சிவகார்த்திகேயன்-சந்தானம்-தினேஷ் போட்டியில் இணைந்தார் சல்மான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வருட கிறிஸ்துமஸ் தினத்திற்கு பல படங்கள் இடையே பலத்த போட்டி நிலவும் என தெரிகிறது.

கிறிஸ்துமஸ் தினம் டிசம்பர் 25 திங்கட்கிழமை வருவதால் டிசம்பர் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமையை குறிவைத்து பல படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வளர்ந்துள்ள வேலைக்காரன் படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதே நாளில்தான் சிம்பு இசையமைப்பில் சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படமும் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வளர்ந்துள்ள உள்குத்து படமும் டிசம்பர் 22ல் வெளியாகிறது.

இந்நிலையில் சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள டைகர் ஜிந்தா ஹே என்ற ஆக்சன் படமும் டிசம்பர் 22ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான்கான் படங்களுக்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் கிறிஸ்மஸ் நாளில் பலத்த போட்டி நிலவும் என சொல்லப்படுகிறது.

30 கிலோ உள்ள MG 42 துப்பாக்கியை கொண்டு 5000 குண்டுகளை சுட்ட சல்மான்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சல்மான்கான் டைகர் ஜிந்தா ஹே, சல்மான் பைட், சல்மான்கான் ஆக்சன், சல்மான்கான் படங்கள், செய்திகள், சல்மான்கான் டைகர் ஜிந்தா ஹே டிச22
டைகர் ஜிந்தா ஹே’ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நெஞ்சை உறைய வைக்கும் அப்படத்தின் பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகள் தான்.

நம்மை பதட்டத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்று வாயை பிளந்து பார்க்க வைக்கும், பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை கொண்ட, பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் டைகராக நடிக்கும் டைகர் ஜிந்தா ஹே 2017 ஆம் ஆண்டில் வெளியாகும் ஆக்ஷன் படங்களிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாகும்.

படத்தின் டைகர் கதாபாத்திரம், ஆபத்தான மற்றும் கனரக ஆயுதங்களை ஏந்தி சண்டையிடும் கதாபத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தில், சல்மான் வைத்திருக்கும் எந்திர துப்பாக்கியின் பெயர் MG 42. இதை வைத்து டைகர் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிதான் படத்தில் மிக முக்கியமான காட்சியாக உள்ளது.

இதுபோன்ற கனரக ஆயுதங்களை கொண்டு உருவாக்கப்படும் காட்சிகள் அவ்வளவு சுலபமல்ல.

MG 42 ஒரு நவீன தொழில் நுட்பத்தில் உருவான கனரக எந்திர துப்பாக்கியாகும். துப்பாக்கியின் எடை மட்டும் 25 முதல் 30 கிலோ இருக்கும்.

இதனுடன் தோட்டாக்களை கொண்ட மேகஸீன்களை இணைக்கும் போது இது ஒரு ஆபத்தான அழிவின் ஆயுதமாகவே மாறிவிடும்.

படத்தின் இயக்குனர் அலி அபாஸ் இக்காட்சி பற்றி கூறும் பொழுது “சல்மான் கான் போன்ற ஆக்ஷன் படத்திற்காகவே உடலை மெருக்கேற்றி வைத்திருக்கும் சிறந்த நடிகரை ஆக்ஷன் காட்சிகளில் காண்பிக்கும் போது அவருடைய உருவத்திற்கும், டைகர் ஜிந்தா ஹே போன்ற பலமான திரைக்கதைக்கும் சரியான ஆயுதமாய் MG 42 இருந்தது”.

மேலும், “படத்தின் ஹைலைட்டாக இருக்கும் இந்தக் காட்சிக்காக, சல்மான் 5000 குண்டுகளை சுட்டுள்ளார். இக்காட்சிகள் தொடர்ந்து 3 நாள்களுக்கு படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பின் முக்கிய தருணமாய் இந்நிகழ்வு இருந்தது. ஏனெனில் இந்தக் காட்சிகள் வெப்பமான இடத்தில் படம்பிடிக்கப்பட்டதோடு, கனரக துப்பாக்கியும் விரைவிலேயே சூடாகி விடும் என்பதால் நாங்கள் ஒரே மாதிரியான இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி ஒரு சவாலான சூழ்நிலையில் படமாக்கினோம்”

சல்மான்கான், கேட்ரினா கைஃப் மீண்டும் இனணயும் இந்த டைகர் ஜிந்தா ஹே திரைப்படம் பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் உலக தரம் வாய்ந்த ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும்.

டைகர் ஜிந்தா ஹே வரும் டிசம்பர் 22-ல் வெளியாகிறது.

55 வருசம் இங்க இருக்கேன்; நானும் தமிழன்தான்… விஷால் தந்தை ஜி.கே.ரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரமான நிவின்பாலி தமிழில் அறிமுகமாகும் படம் ரிச்சி.

கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் நிவின்பாலியுடன் நட்டி நட்ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி, விஷால் தந்தை ஜிகே. ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வருகிற டிசம்பர் டிசம்பர் 8-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இன்று மாலை இதன் ட்ரைலரை வெளியிடவுள்ளனர்.

இந்த விழாவில் ஜி.கே.ரெட்டி பேசியதாவது:

தற்கொலை செய்துக் கொண்ட அசோக் குமார் எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.

ஒரு இளைஞனான நிவின்பாலியுடன் சேர்ந்து நடித்தது நல்ல அனுபவம்.

எனக்கு இளைஞர்களுடன் வேலை செய்யப் பிடிக்கும் ஏனென்றால், நானும் ஒரு இளைஞன்தான்.

‘ரிச்சி’ பட வாய்ப்பு வந்தபோது நடிக்கலாமா? என்று, எனது மகன் விஷாலிடம் கேட்டேன். நடியுங்கள் என்றார்.

நான் மிகவும் கஷ்டப்பட்டுதான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.

சென்னை எனக்கு பிடித்த ஊர். இங்கு நான் 55 வருசம் வாழ்ந்திருக்கிறேன்,

அதனால், நானும் தமிழன் தான். தமிழ்நாடுதான் சினிமாவிற்கு தாய் நாடு.

என்னை பார்க்கும் பலபேர் 55 அல்லது 60 வயது எனக்கு இருக்கும் என நினைப்பார்கள். ஆனால், எனக்கு வயது 79 ஆகிறது. நான் ஒரு அத்லெட்டிக் (தடகள வீரன்.) எல்லோரும் முதலில் உங்கள் உடலைப ஆரோக்கியமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.” இவ்வாறு ஜிகே.ரெட்டி பேசினார்.

கார்த்திக் சுப்புராஜின் இரண்டு படங்களில் நடிக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு நேரத்தில் பல படங்களை ஒப்புக் கொண்டு அதை அசால்ட்டாக முடித்துக் கொடுப்பவர் தனுஷ்.
தற்போது இவரது நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, ஆகிய படங்கள் உருவாகிவருகிறது.

இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் படம், மாரி2, துரை செந்தில் குமார் ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்னகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை வுண்டர்பார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மேயாதமான் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் 2; ராஜமௌலி 2; விஜய் 1…. மெர்சலாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் பல படங்கள் பட்டைய கிளப்பி வசூல் படைத்துள்ளன.

ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே ரூ. 100-200 கோடி வரை வசூல் செய்துள்ளன.

ஆனால் அண்மையில் வெளியான விஜய்யின் மெர்சல் ரூ. 250 கோடி வரை உலகளவில் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குமுன்பு ரஜினியின் எந்திரன் மற்றும் கபாலி ஆகியவை இந்த வசூலை கடந்துள்ளது.

அதுபோல் ராஜமௌலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களும் இந்த தொகையை கடந்துள்ளது.

தற்போது மெர்சல் படம் மூலம் விஜய்யும் இந்த வரிசையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நமீதா தன் காதலரை மணந்தார்; சரத்குமார்-ராதிகா நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நமீதா.

இதனையடுத்து சரத்குமார், சத்யராஜ் ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து திருப்பதியில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று திருப்பதி இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் நமீதாவுக்கும், வீரேந்திர சவுத்திரிக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மேலும் நடிகர் சரத்குமார் தன் மனைவி ராதிகாவுடன் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்.

More Articles
Follows