‘எவ்ளோ பிரச்சினைதான் கொடுப்பீங்க…’ கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ரெமோ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது.

இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாது அமெரிக்கா, மலேசிய உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே, இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா நடத்தப்பட்டது.

இதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது….

ரஜினிமுருகன் படத்தின் ரிலீஸ் நாள் அன்று கூட அது ரிலீஸ் ஆகுமா? என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் இந்த ரெமோ படத்தை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் என் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

நான் 18 மணி நேரம் உழைத்துவிட்டு வீட்டில் என் குழந்தையுடன் விளையாட சென்றுவிடுவேன்.

ஆனால் அவர் வீட்டிற்கு சென்றே பல நாட்கள் ஆகிவிட்டது. சரியான உறக்கம் அவருக்கு இல்லை.

நாங்கள் இணைந்து ஒரு நல்ல ஜாலியான படத்தை கொடுக்க நினைக்கிறோம்.

என் சினிமா வாழ்க்கையில் யாரும் பின்னால் இல்லை. என் முன்னால் இருக்கும் பத்திரிகையாளர்களும் ரசிகர்களும் காரணம்.

அவர்களால்தான் எனக்கு இந்த மேடை கிடைத்துள்ளது.

ஆனால் அதற்குள் எவ்வளவு பிரச்சினைகள். ராஜாவிடம் சொந்த வீடு இல்லை. கார் இல்லை.

எனக்கும் சரி அவருக்கும் சரி அவ்வளவு பிரச்சினைகளை கொடுக்கின்றனர்.

யார் பிரச்சினைகளை கொடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.?

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன். எங்களை வேலை செய்யவிடுங்கள்.

அவருக்கு ரூ. 20 கோடி லாபம் கிடைத்தவுடன் அவர் எங்கோ சென்று செட்டில் ஆகி விடலாம்.

ஆனால் என்றாவது ஒருநாள் பெரிதாக புதுசாக செய்துவிட எங்கள் குழு நினைக்கிறது. அதை செய்யவிடுங்கள்.

உதவியோ ஆதரவோ வேண்டாம். அது மக்கள் கொடுப்பார்கள்.

அவர்கள் குறை சொன்னால் திருத்திக் கொண்டு அடுத்த படத்தை கொடுக்கிறோம்.

எனக்கு நல்ல சம்பளம் கொடுக்கிறார்கள். அதற்காக உண்மையாக உழைக்க வேண்டும் என நினைக்கிறேன்.”

என்று கண்ணீர் மல்க பேசினார் சிவகார்த்திகேயன்.

‘யாருடைய வெற்றியையும் நான் திருடவில்லை…’ சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று நடைபெற்ற ரெமோ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன், அனிருத், கீர்த்தி சுரேஷ், பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது சிவகார்த்திகேயன் எல்லாருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, இறுதியாக எமோஷனல் ஆகிவிட்டு கண்ணீர் சிந்தினார்.

அவர் பேசும்போது…

பல தடைகள் வந்தாலும், ஒரு நல்ல சினிமாவை கொடுப்பதற்கு முயற்சித்து வருகிறோம்.

மக்கள் குறை சொன்னால் திருத்திக்கொள்கிறோம்.

நான் ஏறுகின்ற எல்லா மேடையிலும் அழுகிறேன் என்று பலர் நினைக்கலாம்.

தப்பான ஒரு விஷயம் செஞ்சிட்டு அழுதாதான் அது தப்பு.

நான் யாருக்கும் துரோகம் செய்யகூடாது என நினைக்கிறேன்.

நான் அழுததாதற்காக வருந்தவில்லை.

நான் ஹிட் கொடுப்பதால் பயம் வருகிறது. நான் யாருடைய ஹிட்டையும் திருடவில்லை.

நான் டயர்ட்டாக இருந்தாலும் சோகமாக இருந்ததில்லை.

மேலும் என் ரசிகர்களுக்காக நல்ல படங்களை கொடுப்பேன்.”

என்று சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசினார்.

‘கீர்த்தி சுரேஷ் என்னை ஏமாற்றிவிட்டார்…’ – சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த, ரெமோ படம் ரூ. 27 கோடியை கடந்து வசூல் சாதனை புரிந்துள்ளது.

எனவே ரசிகர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சதீஷ் பேசும்போது….

கடந்த 2 வருடமாக சிவகார்த்திகேயன் எப்போதும் ரெமோ ரெமோ என்றே கூறிக் கொண்டிருப்பார்.

படத்திற்காக கடுமையான உழைப்பை கொடுத்துள்ளார்.

நானும் கீர்த்தியும் தற்போது பைரபா படப்பிடிப்பில் இருந்து வருகிறோம்.

அப்போது அவரிடம் என்ன கலர் டிரெஸ் போடப் போகிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அவர் புளு கலர் டிரெஸ் போடுவேன் என்றார்.

எனவே நான் கறுப்பு சட்டை அணிந்து வந்தேன். ஆனால் இப்போது அவரும் கறுப்பு அணிந்து வந்துள்ளார்.

அவர் சொன்னதை செய்யாமல் ஏமாற்றிவிட்டார்.

ஏற்கெனவே எங்களை பற்றி ஒரு சில கிசுகிசு வந்தது. இப்போது இந்த டிரெஸ் பற்றியும் சொல்வார்கள்.” என்று பேசினார் சதீஷ்.

ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டார் – திருப்பூர் சுப்ரமணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ரெமோ படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூ. 27 கோடியை எட்டியுள்ளது.

இதனால் தற்போது இப்படத்தின் வெற்றி விழாவை சென்னையில் கொண்டாடி வருகின்றனர்.

இவ்விழாவில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது…. சில காலமாக படங்களை விநியோகம் செய்யவில்லை நான்.

ரெமோ படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா என்னிடம் இப்படத்தை விநியோகம் செய்ய சொன்னார்.

ரஜினி நடித்த சிவாஜிக்கு பிறகு எட்டு வருடங்களுக்கு இப்படத்தை விநியோகம் செய்தேன். நல்ல லாபம் கொடுத்துள்ளது.

தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், ரஜினி, விஜய் ஆகியோருக்கு பிறகு அடுத்த இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துள்ளார்” என்று பேசினார்.

மீண்டும் வீட்டு வேலையாட்களை வியக்க வைத்த அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு கட்டிக் கொடுத்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர்கள் அனைவரும் அஜித்தின் வீட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் வசித்து வருகின்றனர்.

இவர்களை வேலைக்கு அழைத்து வர வேன் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்நிலையில், அவர்களின் வீட்டில் அடிக்கடி மின்சார தடை பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம்.

இதனையறிந்த அஜித் அவர்களின் வீட்டில் இன்வெர்ட்டர் பொருத்த உத்தரவிட்டுள்ளாராம்.

அதிலும் தன் வீட்டில் உபயோகப்படுத்தும் தரமான இன்வெர்ட்டரை பொருத்த சொல்லியிருப்பதால் அவரது பணியாளர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்களாம்.

ஜிவி. பிரகாஷ்-சதீஷ் இணையும் படத்திற்கு ‘நவீன’ பெயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் கை விரல்களே கொள்ளாத அளவிற்கு புதுப்படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இதில் பல படங்களில் நாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பணி புரிகிறார்.

இந்நிலையில் இன்று இவர் நடிக்கவுள்ள ஒரு புதுப்படத்திற்கு பூஜை இடப்பட்டுள்ளது.

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பாக சி.வி.குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு நவீன தொழில்நுட்பமான ‘4ஜி’ (4G) எனப் பெயரிட்டுள்ளனர்.

இதில் சதீஷ் முக்கிய வேடம் ஏற்று நடிக்க, இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் வெங்கட் பக்கர் (வருண் பிரசாத்) இயக்குகிறார்.

More Articles
Follows