அஜித்துடன் மோதல்; பர்ஸ்ட் லுக்கிலேயே கன்பார்ம் செய்தார் சிம்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா நடித்த ‘அத்திரண்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார் சுந்தர் சி.

நான்கு நந்தி விருதுகளைப் பெற்ற இந்தப் படம் கன்னடம் மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழில் சிம்பு நாயகனாக நடித்து வரும் இப்படத்தை லைகா தயாரித்து வருகிறது.

நாயகிகளாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்க, மகத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று தீபாவளியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

“வந்தா ராஜாவாதான் வருவேன்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வருகின்றனர் என்பதையும் அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Simbus Vandha Rajavaathaan Varuven clash with Viswasam on 2019 Pongal

விக்ரமின் கடாரம் கொண்டான் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இது விக்ரம் நடிக்கும் 56-வது படமாக உருவாகி வருகிறது.

இதில் விக்ரம் உடன் கமல் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்க, தூங்காவனம் பட இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கி வருகிறார்.

கடாரம் கொண்டான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் விக்ரம் முழுவதும் நரைத்த தாடி மீசையுடன் ஸ்டைலிஷ் ஆக காணப்படுகிறார்.

First look of Vikrams 56th film Kadaram Kondan released by Kamal

விஜய்யின் சர்கார் படத்திற்கு கிடைத்த முதல் விமர்சனம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு நடித்துள்ளனர்.

நாளை தீபாவளியை முன்னிட்டு இந்த படம் வெளியாகிறது.

இந்நிலையில் UAE சென்சார் போர்டில் இருக்கும் ஒருவர் சர்கார் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் கூறியுள்ளார்.

“விஜய் என்ட்ரி சீன் பைசா வசூல். I am a Corporate Criminal ! – வசனம் தெறிக்கிறது. சண்டைக்காட்சிகள், பன்ச் வசனங்கள் மாஸாக இருக்கிறது. படம் தீபாவளி பிளாக்பஸ்டர். ரேட்டிங்: 4/5” என அவர் சர்கார் பற்றி கூறியுள்ளார்.

“மசாலா காட்சிகள் அதிகம் இருந்தாலும் படம் நல்ல கருத்து சொல்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Here is Sarkar movie first review

ஹீரோக்கள் கோடிகளில் சம்பளம் வாங்க அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை…; திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் நாளை (நவம்பர் 5) வெளியாகிறது.

கத்தி, துப்பாக்கி படங்களை தொடர்ந்து இதில் விஜய்யை முருகதாஸ் இயக்கியுள்ளதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எனவே சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஒரு சினிமா டிக்கெட்டின் விலை ரூ.1000-க்கும் மேல் விற்பனை செய்கிறார்கள்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:

நான் சரியான விலையில் தான் டிக்கெட் விற்கிறேன். மற்ற திரையரங்குகளில் விற்கிறார்கள் என்றால் விற்கும் திரையரங்கு உரிமையாளரைத் தான் கேட்க வேண்டும்.

அரசாங்கமும், நாங்களும் அதிக விலைக்கு டிக்கெட் விற்காதீர்கள் என்று சொல்கிறோம். இது தொடர்பாக பேசி பேசி டயர்ட்டாகி விட்டேன்.

அதிக விலைக்கு விற்றால் தான் சம்பளம் அதிகமாக கிடைக்கும் என்பதால் முன்னணி நடிகர்கள் யாரும் இதுபற்றி வாயே திறப்பதில்லை.

என் திரையரங்குகளில் ரூ.150-க்கு மேல் ஒரு டிக்கெட் கூட விற்கவில்லை. அனைத்துமே ஆன்லைனில் தான் விற்கிறோம்.

பெரிய விலைக் கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்குகிறார்கள். அவர்களைக் குறைச் சொல்ல முடியாது. இதில் திருந்த வேண்டியவர்கள் நடிகர்கள் தான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

கதையை திருடி கள்ள ஓட்டு படம்..; சர்கார் மீது தமிழிசை கடும் தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்து கடந்த வருடம் வெளியான மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியது பாஜக. தான்.

தற்போதும் அது தொடரும் எனத் தெரிகிறது.

நாளை வெளியாகவுள்ள சர்கார் படம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

இன்றைக்கு திரையுலகில், கதைத் திருட்டு, கருத்திருட்டு என்பதெல்லாம் அதிகரித்துவிட்டது.

கள்ளக் கதையைக் கொண்டு, கள்ள ஓட்டு பற்றி படமெடுக்கிறார்கள்.

முதல்வராகும் கனவில் சினிமாவில் நடிப்பவர்கள், சினிமாவில் வேண்டுமானால் முதல்வராக நடிக்கலாம். திரையில் வேண்டுமானால் ஆட்சி நடத்தலாம்

சர்கார் என்று பெயர் வைத்துக்கொண்டு, சினிமா சர்காரையே சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள், உண்மையான சர்காரை எப்படி நிர்வகிப்பார்கள்? என சர்காரை கடுமையாக சாடியுள்ளார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

நாளை கமல்-விக்ரம் இணைந்து தரும் தீபாவளி விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா அவர்கள் தூங்காவனம் படத்தை இயக்கினார்.

இப்படத்தை கமலே தயாரித்து நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது மீண்டும் கமல் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடிக்கிறார்.

இதில் கமலின் 2வது மகள் அக்சராஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது ராஜ்கமல் நிறுவனத்தின் 45 படைப்பாகவும் விக்ரமின் 56வது படமாகவும் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை நவம்பர் 6ஆம் தேதி வெளியிட உள்ளனர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

More Articles
Follows