Exclusive லாரியில் கோடிக்கணக்கில் பணம்; சர்காரில் உண்மையை உடைக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016 சட்டன்றத் தேர்தல் சமயத்தின் போது, ரூ. 570 கோடிக்கும் அதிகமான தொகை 3 கண்டென்யர்கள் லாரியில் சிக்கியது.

ஒரு பக்கம் இது வங்கிக்கு சொந்தமான பணம் என கூறப்பட்டது.

அவை யாருக்கு சொந்தமான பணம்? என்பது மர்மமாகவே உள்ளது. ஆனால் பணம் சேர வேண்டிய இடத்திற்கு சேர்ந்து விட்டதாகவும் தகவல்கள் வந்தன.

ஆக இது ஒரு அரசியல் விளையாட்டு என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இது போன்ற ஒரு காட்சி தற்போது விஜய் நடித்து வரும் சர்கார் படத்தில் இடம் பெறுவதாக கூறப்படுகிறது.

அந்த கோடிக்கணக்கான பணம் உள்ள லாரியை மடக்குவாராம் விஜய்.

இதனால் அரசியல்வாதிக்கும் அவருக்கும் பெரிய பிரச்சினை உருவாகும் எனவும் தெரிகிறது.

அதன்பின்னர் மக்கள் மத்தியில் அந்த உண்மையை விஜய் உடைப்பார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ஆக சர்கார் படம் அரசியல் சரவெடியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Sarkar movie will reveal real Political stunts of Tamilnadu

மணிரத்னத்தின் *செக்கச் சிவந்த வானம்* டிரைலர் எப்படி இருக்கு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ள செக்கச் சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

படத்தில் சேனாதிபதி என்ற கேரக்டரில் தொழிலதிபராக வருகிறார் பிரகாஷ்ராஜ்.

அவருக்கு முதல் மகன் அரவிந்த்சாமி, 2வது மகன் அருண் விஜய், 3வது மகன் சிம்பு என 3 மகன்கள் உள்ளனர்.

அரவிந்த்சாமியின் மனைவியாக ஜோதிகா, அருண்விஜய் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு ஜோடியாக டயானா எரப்பா நடித்துள்ளனர்.

விஜய்சேதுபதிக்கு ஜோடி இல்லை எனத் தெரிகிறது.

மகன்கள் மூன்று பேரும் தங்களது அப்பாவின் இடத்தை பிடிக்க முயற்சி செய்கின்றனர்.

இதில் மற்றொரு நாயகன் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சிம்புவின் கேரக்டர் அப்பாவுக்கு பிடிக்காத மகன் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விஜய்சேதுபதி, தனது நண்பனான அரவிந்த்சாமி மூலம் பிரகாஷ்ராஜின் இடத்தை பிடிக்க நினைப்பதை மையப்படுத்தி கதை நகர்வதாக தெரிகிறது.

உனக்கு யாராவது பழைய நண்பன் இருந்தால் அவனை நம்பாதே என்று டிரைலர் முடிவில் கூறுகிறார் அரவிந்த்சாமி.

குடும்பம் மற்றும் நட்புக்கு இடையே நடக்கும் போராட்டத்தை மையப்படுத்தி காதலும் கூடலும் உள்ளதாக படத்தை எடுத்துள்ளார் மணிரத்னம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டலான பின்னணி இசையில் டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த செக்கச் சிவந்த வானம் படம் செப்டம்பர் 28-ஆம் ரிலீசாகிறது.

Chekka Chivantha Vaanam trailer review

ஜானி படத்தில் இசையமைத்து நடிக்கும் பிரசாந்த்; டீசரை மணிரத்னம் வெளியிடுகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாஹசம் படத்தை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் நடித்துள்ள படம் ஜானி.

இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க, இவர்களுடன் பிரபு, தேவதர்ஷினி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள வரும் இப்படத்தை வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார்.

இவர் எமன் பட இயக்குனர் ஜீவா ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

இப்படத்தில் பாடல்களை இடம் பெறவில்லை என்றாலும் இப்படத்திற்கு பின்னணி இசையை நடிகர் பிரசாந்தே மேற்கொள்கிறார்.

இப்படத்தை பிரஷாந்த்தின் தந்தையும் பிரபல நடிகருமான தியாகராஜன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 27-ம் தேதி ஜானி பட டீசரை இயக்குநர் மணிரத்னம் வெளியிடுகிறார்.

Prashanths Johnny teaser will be released by Maniratnam on 27th August

 

காந்தி ஜெயந்தி நாளில் சர்கார் இசை வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “சர்கார்”.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) அன்று நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தற்போது இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

எம்ஜிஆர் படங்கள் போல் விவேக்கின் *எழுமின்* அமையும்; அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”.

தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” திரு. பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் பேசிய “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு,

“இவ்வளவு மாணவர்கள் மத்தியில் இந்த விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெறுகிறது. நடிகர் விவேக் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். அவர் பல நல்ல கருத்துக்களை இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதினால் தான் வாழும் கலைவாணராக இருக்கிறார்.

வருகின்ற காலங்களில் இளைஞர்கள் தற்காப்பு கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமான கருத்தைக் கூறும் இந்தப் படம் வரவேற்பை பெறவேண்டும். முன்பெல்லாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் படங்கள் எல்லாம் எங்களுக்கு பாடங்கள்.

அப்படி இந்த “எழுமின்” திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கான பாடமாக அமைய வேண்டும். தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படித் தான் சிலம்பாட்டமும். அதுவும் வீரத்தின் அடையாளமாக இருக்கிற ஒரு விளையாட்டு தான்.

தமிழ் சினிமா நூற்றாண்டு காணும் இந்த காலத்தில், “எழுமின்” திரைப்படம் ஒரு முக்கியமான கருத்தை எடுத்து வருகிறது. இப்படம் கூறுவதைப் போல, தற்காப்பு கலைகளை மாணவர்கள் அவசியமாக கற்க வேண்டும். கோவாவிற்கு திரைப்பட விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு தமிழ் சினிமாக்களுக்கு நல்ல மரியாதை இருக்கிறது.

காரணம் இதைப் போல அழுத்தமான கதைகளுடன் இன்னமும் இங்கு படங்கள் வந்து கொண்டிருப்பதால் தான். எனவே, நம் தமிழ் இளைஞர்கள் “எழுமின்” திரைப்படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி பேசும்போது,

“இரண்டு அமைச்சர் பெருமக்கள் இங்கே வந்திருக்கிறார்கள். ஒருவர் விளையாட்டுத் துறை, இன்னொருவர் செய்தித்துறை, இவர்கள் முன்னிலையில் ஒரு பணிவான கோரிக்கையை வைக்கிறேன்.

தயவுசெய்து இந்த “எழுமின்” திரைப்படத்தை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவியரும் பெற்றோருடன் பார்ப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். அதற்கு இந்த திரைப்படத்திற்கு ஏதேனும் சிறப்பு அந்தஸ்து வழங்கி, வரிவிலக்கு அளித்திட ஆவண செய்ய வேண்டும்.

இதனைக் கேட்பதற்கான காரணம், இந்த திரைப்படம் நிச்சயமாக சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்ச விழிப்புணர்வையாவது மாணவர்களுக்கு வழங்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமெனில், இந்தத் திரைப்படத்தில் நடிக்க வந்த பிறகு “கிக் பாக்சிங்” கற்றுக்கொண்ட சிறுவன் இப்போது ஸ்டேட் லெவலில் தங்கப் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார். தற்காப்பு கலைகளின் முக்கியத்துவத்தை நிச்சயமாக “எழுமின்” திரைப்படம் மாணவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது,

“மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. காரணம், விவேக் நடித்த நிறைய படங்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் இசையமைத்திருக்கிறேன். அப்போது ஒன்றை புரிந்துகொண்டேன், விவேக் சார் ஒரு நல்ல மோட்டிவேட்டர். தொடக்கத்தில் நிறைய குழப்பங்களோடு இருந்த என்னை, வழிநடத்தியவர்களில் விவேக் சார் முக்கியமானவர்.

சுந்தர். சி இயக்கத்தில் “தகதிமிதா” என்ற படத்திற்கு நான் இசையமைத்திருந்தேன். அந்த படத்தின் பாடல்களை பிடித்திருந்ததால் என்னிடம் தொலைபேசியில் விவேக் சார் பேசினார்.

“காதலை யாரடி முதலில் சொல்வது” என்ற பாடலை மிகவும் பாராட்டி பேசினார். அப்போது அவர் ஒன்றைச் சொன்னார், “இறைவன் உங்களைப் பார்த்து சிரிக்கணும்” என்று. காலம் போக போகத் தான் தெரிந்தது அன்று அவர் சொன்னதற்கான அர்த்தம்.

“Arise Awake Achieve” என்று ஒவ்வொருவருக்கும் யாராவது ஒருவர் சொல்ல வேண்டும். இளைஞர்களை மோட்டிவேட் செய்யக் கூடிய இந்த “எழுமின்” மாதிரியான சினிமாக்கள் நிறைய வரவேண்டும். இருட்டு அறைக்குள்ளே நல்லதையும் விதைக்க முடியும் என்பதனை நிரூபிக்க வேண்டும். அந்த வகையில் நிச்சயம் “எழுமின்” மாணவர்களை மொட்டிவேட் செய்யும்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் “ஹிப்-ஹாப்” ஆதி பேசும்போது,

“எழுமின் முக்கியமான திரைப்படம். இது முழுக்க முழுக்க மாணவர்களுக்கானது. இன்றைய மாணவர்கள் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நல்ல திரைப்படமாக இது இருக்கும் என நம்புகிறேன். காரணம், 2020-ஆம் அண்டில் மாணவர்கள் நிறைந்த தேசமாக இந்தியா இருக்கும். நம் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்தால் 2027-இல் நிச்சயம் இந்தியா வல்லரசாகும்.

இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போதே, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்பது தெரிகிறது” என்று பேசினார்.

ஜல்லிக்கட்டு போராளிகளே சூப்பர் ஸ்டார்கள்…; எழுமின் விழாவில் விவேக் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேக் நடித்துள்ள எழுமின் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகர் விவேக் பேசும்போது…

“தமிழ்நாட்டில் சமீபமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி இருக்கிறார்கள். “ஜல்லிக்கட்டு” போராட்டத்தை முன் நின்று நடத்தி வென்று காட்டிய மாணவர்கள் தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள். நான் 4பேருக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

முதலாவது, தன்னம்பிக்கையால் உயர்ந்த நடிகர் தனுஷுக்கு. நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து ஒரு பாடலைப் பாடி கொடுத்திருக்கிறார். இரண்டாவது இசையமைப்பாளர் அனிருத்திற்கு. மூன்றாவது நன்றி, இசையமைப்பாளர்கள் ஆதி மற்றும் இமான் இருவருக்கும்” என்று கடகடவென நன்றி தெரிவித்து சுருக்கமாய் முடித்துக் கொண்டார்.

விழாவில் நடிகர் தனுஷ் பாடிய “எழடா” பாடலும், இசையமைப்பாளர் அனிருத் பாடிய “எழு எழு” பாடலும் மாணவர்களுக்காக பிரம்மாண்டமான திரையில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது

More Articles
Follows