சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படப் பூஜையுடன் படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார் திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிபிராஜ்-நந்திதா – பூஜா குமார் நடிக்கும் “கபடாடரி” படப்பிடிப்பு இன்று (01.11.2019) காலை சென்னையில் முறையான சடங்குகளுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிபிராஜ் மற்றும் தொழில்நுட்ப குழுவினருடன் படத்தின் நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். பூஜை முடிந்ததும் படப்பிடிப்பும் ஆரம்பமானது. திரையுலக மார்கண்டேயன் நடிகர் சிவகுமார் முதல் காட்சிக்கு கிளிப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார். திரைப்பட தயாரிப்பாளர் சசி, தியா மூவிஸ் தயாரிப்பாளர் பி. பிரதீப் (கொலைகரன் புகழ்), தயாரிப்பாளர் கமல் போஹ்ரா, தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் மற்றும் சிபிராஜின் ‘வால்டர்’ புகழ் இயக்குனர் அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சத்யா, சைத்தான் புகழ்) இயக்கி, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் லலிதா தனஞ்சயன் தயாரிக்கும் இப்படத்தில் நந்திதா, விஸ்வரூபம் புகழ் பூஜா குமார், நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதீஷ்குமார் மற்றும் இன்னும் சில பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

படக்குழு இன்று (நவம்பர் 1, 2019) முதல் முழு வீச்சில் படப்பிடிப்பு நிகழ்த்தி, ‘கபடதாரி’யை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகளவில் வெளியிடவுள்ளது.

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழின் பல்துறை வல்லமைகளில் ஒருவராக போற்றபடுபவர் லக்‌ஷ்மி ராமகிருஷணன். இணையம், தொலைக்காட்சி, திரைகளில் நடிப்பால் மட்டுமன்றி, சொல்வெதெல்லாம் உண்மை போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கியது, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். அவரது சமீபத்திய படமான “ஹவுஸ் ஓனர்” தமிழ் ரசிகர்கள் கடந்து உலகெங்கும் அங்கீகாரம் பெற்று வருகிறது. இந்திய தேசிய திரைப்படவிழா 2019 ல் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இணைய யூடுயூப் தளத்தில், வாழ்வில் கொடுமைகளை சந்தித்து வாழ்வில் மாற்றக் வேண்டி நிற்கும் மனிதர்களை சந்தித்து உதவி வழங்கும் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவுள்ளார்.

இது குறித்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது….

முதலில் பல்துறைகளிலும் என் வேலைகள் அனைத்தையும் கவனித்து, பாராட்டி ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நடிப்பு, இயக்கம், நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குதல் என எந்த வேலையையும் நான் நல்லபடி செய்ததற்கு நீங்கள் அளித்த ஆதரவே காரணம். சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி மூலம் பலர் உந்தப்பட்டு தங்கள் வாழ்வில் தெளிவடைந்ததை கூறும்போது அது பெரு மகிழ்ச்சி அளிக்கும். பலரும் என்னை நேரிலும் இணையம் வழியும் தங்கள் பிரச்சனைகளை என்னை உறவாய் நினைத்து கூறுவதும், தீர்வு கேட்பதும் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஊக்கத்தினால் நான் தற்போது எனது நான்காவது படைப்பான ஹவுஸ் ஓனர் படத்திற்கு பிறகு “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க உள்ளேன். இது முற்றிலும் நம் வாழ்வியலை மேம்படுத்தும், மதிக்கும் நிகழ்ச்சியாக இருக்கும். இந்நிகழ்ச்சி என்னை சந்தோஷப்படுத்தும் அதே நேரத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவரின் வாழ்வை மாற்றக்கூடியதாக இருக்கும் என தீவிரமாக நம்புகிறேன். இந்நிகழ்ச்சி பார்க்கும் உங்களையும் ஒரு மாற்றத்திற்குள் ஈர்த்து மகிழ்விக்கும். இந்நிகழ்ச்சியை சமுதாயத்திற்கு என் வழியில் நான் செய்யும் நன்றிக்கடனாக நினைக்கிறேன். உங்கள் அன்பும் ஆதரவையும் எப்போதும் போல் அளிக்க வேண்டுகிறேன்.

அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகைச்சுவை கலந்த காதல் சித்திரமான ‘ஓ மை கடவுளே’ தென்றல் காற்றைப்போல் மனதுக்கு இதமான அனுபவத்தைத் தரத் தயாராகிறது. அசோக் செல்வன் ரித்விகா சிங் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் வெகுஜன ரசனைக்கேற்ப அமைந்து அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுமையாக நிறைவடைந்திருக்கிறது.

ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் டில்லிபாபு இது பற்றி கூறுகையில்

“ஓ மை கடவுளே படத்தில் பங்கு பெற்ற துடிப்பு மிக்க இளைஞர் குழு துவக்கத்திலிருந்தே என்னை திருப்திபடுத்தத் தவறவில்லை. இயக்குநர் அஸ்வத்தின் புதுமையான கதை சொல்லும் முறையாகட்டும், அல்லது டீஸரில் தென்பட்ட பிரதான பாத்திரங்களான அசோக் செல்வன், ரித்விகா சிங் மற்றும் வாணி போஜனின் நளினமானமாகட்டும் அனைத்தும் நேர்மறையாகவே அமைந்திருக்கின்றன.

ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஓ மை கடவுளே படம் இளைஞர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும் என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். ஆர்வம் மிக்க படத்தின் தொழில் நுட்பக் குழு மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக செய்திருக்கின்றது. பாடல் மற்றும் முன்னோட்டத்தை வெளியிடும் தேதியையும் திரைக்கு வரும் தேதியையும் வெகு விரைவில் அறிவிப்போம்” என்றார்.

ஹேப்பி ஹை நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் அபிநயா செல்வம் கூறியதாவது…

“படப்பிடிப்பு நிறைவடைந்த உற்சாகத்தில் இருக்கிறோம். இது எங்கள் முதல் தயாரிப்பு என்பதால் அனைத்தும் கனவுபோல் இருக்கிறது. பின் தயாரிப்புப் பணிகளும், வெளியீட்டு திட்டமிடலும் இருக்கிறது என்றாலும், டில்லி பாபு சாருடன் படத்தயாரிப்பில் இணைந்திருப்பதால், மிகச் சரியான நேரத்தில் சரியான முறையில் படத்தை அவர் வெளியிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வம்-அசோக் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, விது அய்யணா ஒளிப்பதிவு செய்கிறார். வாணி போஜன் மற்றும் சாரா முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதி ராம் திலக்குடன் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

‘அணி கிரியேஷன்ஸ்’ சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஜாக்குவார் தங்கம் ,ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,

இப்படம் சைக்கோ திரில்லர் வகை சார்ந்தது இதில் நாயகனாக கலைஞர் டிவி தொகுப்பாளர் தணிகையும், நாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லி நடிக்கிறார் வில்லனாக விஜய் டிவி புகழ் பாண்டி கமல் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றத்திலும் பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.

நான் இதற்கு முன்பாக பல படங்களுக்கு துணை மற்றும் இணை பணியாற்றியுள்ளேன்.மேலும் சில குறும்படங்களை இயக்கி உள்ளேன் அதுமட்டுமல்லாது பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பல வருடங்களாக சவுண்ட் இன்ஜினியர் பணியாற்றியுள்ளேன்.இப்படிப்பட்ட அனுபவத்தை கொண்டும் இதனால் ஏற்பட்ட நட்பு வைத்தும் நண்பர்களை ஒன்றிணைத்து இப்படத்தை தயாரிக்கிறேன். இப்படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் சைக்கோ த்ரில்லர் வகையை சேர்ந்தது.

இப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்க உள்ளார். இவர் மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புறநானூற்று பாடல் வரியை தன் படத்தலைப்பாக்கிய மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எந்த கேரக்டர் என்றாலும் தயங்காமல் நடித்து பெயர் வாங்கி விடுபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

இவர் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் நவம்பர் 15ல் வெளியாகிறது.

ஜெனநாதன் இயக்கும் லாபம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதியின் 33வது படத்தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரித்து வருகிறார்.

இந்த படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளீர் எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் வாக்கியம் சங்கக்கால புலவர் கனியன் பூங்குன்றனாரின் புறநானூற்று பாடலில் உள்ள வார்த்தையாகும்.

இணையத்தில் ட்ரெண்டாகும் அட்லி & ஷாருக்கான் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி.

அதன்பின்னர் ராஜா ராணி என்ற படத்தை இயக்கிய ஒட்டு மொத்த காதலர்களையும் கவர்ந்தார்.

இதனையடுத்து விஜய்யின் தெறி படத்தை இயக்கினார். இந்த படம் ஹிட்டடிக்கவே விஜய்யின் மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

பிகில் படம் தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனிடையில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை அட்லி இயக்கவுள்ளதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

தற்போது அது உறுதியாகியுள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.

இந்த படத்திற்கு சங்கி என்ற தலைப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு இணையத்தில் ட்ரெண்ட் ஆகிறது.

நவம்பர் 2ஆம் தேதி ஷாரூக்கான் பிறந்தநாள் அன்று பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இது நிஜமா? அல்லது பொய்யா? விரைவில் தெரியவரும்.

Sanki என்றால் ‘சாதாரணமானவன் அல்ல’ என்று பொருள் உள்ளதாம்.

More Articles
Follows