தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் ஒப்பந்தம் ஆனார்.
மற்றொரு வில்லனாக மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிக்கிறாராம்.
இந்த நிலையில்தான் இந்த படத்தில் பாடல் பாடவோ அல்லது பாடல் எழுதவோ தனுஷுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வந்தன.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவதோடு, அதை பாடவும் உள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கெனவே அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பல பாடல்கள் பாடி அவை ஹிட்டாகியுள்ளன.
நிறைய படங்களை தனுஷ் கைவசம் வைத்திருப்பதால் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan gets a chance to work in Beast ?
