தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அனுதீப் இடத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள படம் ‘பிரின்ஸ்’.
இப்படத்தின் தமிழக வெளியீடு உரிமையை பிரபல விநியோகஸ்தர் அன்புச் செழியன் பெற்றிருக்கிறார்.
தமிழக முழுவதும் 650+ தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் பிரஸ்மீட் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிது.
இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது…
“கடந்த 20 வருடங்களாக தீபாவளிக்கு நிறைய நடிகர்களின் படங்களை முதல் நாளிலே பார்த்து விடுவேன்.
இன்று என்னுடைய திரைப்படம் ‘பிரின்ஸ்’ தீபாவளிக்கு திரைக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான என் ரசிகர்களுக்கும் என் சகோதர சகோதரிகளுக்கும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி.
இந்த படம் மிகவும் வித்தியாசமான படம் அல்ல. ஒரு இந்திய பையன் ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலிக்கிறார்.
அது குறித்த சம்பவமே இந்த படம். இந்த சம்பவத்திற்குள் நிறைய நகைச்சுவைகளை காட்சிகளை வைத்திருக்கிறார். அதை ட்ரைலரில் கூட பார்த்திருப்போம்.
‘பிரின்ஸ்’ படத்துடன் சர்தார் திரைப்படமும் தீபாவளிக்கு வருகிறது. இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற வேண்டும். சர்தார் பட குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
தீபாவளிக்கு வெடி வெடிக்கும் போது மிகவும் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். பெற்றோர்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவோம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி”
இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.
Sivakarthikeyan talks about Sardar and Prince
