தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
கையில் ஆபரேஷன் கத்தியுடன், தரையில் ஆங்காங்கே உள்ள ரத்தக் கறைகளுடன், ஒரு சேர் மீது கால் மீது கால் போட்டு உட்கார்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
எனவே வெறும் டாக்டரா அல்லது கொலைகார டாக்டரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சிவகார்த்திகேயன் பர்த் டே: டாக்டரை அடுத்து அயலானும் வர்றான்..
நெல்சன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
இவர்களுடன் யோகி பாபு நடிக்க அனிருத் இசையமைக்கிறார்
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ பட போஸ்டரும் சில ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட தனுஷின் டாக்டர்ஸ் பட போஸ்டரும் ஒரே மாதிரியாக டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.