சௌந்தர்யா ரஜினி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார்.

சௌந்தர்யா இருவரும் மனமுவந்து இந்தப் பிரிதலை விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனுக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படு கிறது.

இதற்கிடையே, அஸ்வின்- சௌந்தர்யா தம்பதியிடையே சின்ன சண்டை தான் என்றும் அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்.

இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என்று நம்பப்பட்டது.

ஆனால் இருவரும் விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த இவர்களது திருமண உறவில் பிறந்த மகன் வேத்துக்கு அண்மையில் முதல் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

திருமணத்திற்கு பின்னர் சௌந்தர்யா தனது பெயரை சௌந்தர்யா ரஜினிகாந்த் என்றே தொடர்ந்தபோது எழுந்த சர்ச்சைக்கு ‘என்றுமே நான் ரஜினியின் மகள் என்று சொல்வதையே விரும்புகிறேன்’ என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.

சௌந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் பிரச்சினை என்று வந்த செய்திகளை இரு தரப்பும் மறுத்து வந்தனர்.

ஆனால் சில மாதங்களுக்கு முன் அவர் பகீரங்கமாக தனது நிலையை அறிவித்தார். கடந்த ஏழு மாதங்களாக, இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சென்னை சேத்துப்பட்டில் தனியாக வசிக்கும் சௌந்தர்யா, விவாகரத்துக் கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

பரஸ்பரம் பிரிவது என முடிவெடுத்த நிலையில் வழக்கு இன்று குடும்ப நல நீதிபதி மேரி டில்டா முன்பு விசாரணைக்கு வந்தது.

இருவரும் நீதிபதி முன்பு ஆஜராகி தாங்கள் பிரிவதாக கூறினர். பரஸ்பரம் தாங்கள் விவாகரத்து பெற விரும்புவதாக தெரிவித்தனர்.

இளம் தம்பதிகள் என்பதால் 6 மாதம் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

6 மாதத்தில் தம்பதிகள் மனம் மாறினால் சேர்ந்து வாழலாம், இல்லாவிட்டால் விவாகரத்து அளிக்கப்படும். குழந்தை யாரிடம் இருப்பது பராமரிப்பு குறித்தும் அப்போது முடிவு செய்யப்படும்.

விஜய் படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை தவிர மற்றொரு பண்டிகைக்கு தொடர் விடுமுறை நாட்கள் கிடைக்காது.

எனவே, திரையுலகினரும் அந்த நாட்களில் தங்கள் படங்களை வெளியிட முனைப்பில் இருப்பார்கள்.

எனவேதான் 2017 பொங்கலுக்கு கிட்டதட்ட எட்டு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.

ஆனால் சூர்யாவின் சிங்கம் 3 படம் ஜனவரி 26இல் வெளியாகிறது.

இதற்குமுன் விஜய்யுடன் நடித்த ப்ரெண்ட்ஸ் படம்தான் 2001 ஜனவரியில் (பொங்கல்) வெளியானது.

தற்போது கிட்டதட்ட 16 வருடங்களுக்கு பிறகு அவரது படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-விஜய்-சூர்யா-தனுஷ்-சிவகார்த்திகேயன் ஆகியோரின் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

10 வருடங்களுக்கு முன்பு வரை தியேட்டரில் படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது? என்பதைதான் கணக்கில் வைத்துக் கொள்வார்கள்.

ஆனால் தற்போதுதான் டிஜிட்டல் மயமாச்சே. அதற்கேற்ப சாதனைகளை நாமும் மாற்றிக் கொள்ள வேண்டுமல்லவா?

அந்த வகையில் தற்போது யூடியூபில் எந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் சாதனை படைத்துள்ளது என்பதை பார்ப்போம்.

நம் தமிழ் நடிகர்களின் படங்களில் முதல் 10 இடத்தை பிடித்த டீசர், ட்ரைலர் பற்றிய பட்டியல் இதோ…

கபாலி: ரஜினிகாந்தின் ‘கபாலி’ டிரைலர் 3. 3 கோடி ஹிட்ஸ்களுடன் 4. 65 லட்சம் லைக்ஸ் பெற்றுள்ளது.

தெறி: விஜய்யின் ‘தெறி’ பட டிரைலர் 1. 06 கோடி ஹிட்ஸ்களுடன் 2. 42 லட்ச லைக்ஸ் பெற்றுள்ளது.

சிங்கம் 3: சூர்யாவின் ‘சிங்கம் 3’ டீசர் 9. 09 லட்சம் ஹிட்ஸ்களுடன் 1. 17 லைக்ஸ் பெற்றதுள்ளது.

இருமுகன்: விக்ரம் நடித்த ‘இருமுகன்’ டிரைலர் சுமார் 7. 7 லட்ச ஹிட்ஸ் மற்றும் 63,911 லைக்ஸ் பெற்றுள்ளது.

ரெமோ: சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ பட டிரைலர் 72 லட்சம் ஹிட்ஸ் மற்றும் 76,402 லைக்குகளை பெற்றுள்ளது.

காஷ்மோரா: கார்த்தி, நயன்தாரா நடித்த ‘காஷ்மோரா’ டிரைலர் 71 லட்சம் ஹிட்ஸ் மற்றும் 39,468 லைக்குகள் பெற்றுள்ளது.

கொடி: தனுஷின் ‘கொடி’ டிரைலர் 59 லட்ச ஹிட்ஸ்கள் மற்றும் 44,378 லைக்குகளை பெற்றுள்ளது.

24: சூர்யா நடிப்பில் வெளியான ’24’ டிரைலர் சுமார் 48 லட்சம் ஹிட்ஸ் பெற்றுள்ளது.

இது நம்ம ஆளு: சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ பட டிரைலர் 26 லட்சம் ஹிட்ஸ்களை பெற்றுள்ளது.

போகன்: ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இணைந்து நடித்துள்ள ‘போகன்’ பட டிரைலரை தற்போது வரை சுமார் 22 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

விஜய்சேதுபதியை போல் மாற்றிக் காட்டிய விக்ரம்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மெல்லிசை படத்தின் தலைப்பை புரியாத புதிர் என்று மாற்றிவிட்டனர்.

இப்படம் 2017 பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தற்போது இதுபோன்று பெயர் மாற்றத்துடன் மற்றொரு படம் உருவாகி வருகிறது.

வீரசிவாஜி படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘முடிசூடா மன்னன்’.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கும் இப்படத்தில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்க, யுவன் இசையமைத்து வருகிறார்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் தலைப்பை தற்போது சத்ரியன் என்று மாற்றி பெயரிட்டுள்ளனர்.

இதே பெயரில் மணிரத்னம் கதை, திரைக்கதை அமைப்பில், மறைந்த கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான படம் ‘சத்ரியன்’.

விஜயகாந்த் நடித்த இப்படம் 1990ல் ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது.

சத்ரியனை தயாரித்த ஆலயம் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்றுதான் இப்படத்தலைப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு ராஜமரியாதை தரும் அரசாங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தியளவில் டிரெண்ட் ஆனது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை படம்பிடித்துவிட்டாராம் ஷங்கர்.

இந்நிலையில் ஒரு பாடல் காட்சிக்காக உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ அருகில் உள்ள கோம்தி நதி, ஜானேஸ்வர் மிஸ்ரா பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படம்பிடிக்க இருக்கிறார்.

ரஜினியின் படம் அங்கு படமாக்கப்படவிருப்பதை அறிந்த அம்மாநில அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து தர முடிவு செய்துள்ளதாம்.

இதுகுறித்து உத்தர பிரதேச மாநில திரைப்பட மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் கவுரவ் திரிவேதி தன்னுடைய பேட்டில் கூறியதாவது…

“இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் எங்கள் மாநிலத்தில் வந்து நடிப்பது எங்களுக்கெல்லாம் பெருமை.

எனவே, அவரது சூட்டிங்க்கு தேவையான உதவிகளையும் நாங்களே முன்னின்று செய்து கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

‘சிங்கம்-3’ ரிலீஸ் ஜனவரி கடைசிக்கு தள்ளிப்போக இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக நடிகர் சூர்யா படத்திற்கும் இயக்குனர் ஹரி படத்திற்கும் சென்சாரில் யு சர்ட்டிபிகேட் கொடுப்பது வழக்கம்.

காரணம் இருவரது படங்களும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும்.

ஆனால் சிங்கம் 3 படத்தில் படத்தின் க்ளைமாக்ஸ் வரை நிறைய வன்முறை ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாம்.

எனவே, படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் யு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

எனவே ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல படக்குழு முடிவு செய்துள்ளது.

ஆனால் அங்கு தாமதம் ஆக சிங்கம்-3 படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டார்களாம்.

மேலும் 2017 பொங்கல் அன்று களத்தில் நிறைய படங்கள் மோதுகின்றன.

இதுபோன்ற காரணங்களால்தான், படம் ஜனவரி 26 வெளியாக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More Articles
Follows