நேற்று அனிருத்; இன்று யுவன்; சக்க போடு போடு(ம்) சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் காட்டி வந்த சிம்பு முதன்முறையாக சக்க போடு போடு ராஜா என்ற படத்திற்காக இசையமைப்பாளராக அறிமுகமாகுகிறார்.

சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க, விவேக், ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சிம்புவின் நண்பர் விடிவி கணேஷ் தயாரித்துள்ளார்.

சில தினங்களுக்கு இப்படத்தில் அனிருத் பாடிய கலக்கு மச்சான் என்ற பாடல் புரோமோவை வெளியிட்டு அதன்பின் பாடலை வெளியிட்டனர்.

இப்போது மற்றொரு பாடலான ’காதல் தேவதை’ பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலை வைரமுத்து எழுத யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

அண்மையில் சந்தானம் அறிமுக பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.

அதில் முதன்முறையாக ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி
ஆகிய 5 நடன இயக்குனர்கள் பணியாற்றியுள்ளனர்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய படத்தொப்பை ஆன்டனி கவனித்து வருகிறார்.

நவம்பர் 14 தேதி சத்யம் திரையரங்கில் பிரமாண்டமான இசை விழா நடைபெற உள்ளது.

Simbu musical Sakka Podu Podu raja audio launch updates

 

https://www.youtube.com/watch?v=pLTv6VAJI_A

உலகத்தின் 3வது உயரமான ஹோட்டலில் 2.0 பட பிரஸ் மீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இது துபாய் நாட்டில் உள்ள பர்ஜ் பார்க் என்னும் இடத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வின் போது இப்பட இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் மேடையில் இதன் பாடல்களை பாட போகிறாராம்.

இது இந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் செய்யாத புதுமையான இசை வெளியீட்டு விழாவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு ஒரு நாள் முன்பு அதாவது அக்டோபர் 26ஆம் தேதி பிரஸ் மீட் ஒன்றை நடத்தவிருக்கிறார்களாம்.

இது Burj Al Arab Jumeirah என்ற இடத்தில் நடைபெற உள்ளதாம். இதுதான் உலகத்திலேயே 3வது உயரமான ஹோட்டல் என கூறப்படுகிறது.

இதனையடுத்து நவம்பர் 22ஆம் தேதி டீசரை ஹைதராபாத்தில் வெளியிட உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

பணம் பிரச்சினை தகராறு; முன் ஜாமீன் கேட்ட சந்தானம் தலைமறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வளசரவாக்கத்தைச் சேர்ந்த பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் (54) என்பவரிடம் கல்யாண மண்டபத்துடன் கூடிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட கோடிக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார் சந்தானம்.

ஆனால், ஒப்பந்தம் செய்யப்படி சண்முகசுந்தரம் நடந்து கொள்ளவில்லையாம்.

கட்டிடமும் கட்டவில்லை. பணமும் வந்தபாடில்லை என்பதால் இருவருக்கும் மோதல் முற்றியது.

சண்முகசுந்தரத்தின் அலுவலகத்துக்கு தன் உதவியாளர் ரமேஷ் என்பவருடன் சென்றுள்ளார் சந்தானம்.

அப்போது பேச்சுவார்த்தை கைகலப்பாக மாற, சந்தானம் சண்முகசுந்தரத்தை தாக்கியுள்ளார்.

அப்போது சண்முகசுந்தரத்தின் நண்பர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரை அடித்துள்ளார்.

இதனால் போலீஸில் இருதரப்பு புகார் கொடுக்க, தற்போது பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து புகாரை பெற்ற போலீஸார் இரண்டு தரப்பினர் மீதும் 506(1) கொலை மிரட்டல் விடுத்தல், 294(பி) அவதூறான வார்த்தைகளில் பேசுதல், காயம் விலைவித்தல் தாக்குதல் 324 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் முன் ஜாமீன் கேட்டு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் சந்தானம் எனத் தெரிய வந்துள்ளது.

Actor Santhanam apply Anticipatory Bail

விஜய்க்கு வழிவிட்டு விலகிய வில்லன் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா தெலங்கானாவில் வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.

அதே நாளில் விஷாலின் இரண்டு படங்கள் இந்த படத்துடன் மோதவுள்ளதை நாம் முன்பே நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

துப்பறிவாளன் படத்தின் தெலுங்கு பதிப்பு டிடெக்டிவ் என்ற பெயரில் வெளியாகிறது.

மேலும் மோகன்லால், ஹன்சிவா உடன் விஷால் இணைந்துள்ள வில்லன் என்ற மலையாள படம் கேரளாவில் வெளியாகிறது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் வில்லன் படத்தின் வெளியீட்டை கேரளாவில் தள்ளி வைத்திருக்கிறார்களாம்.

அதாவது அக்டோபர் 27ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

உன்னிக்கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தை லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.

தலைவர்-தளபதிக்கு அடுத்த இடத்தை பிடித்த தல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் அரசியலே சென்னை கோடம்பாக்கத்தை சுற்றி வரும்போது, சினிமா வியாபாரத்திற்கு மட்டும் சென்னை விதிவிலக்கா என்ன?

இந்நிலையில் இதுவரை வெளியான படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை செய்த படங்கள் இவைதான் என தகவல்கள் வந்துள்ளன.

அதில் அதிக வசூல் செய்த டாப்-5 படங்கள் என்ன? என்பதை பார்ப்போம்.

பாகுபலி 2- ரூ 18.85 கோடி
கபாலி- ரூ 12.35 கோடி
தெறி- ரூ 11.5 கோடி
எந்திரன் – ரூ 11.2 கோடி
விவேகம்- ரூ 10.05 கோடி

2018 ஜனவரியில் ரஜினி-கமல் கலந்துக் கொள்ளும் ஸ்டார் கிரிக்கெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழுக் கூட்டம், சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பழம்பெரும் நடிகைகள், காஞ்சனா, ஷீலா, வைஜெயந்தி மாலா ஆகிய மூவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் மூத்த பத்திரிகையாளர் சோ ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, கேளிக்கை வரியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று, நடிகர் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.

மேலும், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், மலேசியாவில் நட்சத்திரக் கிரிக்கெட்டோ அல்லது கலைநிகழ்ச்சியோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விஷால் கூறினார்.

மேலும் நடிகர் சங்கம் கட்டி முடித்த பிறகுதான் தன் திருமணம் என உறுதியாக தெரிவித்தார் விஷால்.

More Articles
Follows