மெர்சலை அடுத்து பாஜக-வலையில் தானே சிக்கும் சிம்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மீடியா மார்ஷல் தயாரிப்பில் எஸ். அருள் இயக்கியுள்ள படம் தட்டுறோம் தூக்றோம்.

இப்படத்தில் கபிலன் வைரமுத்து எழுதியுள்ள Demontization Anthem என்ற பாடல் இணையத்தில் வெளியானது.

சிம்பு இப்பாடலை பாட பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

இந்த பாடல் வரிகள் அனைத்தும் பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு திட்டத்தை எதிர்த்தே உள்ளது.

அதில் உள்ள சில வரிகள்…

காந்தி நோட்டு ரெண்டு அம்பேலாகி போயாச்சு….
பேங்க ஏடிஎம்மில் அஸ்க்கு புஸ்க்கு ஆயாச்சு…
சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவுக்கு வந்தாச்சு….
காத்து கிடந்த ஜனம் காக்கா கூட்டம் போலாச்சு….

என்ற வரிகளோடு பாடல் தொடங்குகிறது.

மல மலயா மோசம் செஞ்ச முமூதேவிங்க பாரின் போயாச்சு (மல்லையா கார்டூன் வருகிறது)

இதனையடுத்து NO CASH NO CASH என்ற கோரஸ் வருகிறது.

ஏழைகள் வீட்டில் இருப்பது எல்லாம் சிவப்பு பணமடா….
குருவி போல சேர்த்த காசு கள்ளம் இல்லடா…
நாட்ட மாத்த வேனுமின்னு நீங்க நினைச்சா?…
கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா? என்ற வரிகள் வருகிறது.

(இந்த வரிகள் வரும்போது பிரதமர் மோடி படம் காட்டப்படுகிறது)

இதனிடையில் நோ கேஷ் (NO CASH NO CASH) என்ற வரிகள் வருகிறது. ஒரு வேளை பழைய காலம் போல பண்டமாற்று முறை வைத்துக் கொள்ளுவோமா? எனவும் பாடல் வரிகள் உள்ளது.

மேலும் இறுதியாக ஒரே கன்ப்யூசன். என்ன வாழ்க்கைடா இது? என புலம்வுது போல் சிம்பு முடிப்பதாக பாடல் உள்ளது.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்களை விஜய் பேசியதால், அந்த படம் பாஜக.விடம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது.

தற்போது சிம்பு பாடிய பாடல் மோடியின் திட்டத்தை எதிர்ப்பது போல் உள்ளதால் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரப்போகிறதோ?

Simbu new song Demonetization Anthem may create problems

Watch song here…

 

A காட்சிகள்; ஏமாலி இயக்குனரிடம் அதுல்யா கோரிக்கை வைத்தாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் கண்கட்டுதே என்ற ஒரே படத்தில் நடித்து தமிழக இளைஞர்களை கட்டிப் போட்டவர் அதுல்யா.

முதல் படத்தில் நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பெண்ணாக வந்து அசத்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து ஏமாலி என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இதில் முற்றிலும் மாறுப்பட்ட கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் டீசர் பெற்ற வரவேற்பையே இதற்கு உதாராணமாக சொல்லலாம்.

இதன் டீசரில் படு கிளாமராகவும் அதே சமயம், புகை பிடிப்பது போன்ற காட்சிகளிலும் நடித்திருந்தார்.

இதை சில ரசிகர்கள் ரசித்தாலும், என்னம்மா இப்படி பண்ணிட்டியேம்மா என ரசிகர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வந்தனர்.

இந்த காட்சிகள் டீசரில் பார்க்கத்தான் இப்படி இருக்கும். படத்திற்கு தேவையான காட்சிகள்தான் இவை. இருந்தபோதிலும் ஆபாசம் இல்லாமல் படத்தில் காட்ட சொல்லியிருப்பதாக இயக்குனரிடம் அதுல்யா கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

V.Z. துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஏமாலி படத்தில் சமுத்திரக்கனி, பாலசரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

2018ல் சூர்யா உடன் இணையும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யங் மங் சங்’ படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் கர்ணன் இயக்கும் ‘குலேபாகவாலி (Gulebakavali)’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா.

இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இதன் சூட்டிங் முடியும் தருவாயில் உள்ளதாம்.

எனவே போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடித்துவிட்டு 2018 பொங்கல் விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.

இதே பொங்கல் தினத்தில்தான் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் மற்றும் விமல் நடித்துள்ள மன்னர் வகையறா, விஷால் நடித்துள்ள இரும்புத் திரை ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் தசாவதாரத்தை மிஞ்சும் 2.0 கேரக்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா நிறுவனத்தின் மிகப்பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் உருவாக்கியுள்ள படம் 2.0.

இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் புரொஃபஸர் வசீகரன் மற்றும் ரோபோ சிட்டி என இருவேடங்களில் ரஜினி நடித்துள்ளார்.

ஆனால் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்‌ஷய்குமார், கிட்டதட்ட பல்வேறுவிதமான 12 கெட்-அப்களில் வருவதாக சொல்லப்படுகிறது.

எனவே அதற்கு வித்தியாசமான யுக்திகளை இயக்குனர் ஷங்கரும் சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டியும் செய்துள்ளார்களாம்.

கேஎஸ்.ரவிக்குமார் இயக்கிய தசாவதாரம் படத்தில் கமல் 10 வேடங்களை ஏற்றிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

In 2point0 movie Akshaykumar plays 12 get ups

குரு உச்சத்துல இருக்காரு பட பாடல்கள் சூட்டிங் முடிந்தபிறகு இசையமைத்த தாஜ்நூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’.

குருஜீவா நாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

குரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பாடலாசிரியர் சினேகன் வருகை தந்திருந்தனர்.

இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது.

வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குநரை, தயாரிப்பாளரை, படத்தில் பணிபுரிந்த கலைஞர்களை பாராட்டி படம் வெற்றி பெற வாழ்த்தினார்கள்.

குரு உச்சத்தில இருக்காரு திரைப்படத்திற்கு இசையமைத்த தாஜ்நூர், இதில் வேலை பார்த்தது தனக்கு ஒரு புது அனுபவத்தை தந்ததாகவும், பாடல் காட்சிகள் படப்பிடிப்புகள் முடிந்த பின்னால் இசையமைத்தது சவாலாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

சினேகன், பா. விஜய் மற்றும் மீனாட்சி சுந்தரம் இந்த திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள்.

விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Guru Uchaththula Irukkaru Movie audio launch news updates

மோடி திட்டம்; சிம்பு அதிரடி; இன்று மாலை தட்டுறோம் தூக்றோம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சரித்திரத்தில் பல நாட்களை மறக்கமுடியாது. அதுபோல்தான் இந்த நாளும் அமைந்துவிட்டது.

ஆம். கடந்த 2016ல் நவம்பம் 8ஆம் தேதியை இந்தியர்கள் யாரும் மறக்கமுடியாது.

அன்றைய தினம் இரவில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார் பிரதமர் மோடி.

இதனால் கறுப்பு பணம் ஒழியும் என தெரிவித்தார்.

இதற்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தாலும் நாட்களுக்கு ஆக ஆக பணத்தட்டுப்பாட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பல்வேறு எதிர்க்கட்சிகள் இன்றுவரை இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தினத்தை முன்னிட்டு டிமாண்டிசேஷன் ஆந்தம் என்ற பாடலை உருவாக்கியுள்ளனர்.

கபிலன் வைரமுத்து எழுதியுள்ள இந்த வரிகளுக்கு பாலமுரளிபாலு இசையமைத்துள்ளார்.

சிம்பு பாடியுள்ள இப்பாடலை இந்த பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

இப்பாடல் தட்டுறோம் தூக்றோம் என்ற படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் மோடியின் திட்டத்திற்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ளதா அல்லது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதா? என்பதை இன்று 6 மணிக்கு தெரிந்துக் கொள்ளலாம்.

Simbu crooned Demonetization Anthem for Thatrom Thookrom movie

More Articles
Follows