தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வாழ்க்கை படங்களாக வந்துள்ளன.
இந்த வரிசையில் பிரபல கர்நாடக இசை பாடகி பெங்களூரு நாகரத்னம்மாளின் வாழ்க்கையும் திரைப்படமாகிறது.
இவரது மூதாதையர்கள் மைசூரு அரசவையில் பாடகர்களாக இருந்தவர்களாம்
மேலும் இவர் திருவையாறு ஆராதனை விழாவில் பெண் இசைக்கலைஞர்களும் பங்கேற்க வழி செய்துள்ளார்.
இதில் நாகரத்னம்மாள் வேடத்தில் சமந்தா நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தை பிரபல இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்குகிறார். இவர் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
நாகரத்னம்மாளின் வாழ்க்கை கதை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராக உள்ளதாம்.
