ஸ்ரேயா ரெட்டியின் ‘அண்டாவ காணோம்’ ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

தயாரிப்பாளர் ஜேஎஸ்கே தயாரிப்பில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள படம் ‘அண்டாவ காணோம்’.

வேல்மதி இயக்கியுள்ள இப்படம் தயாராகி பல மாதங்கள் ஆனாலும் இதன் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.

தற்போது கொரோனா பரவல் உள்ளதால் தியேட்டர்களும் மூடப்பட்டது.

இதனையடுத்து ஜே.எஸ்.கே. பிரைம் மீடியா என்கிற ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்தார் தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார்.

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதாவது… அவுட் டோர் யூனிட் நிறுவனம் நடத்திவரும், சங்கையா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில்… பட தயாரிப்புக்காக அவுட்டோர் யூனிட் உபகரணங்களை சப்ளை செய்ததாகவும், அதேபோல் தயாரிப்பாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடனும் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வாடகை மற்றும் கடன் தொகையை அவர் உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்பதால் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும், தனக்கு அளிக்க வேண்டிய கடன் பாக்கியை திருப்பி தர உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் ‘அண்டாவ காணோம்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இதையடுத்து ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என பட தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஸ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

For unavoidable reasons #Andavakaanom we have post ponded the release on 28th August soon after resolving issues will announce date

கே.ஜி.எஃப் 2 படத்தில் யஷ் உடன் இணைந்தார் பிரகாஷ்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள படங்களை போல கன்னட திரைப்படங்கள் குறித்து பலரும் அறிவதில்லை.

ஆனால் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கன்னட படங்களில் மிக முக்கியமானது கே.ஜி.எஃப் திரைப்படம்.

இப்படம் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த படத்தில் யஷ் என்பவர் நாயகனாக நடித்திருந்தார்.

படம் வெளியான 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

முதல் பட ரிலீசின் போதே இதன் 2ஆம் பாகம் அறிவிப்பும் வெளியானது.

தற்போது கே.ஜி.எஃப் படத்தின் 2ஆம் பாகத்தில் அதிரா பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

கொரோனா ஊரடங்கால் இப்பட சூட்டிங் தடைப்பட்டது.

தற்போது அப்பட சூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் பிரகாஷ்ராஜூம் இணைந்துள்ளார்.

அவர் கலந்துக் கொண்ட சூட்டிங் ஸ்பாட் போட்டோவும் தற்போது வைரலாகி வருகிறது.

ஆன்லைன் சூதாட்டம்: விராட் கோலி-தமன்னாவை கைது செய்ய வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரியும், அதை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டதிற்கு அடிமையானதால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து ஆன் லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் மெட்ராஜ் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் வெளியிட்டு இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக அந்த மனுவில் கூறியிருந்தார்.

சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ப்ளூவேல் விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்தனர் என்றும் அதற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவன விளம்பரத்தில் நடித்த விராட் கோலி, தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக மூன்று வாரங்களில் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

கடவுள் நம்பிக்கையில்லை..; விநாயகர் சிலைக்கு உதயநிதி விளக்கம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சிலை படம் ஒன்றை பதிவிட்டார்.

இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையானது.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கட்டிக்காத்த பகுத்தறிவு (நாத்திகம்) கொள்கையை உதயநிதி மோசம் செய்துள்ளதாக சர்ச்சையானது.

இந்த நிலையில் இதுகுறித்து உதயநிதி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய பாசிச பாஜக மற்றும்‌ மாநில அடிமை எடுபிடி அரசுகளின்‌ மக்கள்‌ விரோத நடவடிக்கைகள்‌, ஊழல்கள்‌ குறித்து நான்‌ பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள்‌ தற்போது பிள்ளையார்‌ சிலையின்‌ புகைப்படத்தைப்‌ பகிர்ந்ததைப்‌ பரபரப்பாக விவாதிக்கிறார்கள்‌. நாட்டில்‌ எவ்வளவோ பிரச்சினைகள்‌ இருக்கும்போது அதையெல்லாம்‌ விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாகக்‌ கயிறு திரிப்பதைப்‌ பார்க்கையில்‌, இங்கு எது நடந்தாலும்‌ அதைக்‌ கழகத்துக்கு எதிரானதாகத்‌ திசைதிருப்பும்‌ சந்தர்ப்பவாதிகளின்‌ சதி வேலைகளைப்‌ புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு விஷயத்தை இங்கே நான்‌ தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌.

எனக்கோ, என்‌ மனைவிக்கோ கடவுள்‌ நம்பிக்கை கிடையாது. ஆனால்‌ என்‌ தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும்‌ அறிவர்‌. எங்கள்‌ வீட்டில்‌ ஒரு பூஜை அறையும்‌ உண்டு.

அதில்‌ எங்கள்‌ மூதாதையர்களின்‌ உருவப்‌ படங்கள்‌ உள்ளன. மேலும்‌ என்‌ தாயார்‌ நம்பும்‌ சில கடவுள்‌ படங்களும்‌ உண்டு. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின்‌ படங்கள்‌ முன்‌ நின்று அவர்களை மனதில்‌ நினைத்துவிட்டு செய்வது எங்கள்‌ வழக்கம்‌.

பிள்ளையார்‌ சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார்‌ சிலையை வாங்கியிருந்தார்‌. அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என்‌ மகள்‌, “இந்த சிலையை எப்படி செய்வார்கள்‌” என்று கேட்டார்‌.

இந்த சிலை களிமண்ணில்‌ செய்தது. தண்ணீரில்‌ கரைக்க எடுத்துச்‌ சென்றுவிடுவார்கள்‌” என்றேன்‌. “இந்த சிலையை எதற்குத்‌ தண்ணீரில்‌ போடணும்‌’ என்று கேட்டார்‌. அதுதான்‌ முறை என்கிறார்கள்‌. அடுத்த வருஷத்துக்குப்‌ புதிதாக வேவறான்று வாங்குவார்கள்‌” என்றேன்‌.

“கரைப்பதற்கு முன்‌ இந்த சிலையுடன்‌ ஒரு போட்டோ எடுத்துக்‌கொடுங்கள்‌” என்று கேட்டார்‌. அவரின்‌ விருப்பத்தின்‌ பேரில்‌ நான்தான்‌ அந்தப்‌ புகைப்படத்தை எடுத்தேன்‌. மகள்‌ ரசித்த அந்த சிலையை அவரின்‌ விருப்பத்துக்காக என்‌ டிவிட்டர்‌ பக்கத்திலும்‌ பகிர்ந்தேன்‌. அவ்வளவே.

பாஜக கூண்டில் கர்நாடக சிங்கம்..; முன்னாள் IPS அண்ணாமலை விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் கட்சி தொடங்கவுள்ளார் என்பதை அறிவித்துள்ளார்.

அதே சமயத்தில் ’நான் முதல்வர் வேட்பாளர் இல்லை’ என தெரிவித்திருந்தார்.

எனவே பலரும் தங்களின் இஷ்டப்படி கர்நாடகாவில் கம்பீரமாக பணியாற்றிய கர்நாடக சிங்கம் என அழைக்கப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை என்பவர் தான் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என கூறிவந்தனர்.

இது தொடர்பாக ரஜினி ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. ஆனால் ரஜினியை வம்பிழுக்கவே இப்படியொரு வதந்தியை சிலர் கிளப்பிவிட்டனர்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி டெல்லியில் முரளிதரராவ் தலைமையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

விழாவில் அண்ணாமலை பேசியதாவது…

“அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

அந்த குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் இருப்பதாக கூறினார்.

மேலும் நான் பதவி நோக்கத்தில் கட்சியில் இணையவில்லை. கட்சி எடுக்கும் முடிவும் நான் கட்டுப்படுவேன் என கூறினார்.

வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்துக் கொண்டார் நடிகை வனிதா.

இந்த திருமணம் சர்ச்சையானது என்பதை பலமுறை பார்த்துவிட்டோம்.

இந்த நிலையில் பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாம்.

இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை வனிதா தனது சமூக வலைத்தளத்தில்…

‘சொல்வதற்கு நிறைய இருக்கு.. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. கடவுள் சக்தி மிக்கவர். நம்பிக்கையுடன் இருங்கள்.

எல்லாம் ஒரு காரணத்திற்காக நடக்கிறது. வாழ்க்கை மிகவும் கடினமானது. எல்லாம் சரியாகிவிடும். கடினமானதை ஏற்றுக்கொண்டு திரும்பக் கொடுங்கள்.’ என்று பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows