சூப்பர் ஸ்டாருடன் இணைந்த சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் சில நாட்கள் அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடித்து வரும் ‘ராஜகுமாரா’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இதில் நாயகனின் தந்தையாக நடிக்கிறாராம் சரத்குமார்.

இப்படத்தை தொடர்ந்து, வேறு புதிய படங்களில் நடிக்க தீவிரமாக கதை கேட்டு வருகிறார் சரத்.

இதனிடையில் தனது மகள் ரேயானின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் கலாம் நினைவு நாளில் விவேக் அமைதி பேரணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் ஜனாதிபதி என இந்திய மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் அப்துல்கலாம்.

அவர் கடந்தாண்டு ஆண்டு ஜீலை 27ஆம் தேதி மறைந்தார். தற்போது ஓராண்டு நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் அவரது நினைவு நாளை முன்னிட்டு, 24ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) ‘கிரீன் கலாம்’ என்ற அமைப்பு பெயரில் அமைதி பேரணி நடைபெறவுள்ளது.

காலை 7.30 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை முதல் காந்தி சிலை வரை இப்பேரணி நடைபெறும் இந்த பேரணியில் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்துகொள்கிறார்கள்.

பங்கு பெறுபவர்களுக்கு மரக்கன்றுகளை விவேக் பரிசாக வழங்கவிருக்கிறார்.

இதுகுறித்து விவேக் கூறியதாவது..

அப்துல்கலாம் ஐயா என்னை அழைத்து ஒரு கோடி மரக்கன்றுகளை நட கூறினார்.

இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். மேலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

அதற்கு ‘கிரீன் கலாம்’ அமைப்பு முழு அர்ப்பணிப்போடு செயல்படும்.

இதுவரை பெரும்பாலும் பள்ளி, கல்லூரி வளாகங்களிலேயே நடப்பட்டது. அங்குள்ள மாணவர்கள் பராமரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் நடமாடும் இடங்களில் இனி நட உள்ளேன். அதற்கு மக்கள், தொழிலதிபர்களின் ஆதரவு தேவை.”

இவ்வாறு விவேக் தெரிவித்தார்.

‘கபாலி’க்கு சவால் விடும் ‘சுல்தான்’ பட வசூல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ள சுல்தான் படம் கடந்த ஜீலை 6ஆம் தேதி வெளியானது.

அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியிருந்த படத்தில் நாயகியாக அனுஷ்கா சர்மா நடித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்பில் ரிலீசான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வெளியான 3 நாட்களிலேயே ரூ 105 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது வரையில் ரூ. 501 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் மட்டும் ரூ 365.60 கோடியும் வெளிநாடுகளில் ரூ 136.33 கோடியும் வசூலித்துள்ளதாம்.

இனிவரும் நாட்களில் இன்னும் எகிறும் எனவும் கூறப்படுகிறது.

ரஜினி நடித்துள்ள கபாலி படம் ரூ. 500 கோடியை வசூலிக்கும் என அதன் தயாரிப்பாளர் தாணு அண்மையில் தெரித்திருந்தார்.

தற்போது கபாலிக்கு சவால் விடும் வகையில் சுல்தான் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுல்தான் வசூல் விவரப்பட்டியல்… (10 நாள் வரை)

Sultan Day WiseIndiaOverseas
1st DayRs 36.54 CrRs 20.41 Cr
2nd DayRs 37.20 CrRs 18.79 Cr
3rd DayRs 31.66 CrRs 17.65 Cr
1st WeekendRs 105.50 CrRs 56.87 Cr
4th DayRs 37.10 CrRs 15.20 Cr
5th DayRs 38.21 CrRs 19.27 Cr
6th DayRs 15.54 CrRs 6.20 Cr*
7th DayRs 12.92Rs 4.10 Cr*
1st WeekRs 208.82 CrRs 102.23 Cr*
8th Day Rs 10.82 Cr Rs 3.04 Cr*
9th DayRs 9.52 Cr Rs 2.10 Cr*
10th Day   Rs 8.25 Cr* Rs 1.99 Cr*
Total  upto 10th dayRs 237.41 Cr*Rs 109.36 Cr*
Worldwide TotalRs 346.77 Cr*

ஜெயம் ரவியுடன் கைகோர்க்கும் சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிருதன் படத்தை தொடர்ந்து, போகன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், சாந்தனு நடித்துள்ள ‘முப்பரிமாணம்’ படத்தின் டீசரை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறாராம்.

அதிரூபன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை ‘சமயாலயா கிரியேஷன்ஸ்’ தயாரித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்ணா… இனிமே ஹோட்டல்ல ‘கபாலி’யும் கிடைக்கும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை முதல் நாள் முதல் காட்சியை தியேட்டர்களில் பார்த்துவிட கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக கபாலி படத்தை ஹோட்டல்களிலும் ரிலீஸ் செய்கின்றனர்.

பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள க்ரவுன் பிளாஸா மற்றும் இலகங்காவிலுள்ள ராயல் ஆர்ச்ஸிட், குமரக்ருபா சாலையிலுள்ள லலித் அசோக் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஒரு நாளைக்கு 4-5 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாகவும் முதல் 3 நாட்களுக்கு மட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

இதற்காக குறிப்பிட்ட சில துறைகளிடம் இருந்து அனுமதி பெற விநியோகஸ்தர்கள் முயற்சித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவை சந்தித்த தனுஷின் மகன் யாத்ரா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை மணந்தார் தனுஷ்.

தற்போது இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு குழந்தைகள் உள்ளனர்.

இதில் யாத்ரா படிக்கும் பள்ளியில் மாணவர்களை இன்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும் இருந்துள்ளார்.

அவரும் பள்ளி மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் அன்பாக பேசி சாக்லேட் கொடுத்தார்.

அப்போது ரஜினியின் பேரன் யாத்ராவிடம் முதல் அமைச்சர் பேசியுள்ளார்.

More Articles
Follows