‘கொடி வீரன்’ படத்தில் சசிகுமார் உடன் 3 நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சசிகுமார் தன் கம்பெனி புரடொக்சன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கும் 10வது படம் ‘கொடிவீரன்’.

இப்படத்தை முத்தையா இயக்க, இதன் பணிகள் தற்போது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் சசிகுமாருடன் மஹிமா, சனுஷா, பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்க, எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதை பார்த்தோம்.

தற்போது மற்றொரு நாயகியாக பூர்ணாவும் இணைந்திருக்கிறார்.

இத்தகவலை சசிகுமாரே தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Sasikumar Muthaiya combo KodiVeeran has 3 heroines

 

இரண்டு ஹீரோ-ஹீரோயின்கள் அறிமுகமாகும் “வெற்றிப்பாதை”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி வேல் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பஞ்ச் பாரத்தின் புதிய திரைப்படம் “வெற்றிப்பாதை”.

இப்படத்தின் பூஜை சென்னை வளசரவாக்கம் கேரளா ஹவுசில் நடைப்பெற்றது.”

இப்படத்தின் கதாநாயகர்களாக புதுமுகங்கள் சந்தோஷ் மற்றும் விவேக் அறிமுகமாகிறார்கள்.

இவர்களுக்கு ஜோடியாக ராசி மற்றும் பிரியங்கா கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.

இதில் கதை, திரைக்கதை, வசனம் பஞ்ச் பரத் எழுத, குணா இயக்குகிறார்.

ஸ்ருதி குமார் இசையில், அசோக் ஒளிப்பதிவு செய்ய, அட்சயா ஆனந்த், ஈஸ்வர் பாபு நடனம் அமைக்க, மக்கள் தொடர்பை செல்வரகு கவனிக்கிறார்.

மொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெறுகிறது. இதன் படப்பிடிப்பு கடலூர், பாண்டிச்சேரி, சென்னை அதன் சுற்று புறங்களில் நடைபெறுகிறது.

VetriPaadhai movie pooja and shooting news updates

ஐரோப்பாவில் இருந்து இந்தியா திரும்பும் விஜய் 61 டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கும் விஜய் படத்திற்கு இதுவரை பெயரிப்படவில்லை.

எனவே தற்காலிகமாக தளபதி 61 என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதமாக ஐரோப்பா நாட்டில் விஜய், காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை படமாக்கி வந்தார் அட்லி..

இந்நிலையில் இன்றோடு இதன் சூட்டிங்கை அங்கு முடித்துவிட்டு இந்தியா திரும்புகிறதாம் படக்குழு.

இதனையடுத்து, விரைவில் விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜீன் முதல் படமாக்கவிருக்கிறாராம் தெறி இயக்குனர்.

Thalapathy 61 has been finally wrapped today May 29th at Europe

சூர்யா-தனுஷ் உடன் இணைய ஆசைப்படும் ஸ்ரீதிவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார் ஸ்ரீதிவ்யா.

இந்த ஒரே படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடையே பாப்புலர் ஆனார்.

இதனையடுத்து விஷால், விக்ரம் பிரபு, கார்த்தி, விஷ்னு, அதர்வா ஆகியோருடன் இணைந்தார்.

தற்போது மீண்டும் அதர்வா உடன் இணைந்து ஒத்தைக்கு ஒத்த என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இளம் ஹீரோக்களுடன் இணைந்து விட்டாலும், தற்போது சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசையாம்.

இதனை அவரே ஓபனாக தெரிவித்தும் விட்டார்.

சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் அம்மணிக்கு சான்ஸ் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sri Divya wish romance with Suriya and Dhanush

சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி விலக இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படத்தை போல், மிகப்பிரம்மண்டாக சங்கமித்ரா படத்தை உருவாக்க இருக்கிறார் சுந்தர் சி.

இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படக்குழுவினர் அண்மையில் கான்ஸ் திரைப்பட விழாவில் கூட கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் இருக்கிறாராம்.

பெரிய படம், இரண்டு வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார்.

தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.

படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார்.

ஆனால், சங்கமித்ரா படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தாம்.

முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை என்றும் படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவே விலகலுக்கான காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார்.

தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்துக்காக தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

Shrutihaasan walks out of Sundar Cs epic Sangamithra

‘காலா’ ஜீப் இன்னும் இருக்கா..? நாங்க வாங்குறோம்.. – மஹிந்திரா சேர்மன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது.

இந்த போஸ்டரில் ரஜினி உட்கார்ந்திருக்கும் ஜீப்புக்கு தற்போது அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.

இந்த ஜீப் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனத்தின் ‘தார்’ மாடல் ஜீப் ஆகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மஹிந்திரா சேர்மன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது..

‘காலா’ பட போஸ்டரில் ரஜினி அமர்ந்திருக்கும் தார் ஜீப் பயன்படுத்துவது குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.

அந்த காரை விலைக்கு வாங்கி, எங்கள் நிறுவனத்தின் ஆட்டோ அருங்காட்சியகத்தில் வைக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து மற்ற ஒரு பதிவில், ‘அந்த கார் படத்தின் போஸ்டரில் போட்டோஷாப் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த கார் தற்போது ஒரு கலெக்டரிடம் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows