சுதந்திர தினத்தில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா தயாரித்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’.

சுதா கொங்கரா இயக்கியுள்ள இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

அசுரன் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கால் இதன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜீன் அல்லது ஜீலைக்குள் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்றும் அதற்குள் தியேட்டர்கள் திறக்கப்பட்டு நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையிலும் சூரரைப்போற்று படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Soorarai Pottru release targets on 15th August 2020

சிம்புவுக்காக கேங்ஸ்ட்டர் கதையுடன் காத்திருக்கும் திரௌபதி மோகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரிச்சர்டு, ஷீலா நடிப்பில் உருவான ‘திரௌபதி’ படத்தை இயக்கியிருந்தார் மோகன். இந்த படம் வெளியாகும் முன்னரே பெரும் சர்ச்சையை எழுப்பியது.

எனவே எந்த விளம்பரமும் இல்லாமல் பல கோடிகளை அள்ளி வசூல் வேட்டையாடியது.

இந்த நிலையில் மோகனின் அடுத்த படத்தின் ஹீரோ? என்ற கேள்வி எழவே மீண்டும் ரிச்சட்டு நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் சிம்புவின் கால்ஷீட் வைத்திருக்கும் ஒரு தயாரிப்பாளர் மோகனை தொடர்பு கொண்டு இயக்க கேட்டராம்.

மோகனும் சிம்புக்காக ஒரு கேங்க்ஸ்டர் கதையை ரெடி செய்துள்ளாராம்.

வடசென்னையை சார்ந்த மீனவ மக்களுக்கான கதையாம் அது.

வெங்கட் பிரபு இயக்கவுள்ள மாநாடு படத்தை முடித்துவிட்டு மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி.. சிம்பு என்ன சொல்கிறார் என பார்ப்போம்…?

Draupathi director Mohan waiting for Simbus Call Sheet

கொரோனா நிதியாக ரசிகர் மன்றத்திற்கு 50 லட்சம் கொடுத்தாரா விஜய்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

தற்போது ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் வருகிற மே 3 வரை இது அமலில் இருக்கும்.

இதனையடுத்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய மாநில அரசுகளுக்கும் மற்றும் சினிமா சங்கங்களுக்கும் ரூ. 1.30 கோடியை நன்கொடையாக கொடுத்தார் நடிகர் விஜய்.

பிரதமர் நிவாரண நிதியாக ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதியாக ரூ.50 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதியாக ரூ.10 லட்சமும், பெப்சி அமைப்புக்கு ரூ.25 லட்சமும், கர்நாடகா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், ஆந்திரமுதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், தெலுங்கானா முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும், புதுவை முதல்வர் நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் என பிரித்து கொடுத்திருந்தார்.

இவையில்லாமல் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் விஜய் பணம் அனுப்பியுள்ளதாகவும் மக்களுக்கு நிர்வாகிகள் ரசிகர்கள் உதவி வருவதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 1000 நிர்வாகிகளுக்கு தலா ரூ.5000 அனுப்பியுள்ளதாகவும், (ஆக 50 லட்சம்) இந்த பணத்தின் மூலம் தேவையான மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Did Vijay gave Corona relief fund to his fans Association

ஜல்லிக்கட்டு & காளை தீம் மியூசிக்; சூர்யா படத்தில் ஜிவி பிரகாஷ் மாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூரரைப் போற்று படத்தை முடித்துவிட்டு ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா.

இந்த படம் செல்லப்பா எழுதிய வாடிவாசல் எனும் நாவலை மையப்படுத்தி உள்ளதால் இதற்கு வாடிவாசல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டார்.

இசை பணிகளை குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

அதாவது ஜல்லிக்கட்டுக்காக ஒரு ஸ்பெஷல் தீம் மீயுசிக்கும் காளைகளுக்காகவும் ஒரு மாஸான தீம் மியூசிக் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

GV Prakash composed Theme music for Jallikattu in Vaadi Vaasal

கொரோனாவையும் வாங்கீடுங்க…; ரஜினி ஸ்டைலில் வெங்கட் பிரபு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பால், மளிகை, காய்கறிகள் வாங்க உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் மக்கள் வெளியில் வரலாம் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாளை ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரை கடுமையான ஊரடங்கை தமிழக முதல்வர் எடப்பாடி அமல்படுத்த உள்ளார்.

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

எனவே மக்கள் இன்று ஏப்ரல் 25ல் அதிகளவில் வெளியே வந்தனர். தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிக்க அனைவரும் வெளியே வந்துவிட்டதால் திருவிழா போல கூட்டம் காணப்பட்டது.

இந்த படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

சமூக விலகலை கடைப்பிடிக்காமல் மக்கள் இப்படி சுற்றி திரிந்தால் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும். நாட்டில் நிலைமை என்னவாகும்? என பலரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது…

’எதற்காக சென்னை மக்கள் இவ்வாறு பயந்துகொண்டு பொருட்களையெல்லாம் வாங்கிக் குவிக்கின்றார்கள்? இந்த நான்கு நாள் ஊரடங்கு உத்தரவில் பொருட்களை வாங்கிக் கொள்வததோடு இவர்கள் கொரோனா வைரஸையும் சேர்த்து வாங்கி விடுவார்கள் போலிருக்கிறதே.

நான்கு நாட்களும் வீட்டில் பிரியாணியா சமைக்கப் போகிறார்களா? தயவுசெய்து அமைதியாக வீட்டில் இருங்கள். இதுவும் கடந்து போகும் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் கொரோனா குறித்த அச்சம் வேண்டாம். வீட்டில் இருங்கள். இதுவும் கடந்து போகும் என ரஜினிகாந்த கூறியிருந்தார்.

தற்போது வெங்கட்பிரபுவும் இதுவும் கடந்து போகும் என்ற வார்த்தை கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Venkat Prabhu request Peoples to Stay home in Corona Lock down

தலையணை மட்டுமே ஆடை.!; பில்லோ சேலஞ்சில் தமன்னா தாராளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வதை விட இணையத்தில் பிரபலங்கள் செய்யும் சேலஞ்ச் சேட்டைகள் நம்மை தினம் கொல்கிறது எனலாம்.

கொரோனா ஊரடங்கால் பலர் வீட்டில் முடங்கியிருப்பதால் எதையாவது செய்து அதை ஒரு சேலஞ்ச் என உருவாக்கி டிரெண்ட் செய்கின்றனர்.

அப்படிதான் புடவை சவால் உருவானது. அது போல் பில்லோ சேலஞ்ச்சும் வைரலானது.

அதாவது முக்கியமாக பெண்கள் தங்கள் உடலில் எந்த ஒரு ஆடையும் இல்லாமல் தலையணையை மட்டுமே வைத்து உடலை மறைக்க வேண்டும்.

பல நடிகைகள் செய்திருந்தனர். இப்போது தமன்னாவும் செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட போட்டோ தற்போது இணையத்தை சூடாக்கியது.

Tamannah looks alluring in Pillow challenge

More Articles
Follows