இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கிலும் இயக்கும் சந்தோஷ் பி ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் ராஜா இயக்கத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

அடல்ட் ஹாரர் காமெடிப் படமாக இது உருவாக்கப்பட்டது.

இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷா ரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பல கிடைத்தாலும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

ஆதித் அருண் என்பவர் இதில் நாயகனாக நடிக்கிறாராம்.

தலைவர் ரஜினி படத்துக்கு ஒத்திகை பார்க்கிறேன்.. : நவாசுதீன் சித்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதன் ஷூட்டிங், டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடைபெற்றது.

தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. ரஜினி – விஜய் சேதுபதி சம்பந்தப்பட்டக் காட்சிகள் இங்குதான் படமாக்கப்படுகின்றன.

இந்நிலையில் கேரவனில் அமர்ந்தபடி தன் டயலாக்கை மனப்பாடம் செய்யும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நவாஸுதீன்.

அத்துடன், “என்னுடைய முதல் தமிழ்ப் படத்துக்கான டயலாக்கை ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‘சூப்பர் ஸ்டார்’ தலைவருடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகள்; ரஜினி கட்டளை!

உதயநிதி ஜோடியாக ஒரு படத்தில் அதிதிராவ்; அடுத்த படத்தில் ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரிலீசுக்குத் தயாராகி வரும் படம் ‘கண்ணே கலைமானே’.

இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்க, யுவன் இசையமைக்க, எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

இப்படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் உதயநிதி.

இதில் ‘காற்று வெளியிடை’ மற்றும் செக்க சிவந்த வானம் படப்புகழ் அதிதி ராவ் நாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர் ராம் இதில் போலீஸாக நடிக்கிறாராம்.

இதனையடுத்து ‘தொட்டா சிணுங்கி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அதியமான் படத்திலும் நடிக்கிறாராம் உதயநி0த.

இதில் ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

தற்போது இதன் சூட்டிங் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகள்; ரஜினி கட்டளை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.

ஆனால் தனது கட்சியின் பெயரையோ, கொள்கையையோ, மற்ற விபரங்களையோ அவர் வெளியிடவில்லை.
அதன் பின்னர் தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் அமைப்பாக மாற்றினார்.

அதில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு மாநில பொதுச்செயலாளராக ராஜு மகாலிங்கம், தலைவராக சுதாகர் நியமிக்கப்பட்டனர்.

மற்றபடி கட்சி கொள்கைகள் விவரங்களை வெளியிடாத ரஜினி தனது அரசியல் ஓர் ஆன்மிக அரசியல் என்றும் எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை தருவேன் எனவும் உறுதியளித்தார்.

இந்நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றத்திற்கு என்று தனி விதிகளை உருவாக்கி நிர்வாகிகளுக்கு புத்தகமாக வழங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

அதில் குறிப்பிட்ட சில விதிகள் இதோ உங்கள் பார்வைக்கு:

1. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோ, உறுப்பினர்களோ தங்களின் வாகனங்களில் மன்ற கொடியை நிரத்திரமாக பொருத்தக்கூடாது.

2. மன்ற கொடியை மன்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடக்கும் போது மன்ற உறுப்பினர்கள் பிரச்சாரத்திற்காக வாகனங்களில் பயன்படுத்தலாம். ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு மன்றக் கொடிகளை வாகனங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

3. இளைஞர் அணியில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளே இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைக்களுக்கு ஆக்கப்பூர்வ தீர்வு காண இளைஞர் அணி, மன்றத்திற்கு துணை புரிய வேண்டும். மாற்றத்தை விரும்பும், சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர் சமூதாயத்தின் சக்தியை ஒன்று திரட்டி ஒருங்கிணைக்க வேண்டும்.

4. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் ரஜினி மக்கள் மன்றத்தில் இணையலாம்.

5. ஜாதி மத சம்பந்தப்பட்ட சங்கங்களிலோ அமைப்புகளிலோ உறுப்பினராக உள்ளவர்கள் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினராக சேர அனுமதியில்லை.

6. மன்றக் கொடி துணியால் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ப்ளாஸ்டிக், பாலிதீன் ஆகிய பொருட்களால் செய்யப்பட்டிருக்க கூடாது.

7. மன்றப் பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு, நியமனம், நீக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைமையின் முடிவே இறுதியானது.

8. ஏற்கனவே மன்ற நிர்வாக பொறுப்புகள் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் அந்தக் குடும்பத்தில் உள்ள பிற நேரடி உறவினர்களுக்கு மன்றத்தில் வேறு பதவிகள்/ பொறுப்புகள் ஏதும் வழங்கப்பட மாட்டாது. அதாவது ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே பொறுப்புகள் பதவிகள் வழங்கப்படும்.

9. பொதுமக்களிடம் குறிப்பாக முதியவர்களிடமும், பெண்களிடமும் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.

10. நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும்.

11. மன்ற உறுப்பினர்களிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்

12. தீய பழக்கங்கலுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.

13. மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருபோதும் நடக்கக்கூடாது.

14. நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்பவரின் கருத்தை மட்டுமே விமர்சிக்கலாமே தவிர தனி நபர் விமர்சனம் எதுவும் செய்யக்கூடாது.

15. ஏனைய உறுப்பினர்களுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.

16. கண்ணியம் தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.

17. தலைமையகத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி பொது மக்களிடமிருந்து மன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி நிதியோ அல்லது பிற பொருளுதவியோ ஒருபோதும் திரட்டக்கூடாது.

18. தங்களால் இயன்ற நிதி உதவிகளைத் தந்து நடத்தும் நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

19. அந்தந்த பகுதியில் தொடர்ந்து மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை எளிமையான முறையில் நடத்த வேண்டும்.

20. சட்டவிரோத செயல்களில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.

21. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தச் செயலையும் செய்யக்கூடாது.

22. சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை வெளியிடும் போது கண்ணியம் காக்க வேண்டும்.

23. மன்றத்தின் பெயரில் எந்தத் தனி நபரையும் கேலியாக சித்தரிக்கவோ அல்லது விமர்சிக்கவோ கூடாது.

24. சமூக வலைத்தளங்களில் சொந்த கருத்தை வெளியிடும்போது மன்றத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது.

Rajinikanth created a new rules and regulations for Rajini Makkal Mandram

சர்கார் ஒர்க்கிங் ஸ்டில்ஸை வெளியிட்டு திட்டு வாங்கும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தின் பாடல்களை காந்தி ஜெயந்தியன்று வெளியிட உள்ளனர்.

முன்னதாக செப்டம்பர் 19ஆம் தேதி சிங்கிள் ட்ராக்கை வெளியிட உள்ளனர்.

தற்போது ஓரிரு நாட்களாக சர்கார் படத்தை ஒர்க்கிங் ஸ்டில்ஸை வெளியிட்டு வருகின்றனர்.

இது ஒரு பக்கம் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொரு பக்கம், சன் பிக்சர்ஸ் வாட்டர் மார்க் அதில் இடம் பெறுவதால், ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தற்போது கூட 3வது படத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த படங்களை தங்களால் மாற்றம் செய்து டிசைன் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதை சர்கார் டீம் கவனத்தில் கொள்ளுமோ?

Vijay Fans reaction towards Sarkar movie working stills

இளம் கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுக்கும் *லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், இப்பொழுது தனது கரங்களை சினிமாவுக்கு வெளியே பிற கலைகளுக்குமாக நீட்டியிருக்கிறார்.

இதற்காகவே பிரத்யேகமாக ‘லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அவர், இளம் பரத நாட்டிய கலைஞர் ஸ்ருதி சேகருக்கு முதல் மேடையை அமைத்துக் கொடுத்துள்ளார்.

நிருத்ய சுதா நடனம் மற்றும் இசைப்பள்ளியை நடத்திவரும் சுதா விஜயகுமாரின் மாணவியான ஸ்ருதி சேகரின் நடனம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கலைமாமணி ஷோபனா ரமேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பத்திரிக்கையாளர் டி எஸ் ஆர் சுபாஷ், நடிகர் ராகவ் அவரது மனைவி பிரிதா ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ருதி சேகரின் நடனத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் அவர்களின் பெற்றோர் சந்திரசேகர் மற்றும் வனிதா சந்திரசேகர், நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினர்.

Libra House of Arts Inauguration and Kumari Shruthis Bharatanatyam Recital

More Articles
Follows