அஜித் ரசிகர்களை குழப்பிய புதிய செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேதாளம் இயக்குனர் சிவா இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து வரும் நிலையில், அஜித் அடுத்த படத்தின் பற்றிய தகவல்கள் ஒவ்வொன்றாய் வந்த வண்ணம் உள்ளன.

அஜித்தின் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவார் என்று செய்திகள் வந்துள்ளதை நம் தளத்தில் பார்த்தோம்.

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் தன் அடுத்த படம் பற்றிய அறிவிப்போ செய்தியோ இதுவரை எதுவும் அஜித் தரப்பில் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அஜித் ரசிகர்கள்தான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

‘என் காதலுக்கு வில்லனே கிடையாது..’ மனம் திறந்த கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் கிட்டதட்ட அரை டஜன் படங்களில் கமிட்டானவர் கீர்த்தி சுரேஷ்.

தற்போது தமிழில் உள்ள டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் இவரது திருமணம் பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது…

‘நான் யாரையும் காதலிக்கவில்லை. ஒருவேளை நான் காதலித்தாலும் எனக்கு வில்லன் கிடையாது.

எங்கள் வீட்டில் எதிர்க்க மாட்டார்கள். நிச்சயம் என் பெற்றோர்கள் சம்மதிப்பார்கள்’ என கூறியுள்ளார்.

விஜய் முகத்தையே பார்க்க விரும்பாத அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய் ஆகிய இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் இவர்கள் இருவரும் முழுமையாக ஒரு வருடம் கூட இணைந்து வாழவில்லையாம்.

வெளிவுலகுக்கு இணைந்து காணப்பட்டாலும் இவர்களிடையே கருத்து வேறுபாடு முன்பே ஏற்பட்டுவிட்டதாம்.

தற்போது இவர்களின் விவகாரம் விவாகரத்து வரை வந்துள்ள நிலையில் இருவரும் மனுதாக்கல் செய்ய நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

கிட்டதட்ட சுமார் 20 நிமிடங்கள் இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாலும் ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லையாம்.

சூட்டிங்க்கு ரஜினி வராததால் ஷங்கர் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தின் வெளியீட்டின் போது அமெரிக்காவில் இருந்தார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் சென்னை திரும்பியவுடன் ஷங்கர் இயக்கும் 2.0 சூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ஓய்வில் இருப்பதால், ஆகஸ்ட் மாத இறுதியில்தான் கலந்து கொள்வார் எனத் தெரிய வந்துள்ளது.

எனவே, அதுவரை ரஜினி இல்லாத காட்சிகளை இயக்கி வருகிறாராம் ஷங்கர்.

சுதன்ஷு பாண்டே, அடில் ஹூசைன் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏஆர்.ரஹ்மான் இசையைமக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, ஸ்ரீதிவ்யாவை தொடர்ந்து ஜீவாவுடன் லட்சுமிமேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் நயன்தாராவுடன் ஜீவா நடித்த ‘திருநாள்’ படம் வெளியானது.

இதனை அடுத்து, காஜலுடன் ‘கவலை வேண்டாம்’ மற்றும் ஸ்ரீதிவ்யாவுடன் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜீவா.

இதைத் தொடர்ந்து திருநாள் படத்தை தயாரித்த கோதண்டபானி பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜீவா.

இப்படத்தை எம்.ஜே.அருண் என்பவர் இயக்கவிருக்கிறார்.

இதில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கக்கூடும் என தகவல்கள் வந்துள்ளன.

தற்போது ‘சிப்பாய்’, ‘றெக்க’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் லட்சுமி மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுடன் இணைந்த ‘நெருப்புடா’ அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலியில் இடம்பெற்ற நெருப்புடா என்ற பாடலை எழுதி பாடி, ரசிகர்கள் நெஞ்சில் தடம் பதித்தவர் அருண்ராஜா காமராஜ்.

இந்நிலையில் மதுரை சூப்பர் ஜெயண்ட் கிரிக்கெட் அணிக்காக ஒரு பாடலை இவர் பாடியுள்ளார்.

இப்பாடலை சிம்புவுடன் இவர் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார்.

‘ஆட்டைக்கு ரெடியா’ என்று தொடங்கிற இப்பாடல் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்பாடல் தமிழ்நாடு பிரிமியம் கிரிக்கெட் போட்டிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் எட்டு அணிகள் விளையாடவுள்ள இப்போட்டியானது விரைவில் தொடங்கவுள்ளது.

இப்பாடலுடன் இந்த அணியின் லோகோ மற்றும் வீரர்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளனர்.

More Articles
Follows