‘கன்னி மாடம்’ தமிழ் சினிமாவின் முக்கியமான படம்..- தயாரிப்பாளர் ஹஷீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கான ஒரு இடத்தை வைத்திருப்பவர் நடிகர் போஸ் வெங்கட்.

இவர் முதன்முறையாக தற்போது “கன்னி மாடம்” என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வியலை பாடமாக எடுத்துள்ளார்.

இப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த விழாவில் Rooby Films தயாரிப்பாளர் ஹஷீர் பேசியதாவது…

போஸ் வெங்கட் முதல் முறையாக கதை கூறியபோதே மிக நல்ல படமாக இப்படம் வரும் எனத் தோன்றியது. உடனடியாக படம் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நல்ல படங்களை தருவது என்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள்.

“கன்னி மாடம்” தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும். இப்படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் செண்பகமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை இயக்கம் செய்துள்ளார்.

Rooby films Producer Hasheer talks about Kanni Maadam

ரஜினிக்கு ஐயப்பன்; விஜய்க்கு அம்மன்; கடவுளை நம்பாத கமலுக்கு.? அனிருத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் தர்பார் படத்தில் இருந்து சும்மா கிழி என்ற பாடல் வெளியான போதே அது ஐயப்பன் பாடல் காப்பி என கூறப்பட்டது.

இதனால் இசையைமப்பாளர் அனிருத்தை பலரும் சும்மா கிழித்தனர்.

தற்போது மீண்டும் அதுபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார் அனிருத்.

ஓரிரு தினங்களுக்கு முன் விஜய்யின் மாஸ்டர் படத்திலிருந்து ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியானது.

இந்த பாடல் வடிவேலு நடித்த ராஜகாளியம்மன் படத்தில் வரும் சந்தன மல்லிகை… பாடலை காப்பியடித்துள்ளார் என கிண்டல் அடித்துள்ளனர்.

இந்த நிலையில் அனிருத் அடுத்து கமலின் இந்தியன் 2 படத்தில் இசையமைக்கவுள்ளர்.

ரஜினி, மற்றும் விஜய் இருவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்.

ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர் கமல்.

அவருக்கு என்ன செய்வார் அனிருத்? என கிண்டலடித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இவ்வாறு இணையத்தில் பதிவிட்டுள்ளனர்…

தலைவருக்கு ஒரு பாட்டு குடுத்தமாதிரி, அம்மன்கிட்ட இருந்து இன்ஸ்பயர் ஆகி தளபதிக்கு ஒரு பாட்டு குடுத்துருக்காரு..

இத போயி தப்பா பேசிக்கிட்டு…

ஆமா கமல் நாத்திகராச்சே… அவருக்கு என்ன பாட்டுனு தெரிலயே?

Anirudhs copy songs in Rajini and Vijay movies What about Kamal movie

ரோஜாக்களை ஆடையாக்கி இணையத்தை ஹாட்டாக்கிய ஷாலு ஷம்மு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்தி ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் அண்மைக்காலமாக இணையத்தில் தனது ஹாட்டான படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால் இணையமே சூடாகி வருகிறது.

தற்போது புதிதாக ஆடையில்லாமல் ரோஜா பூக்களை வைத்து உடலை மறைத்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஷாலு ஷம்மு.

இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.

Actress Shalu Shamu pictures goes viral

ரஜினியின் ‘நெற்றிக்கண்’ ரீமேக்; தனுஷுக்கு விசு எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1981ல் ரிலீசாகி சூப்பர் ஹிட்டான படம் ‘நெற்றிக்கண்’.

இதில் ரஜினியுடன் லட்சுமி, சரிதா, மேனகா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விசு கதை எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்க கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்து இருந்தது.

இந்த நிலையில் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய உள்ளதாகவும் அதில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இது பற்றி விசு கூறியதாவது..

நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்யவுள்ளதாக கேள்விபட்டேன். அது உண்மையாக இருக்குமானால் கவிதாலயாவிடம் அவர் உரிமம் வாங்குவதை விட கதாசிரியரான என்னிடம் கேட்க வேண்டும்.

என்னிடம் உரிமம் பெறாமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.” என விசு கூறியுள்ளார்.

Director Visu to file case against Dhanush for remaking of Netrikkan

தர்பாரை அடுத்து மாஸ்டரிலும் டியூனை காப்பியடித்த அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் தர்பார் பட சும்மா கிழி என்ற பாடல் வெளியான போதே அனிருத்தை நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

அதாவது.. சபரிமலை ஐயப்பன் பாட்டை காப்பியடித்துள்ளார் என விமர்சித்தனர். ஆனால் இதை தர்பார் படக்குழு கண்டுக் கொள்ளவில்லை.

தற்போது அனிருத் இசையமைத்துள்ள மாஸ்டர் படத்திலிருந்து ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலும் காப்பி தான் என நெட்டிசன்கள் ஆதாரத்தை பதிவிட்டு வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணன், வடிவேலு நடித்திருந்த ராஜகாளியம்மன் படத்தில் வரும் சந்தன மல்லிகை.. என்ற பாடலை தான் அனிருத் காப்பியடித்துள்ளார் என கேலி செய்து வருகிறார்கள்.

Master Oru Kutty Kathai song is copy of Rajakaliyamman movie song

ஆஸ்கரை வென்ற படத்தின் மீது ‘மின்சார கண்ணா’ புரொடியூசர் வழக்கு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் 92வது ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

கொரியன் படமான பாராசைட் என்ற படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று பாராசைட் படம் வரலாறு படைத்துள்ளது.

ஆனால் இந்த படத்தின் கதை கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான ‘மின்சார கண்ணா’ படத்தின் கதையை தழுவி இருப்பதாக கூறப்படுகிறது.

காப்பியடித்த படத்துக்கு இத்தனை ஆஸ்கர் விருதுகளா? என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளதாவது… இத்தனை வருடம் கழித்தும் மின்சார கண்ணா படம் பேசப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆனால் பட கதை உரிமை குறித்து தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தற்போது இப்பட தயாரிப்பாளர் வழக்கு தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.

Oscar winner Parasite a Copy of Vijay Starrer Minsara Kanna

More Articles
Follows