ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 2 படங்கள் ஆயுதபூஜையில் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநாயகர் சதுர்த்தி முடிந்துவிட்டது. இனி ஆயுத பூஜை விடுமுறை நாட்களை குறிவைத்து படங்களை வெளியிட தயாராகி வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

இதுவரை ஆயுதபூஜைக்கு 4 படங்கள் வெளியாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது.

இத்துடன் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள சண்டக்கோழி-2 திரைப்படமும் வெளியாகிறது.
இவையிரண்டும் ஹீரோக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன.

இத்துடன் ஹீரோயின்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள 2 படங்களும் வெளியாகிறது.

தனஞ்செயன் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் வெளியாகிறது.

அத்துடன் ஜே.எஸ்.கே. தயாரிப்பில் வேல்மதி இயக்கியுள்ள ஸ்ரேயா ரெட்டியின் நடித்துள்ள அண்டாவக் காணோம் படமும் வெளியாகிறது.

Kaatrin Mozhi and Andava Kaanom movies clash on 18th Oct 2018

இளையராஜாவே தடுத்தாலும் அவர் பாடல்களை பாடுவேன்..; எஸ்.பி. பாலசுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மகனும் நடிகருமான பாடகர் சரண் அமெரிக்காவில் எஸ்.பி.பி 50 என்ற இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

அந்த சமயத்தில் இளையராஜா, எஸ்.பி.பி.க்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், நான் இசை அமைத்த பாடல்களை யார் பாடினாலும் எனக்கு ராயல்டி தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பிறகு நடைபெற்ற இசை கச்சேரிகளில் எஸ்.பி.பாலசுப்பிரணியம் இளையராஜா பாடல்கள் பாடவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் பாட ஆரம்பித்திருக்கிறார். இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது :

இளையராஜா, தனது பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னாலும் பாடிக் கொண்டு தான் இருப்பேன். அவர் இசையமைத்த பாடல்களை பாடுவதற்கு நேரடியாக எனக்கு தடை விதிக்கவில்லை.

என் பையன் நடத்திய ஒரு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த பிரச்னை இன்னும் ஓயவில்லை. அவர் ஏன் அப்படி செய்தார் என்று எனக்கு தெரியாது.

இது நடந்த பிறகு ஒரு ஆண்டுவரை அவரது பாடல்களை பாடாமல் இருந்தேன். அதன்பிறகு யோசித்தேன். நான் இளையராஜா இசையில் தான் அதிகமாக பாடினேன்.

எனவே அதிலும் எனக்கு அதிக பங்கு இருக்கிறது என்று தோன்றியது. அதன்பிறகு பாட ஆரம்பித்து விட்டேன்.

இதற்காக சட்டப்படி அவர் நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படியே பதில் சொல்ல முடிவு செய்து இருக்கிறேன். அவரது பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பாடுவேன், நிறுத்தவே மாட்டேன்.

இந்தமாதிரி செய்துவிட்டாரே என்பதற்காக அவர் மீது இம்மியளவும் கவுரவம் குறையவில்லை. ஒரு இசையமைப்பாளராக இப்போதும் சரி, எப்போதும் சரி அவரது காலை தொட்டு கும்பிடுவதற்கு தயங்கவே மாட்டேன்.”

இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.

சிசிடிவி விழிப்புணர்வு குறித்த குறும்படத்தில் நடித்த விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப்டம்பர் மாத இறுதிக்குள் சென்னை மாநகர் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சென்னை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னை காவல் துறை ஆணையர் கேட்டுக் கொண்டதன் பேரில், அவரது கல்லூரி நண்பர் என்ற வகையிலும் நடிகர் விக்ரம், சிசிடிவி விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார்.

சுமார் ஒரு நிமிடம் ஓடக் கூடிய இந்தக் குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இப்படத்திற்கு Third Eye எனப் பெயரிட்டுள்ளனர்.

குறும்படத்தை ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட, நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார்.

பின்னர் நடிகர் விக்ரம் பேசியதாவது…

திருவான்மியூரில் தமது வீடு அமைந்துள்ள தெருவில் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

அனைவரும் தங்களது வீடுகளில், தெருக்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும்.

முக்கியமாக வீட்டில் பொருத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சிசிடிவி கேமராக்கள் எதிர்கால பாதுகாப்புக்கு அவசியமானது என்றும், பாதுகாப்புக்கான மூல தனம் என்பதையும் மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Actor Vikram to act in a CCTV awareness short film titled Third Eye

 

மலையாள நடிகர் கேப்டன் ராஜூ மரணம்; நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள கேப்டன் ராஜூ அவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்.

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஓரிரு மாதங்களுக்கு முன் வளைகுடா நாடான ஓமனுக்கு சென்றார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே அவரை மஸ்கட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை உறவினர்கள் கொச்சிக்கு கொண்டு வந்தனர்.

இதுநாள் வரை கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் ராஜூ பின்னர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததா அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இறந்து போன கேப்டன் ராஜூவுக்கு பிரமிளா என்ற மனைவியும், ரவிராஜ் என்ற மகனும் உள்ளனர்.

அவரைப்பற்றிய சிறு குறிப்பு..

கேப்டன் ராஜூ, ராணுவத்தில் பணிபுரிந்தவர். ராணுவ பணியில் ஓய்வு பெற்ற பின்பு கடந்த 1981-ம் ஆண்டு ரக்தம் என்ற மலையாள படம் மூலம் திரையுலகில் நுழைந்தார்.

அதன்பிறகு இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு இந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானார். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி ஆகியோருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

நாடோடி காற்று, ஒரு வடக்கன் வீரகதா, சி.ஐ.டி.மூசா போன்றவை இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன், கமல்ஹாசன் நடித்த சூரசம்ஹாரம், சத்தியராஜ் நடித்த ஜல்லிகட்டு, சின்னப்பதாஸ், ஜீவா மற்றும் ராஜகுமாரன், வேலுசாமி உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

கேப்டன் ராஜூ மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுப்போல் தென்னிந்திய நடிகர் சங்கமுத் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது….

“நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் , பிரபல நடிகர் கேப்டன் ராஜு அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

ராணுவ அதிகாரியாக பணியாற்றும் வேளையிலேயே கலை ஆர்வத்தால் நண்பர்களுடன் சேர்ந்து மும்பையில் நாடகக்குழு அமைத்து நாடகங்களில் நடித்து வந்தார்.

1980- ல் ‘ரத்தம்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரைப்பட நடிகரானார் . கடந்த 37 ஆண்டுகளில் ஐநூறுக்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை புரிந்தவர்.

விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘இதா ஒரு சினேக கதா ‘ என்ற மலையாள படத்தை இயக்கி இயக்குனராகவும் தனி முத்திரை பதித்தார்.

மேலும் அணைத்து தென்னிந்திய சூப்பர் ஸ்டார் படங்களிலும் வில்லனாக நடித்தும் புகழ் பெற்றவர்.

நடிகர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அவரது இழப்பு தென்னிந்திய திரைத்துறைக்கு ஈடு கட்ட முடியாத / இயலாத மாபெரும் இழப்பாகும்.

அவரது மறைவால் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது உற்றார் உறவினர்கள் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அன்னாரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ” என கூறப்பட்டுள்ளது.

Actor and director Captain Raju passes away in Kochi

இசை உலகுக்கு இம்சை; கட்டக் குரல் ஹீரோ-ஹீரோயின்ஸ் பாடுவது சரி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நம் எல்லோராலும் பேச முடியும். ஆனால் பாடல் முடியுமா? முடியாது.

ஏனென்றால் குரல் வளம் நன்றாக இருந்தால் மட்டுமே பாட முடியும். கேட்பவர்களுக்கு அதுதானே ஆனந்தம் தரும்.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பாடகர் பாடகிகளுக்கு வாய்ப்புகள் குறைந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பாடல்களை பாட ஆரம்பித்து விடுகிறார்கள்.

நடிகைகளில் ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பாட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நடிகர்களில் கமல், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், ஜெய் ஆகியோரும் இந்த வரிசையில் உள்ளனர்.

இதில் ஒரு சிலருக்கு குரல் இனிமையாக இருக்கிறது. அதனால் அவர்கள் பாடுவதில் ரசிகர்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ஆனால் சில நடிகர், நடிகைகள் பேசினாலே கரகர குரல் இருக்கும். அவர்கள் பாடினால் கேட்கவா வேண்டும்.
தற்போது அவர்களே பாடல் பாடுகிறோம் என்று படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

முதன்முறையாக நமக்கு பிடித்த நடிகர், நடிகை பாடுகிறாரோ என்று ஆர்வத்தில் பலரும் அந்த வீடியோக்களை பார்க்க, நாம் நன்றாக பாடி இருக்கிறோம் என அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் போல.

இதை இசை துறைக்கு வந்த இம்சை என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

இதுபோன்ற இம்சைகளை அவர்களே புரிந்துக் கொண்டு பாடகர், பாடகிக்கு வாய்ப்பு கொடுத்தால் ரசிகர்களுக்கும் பாடல்கள் இனிமையாக இருக்கும். இம்சையும் குறையும்.

இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துக் கொள்வார்களா..?

Why Top Tamil Actors and Actress turning into Singers

*துப்பாக்கி முனை* டீசர்; ரஜினி-அஜித்-விஜய் பாணியில் விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தினேஷ் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஹன்சிகா முதன்முறையாக இணைந்துள்ள படம் துப்பாக்கி முனை.

‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவம் தப்பில்லை’ என்ற படத்தை இதற்கு முன்பே இயக்கியவர் தினேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த துப்பாக்கி முனையில் விக்ரம் பிரபு, காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்க, எல்.வி முத்துகணேஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் முதன்முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளார் விக்ரம் பிரபு.

அண்மைக்காலமாக ரஜினி (கபாலி, காலா), அஜித் (மங்காத்தா முதல் விஸ்வாசம் வரை), விஜய் (தெறி, மெர்சல், சர்கார்) ஆகியோர் தங்கள் நரைத்த தாடியுடன் நடித்து வருகிறார்கள்.

தற்போது அந்த வரிசையில் விக்ரம் பிரபுவும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

In Thuppakki Munai movie first time Vikram Prabhu looks in Salt and Pepper

 

https://www.filmistreet.com/video/thuppakki-munai-teaser/

More Articles
Follows