தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதனையடுத்து மறைந்த ஜெயலலிதாவைத் தவிர மீதமுள்ள 3 பேரும், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது சசிகலாவின் தண்டனைக் காலம் நிறைவு பெறவுள்ளது.
எனவே சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்? என்று கேள்வி எழுந்தது.
விரைவில் விடுதலையாகவுள்ள நிலையில் கடந்த மாதம் அபராத தொகையை செலுத்தினார் சசி.
அதன்படி ஜனவரி 27 காலை 10 மணி அளவில் சசிகலா விடுதலை செய்யப்படுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது கர்நாடக சிறைத்துறை.
இந்தநிலையில் இன்று ஜனவரி 20ஆம் தேதி சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடனடியாக சிறை வளாகத்திலுள்ள டாக்டர்கள் சசிகலாவுக்கு சிகிச்சையளித்தனர்.
தற்போது, சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என தகவல்கள் வந்துள்ளன.
Sasikala shifted to Bowring Hospital after developing breathing difficulties.
