்று ரசிகர்கள் சூழ்ந்து கோஷங்கள் எழுப்பியது ஏதோ தமிழ் நாட்டில் நடக்கிறதா ? அல்லது ஆந்திராவில்லா ? என்று ஒரு யோசிக்க வைத்தது என்று தான் கூறவேண்டும்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் சூர்யாவின் என்ஜிகே திரைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க ட்ரீம் வாரியார் பிச்சர்ஸ் S.R. பிரகாஷ் பாபு , S.R. பிரபு தயாரிக்கிறார்கள்.

Suriya fans crowd Rajamundry at NGK shooting

இந்தியாவின் பொக்கிஷம் பிரபுதேவா..; லக்‌ஷ்மி-யை பார்த்த பாரதிராஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணக்கு மற்றும் விமர்சகர்களின் தரவரிசைகளுக்கும் அப்பால் உள்ள மிகப்பெரிய வெற்றி என்பது மிகப்பெரிய மனிதர்களின் மனதிலிருந்து வரும் பாராட்டுகள் தான். பிரபுதேவாவின் லக்‌ஷ்மி படத்தின் மொத்த குழுவும், இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பாராட்டு மழையில் நனைந்து இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இது வெறும் ஒரு வாய்மொழி குறிப்பு இல்லை. சென்னை பிரிவியூ திரையரங்கில் பாரதிராஜா ‘லக்ஷ்மி’ திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டு மகிழ்ந்தபோது மொத்த குழுவும் உணர்ச்சிவயப்பட்டு இருந்தது.

படத்தின் கடைசி டைட்டில் கிரெடிட்ஸ் முடிவடையும் முன்பே எழுந்து நின்று, இயக்குனர் விஜய் மற்றும் பேபி தித்யா பாண்டே தோள்களை தட்டி கொடுத்து ஆச்சரியப்பட்டார். “நீங்கள் இந்தியாவின் பெருமை” என்று கூறியதோடு, இந்த படத்தில் நடித்த அத்தனை குழந்தைகளையும் பாராட்டினார். “இந்த குழந்தைகள் வேறும் நடனத்தில் மட்டுமல்லாமல், அவர்களது ஆழ்ந்த நடிப்பாலும் அபாரமான திறமை உடையவர்கள் என்று நிரூபித்திருக்கிறார்கள். சின்ன சின்ன முக பாவனைகளில் கூட நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என்றார்.

இயக்குனர் விஜய் மற்றும் பேபி தித்யா ஆகிய இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. பின்னர் தொலைபேசி அழைப்பில் பிரபுதேவாவிடம் பேசிய அவர் மேலும் உணர்ச்சிபூர்வமாக பேசினார். “வார்த்தைகளை கோர்த்து எவ்வாறு உங்களை பாராட்டுவது என்பது எனக்குத் தெரியவில்லை, நீ இந்தியாவின் பொக்கிஷம்” என்றார்.

நேற்று (ஆகஸ்ட் 24) உலகம் முழுவதும் வெளியாகிய லக்‌ஷ்மி பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் உடன் இணைந்து ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் பிலிம்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். விஜய் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சல்மான் யூசுப் கான், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் (இசை) மற்றும் நிரவ் ஷா (ஒளிப்பதிவு) ஆகியோர் படத்தின் மிகவும் வலுவான தூண்கள்.

*பக்ரீத்* படத்துக்காக ஒட்டகத்துடன் பயணிக்கும் விக்ராந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“M10 PRODUCTION” சார்பில் சிவா மற்றும் சந்தானம் நடித்த “யாயா” திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் M.S.முருகராஜ், இரண்டாவது படைப்பாக “பக்ரீத்” திரைப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை “சிகை” மற்றும் “பட்சி” ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் விக்ராந்தும், நாயகியாக நடிகை வசுந்தராவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

“விவசாயம் செய்வதை பெருமையாக நினைத்து, இக்கட்டான சூழ்நிலையிலும் விவசாயத்தை மேற்கொள்கிற முயற்சியிலிருக்கிற நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த ஒருவனின் வாழ்க்கையில் ஒரு ஒட்டகம் திடீரென நுழைகிறது. அந்த ஒட்டகத்தினால் அவனது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் அதனால் அவன் மேற்கொள்ளும் நெடுந்தூர பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும் அதனால் ஏற்படும் திருப்புமுனைகளுமே “பக்ரீத்” படத்தின் கதை என்கிறார் இயக்குநர் ஜெகதீசன் சுபு.

மேலும், இந்தியா முழுவதும் பயணிக்கும் இப்படத்தில், அந்தந்த ஊர் பழக்க வழக்கங்கள் மற்றும் அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையை இயல்பாக பதிவு செய்யவிருப்பதாக கூறுகிறார் இயக்குநர். இதற்காக சென்னை, ராஜஸ்தான், கோவா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு தடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளர்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பணியை முன்னணி படத்தொகுப்பாளர் ரூபன் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக மதன் பணியாற்றுகிறார்.

அதர்வா போன்ற ஒரு நடிகர் கிடைப்பது பேரின்பம்; *பூமராங்* கண்ணன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இடைவிடா தொடர்ச்சியான அடுத்தடுத்த அறிவிப்புகளுடன் அதர்வாவின் சீசன் தற்போது நீண்டிருக்கிறது. அவரது மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘பூமராங்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தயாரிப்பாளர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கண்ணன் இயக்கிய திரில்லர் திரைப்படம் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறது. இந்த படம் ஆரம்பம் முதல் இந்த நிலை வரை மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு தனது குழுவினர் தான் காரணம் என பாராட்டுகிறார் இயக்குனர் கண்ணன்.

“சரியான திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துக்கு திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை பாராட்டுவது என்பது ஒரு வழக்கமான முன்னுதாரணம் ஆகும். ஆனால் என்னை பொறுத்தவரை, ‘பூமராங்’ படத்தின் மொத்த குழுவும் இந்த பாராட்டுக்கு தகுதியானவர்கள். என்னைப் பற்றிய அவர்களுடைய உறுதியான நம்பிக்கை தான் இந்த படம் சுமூகமாக முடிய காரணம். அவர்கள் மட்டும் இல்லாவிட்டால், இந்த பூமராங் திட்டமிடப்பட்டபடி குறித்த நேரத்துக்குள் முடிந்திருக்காது” என்றார்.

நடிகர்களின் உற்சாகமான ஈடுபாடு குறித்து அவர் கூறும்போது, “அதர்வாவை போன்ற ஒரு நடிகரை கண்டுபிடிப்பது எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஒரு உண்மையான பேரின்பம். அந்த வகையில், ஒரு இயக்குனர், தயாரிப்பாளராக நான் மகிழ்ச்சியை ஈட்டியுள்ளேன். படத்தின் நாயகிகள் மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோர் ஒவ்வொரு ஃபிரேமிலும் மேம்பட்ட நடிப்பை அளிக்கும் அளவுக்கு அக்கறை காட்டினர். உபென் படேல் ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமாக நடிப்பை வழங்கினார்.

இயக்குனர் கண்ணன் மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் இந்த பூமராங் படத்துக்கு அர்ஜுன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்ய ஆர்.கே. செல்வா எடிட்டிங்கை கையாள்கிறார். மேகா ஆகாஷ், இந்துஜா, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல், சதீஷ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சமந்தாவின் யு-டர்ன் கூட்டணியில் இணைந்தது ஏன்..? – தனஞ்செயன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“யு டர்ன்”படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே இந்த படத்தில் சமந்தாவின் பங்களிப்பு மிக மிக பெரிதாக இருக்கும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு. சமீபத்திய டிரெய்லர்களில் நாம் பார்த்தபோது ஒரு அற்புதமான படமாக ‘யு-டர்ன்’ வந்திருப்பது தெரிகிறது. இது மொத்த குழுவுக்கும் கிடைத்த ஒரு மிகப்பெரிய வரம்.

கிரியேட்டிவ் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன் யு-டர்ன் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறார்.

இந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ள ஜி தனஞ்செயன் இது குறித்து கூறும்போது, “எங்கள் நிறுவனமான BOFTAல் எப்போதும் உலகளாவிய பார்வையாளர்களுக்கான தரமான படங்களை எடுக்க ஆர்வமாக உள்ளோம். யு-டர்ன் தயாரிப்பாளர்களுடன் வியாபார ரீதியில் இணைந்தது நிச்சயமாக BOFTAக்கு மிகப்பெரிய சாதனையாகும். குறைந்த காலத்திலேயே யூடியூபில் அதிக பார்வையாளர்களை கொண்ட இந்த படத்தின் சிறப்பான ட்ரைலர் முதல், இந்த படம் சம்பந்தப்பட்ட எல்லாமே ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை கொண்டது. புதுமையான அணுகுமுறையுடன் இந்தத் திரைப்படத்தை முன்னெடுத்துச் செல்ல சிறந்த முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர்களான ஸ்ரீனிவாச சித்தூரி (ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்) மற்றும் ராம்பாபு பண்டாரு (ஒய்.வி கம்பைன்ஸ் மற்றும் BR8 கிரியேஷன்ஸ்) ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி கூறும்போது, “இந்த திரைப்படத்திற்காக தனஞ்செயன் போன்ற ஒரு அனுபமிக்க தயாரிப்பாளருடன் இணைந்தது எங்களுக்கு ஒரு பெரிய கௌரவம். அவரது திரைப்படங்களை மேம்படுத்துவதற்காக புதுமையான வழிமுறைகளை கண்டுபிடிப்பதற்கான ஒரு உத்வேகம் அவர். அவரிடம் இருந்து இந்த ” யு-டர்ன்” படத்தை சிறந்த முறையில் கொண்டு சேர்க்க கூடுதலாக விஷயங்களை பெறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றார். தயாரிப்பாளர் ராம்பாபு பண்டாரு கூறும்போது, “நாங்கள் மொத்த குழுவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். தனஞ்செயன் அவர்களின் புதுமையான அணுகுமுறை அவரது மிகப்பெரிய யு.எஸ்.பி. அது இப்போது எங்கள் படத்துக்கும் கிடைத்ததை மதிப்புமிக்க தருணமாக நினைக்கிறேன்” என்றார்.

சமந்தா, ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன் மற்றும் பூமிகா சாவ்லா நடித்துள்ள மர்ம திரில்லர் படம் தான் ‘யு-டர்ன்’. பூர்ணசந்திர தேஜஸ்வி (இசை), சிங்க் சினிமா (ஒலி), பீம் (வசனம்), சுரேஷ் ஆறுமுகம் (எடிட்டிங்) நிகேத் பொம்மி (ஒளிப்பதிவு) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியிருக்கிறது.

More Articles
Follows