WEEK END STRESS BUSTER..; ‘ஜீன்ஸ்’ பிரசாந்த்திற்கு பிறகு ‘ரேணிகுண்டா’ நிஷாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊரடங்கு, சமூக விலகல், மாஸ்க்குகளிலிருந்து விடுபட்டு மக்கள் வாழ்க்கையைக் கொண்டாட நண்பர்கள் ஆண்டனி வாங் மற்றும் ரேமண்டுடன் சேர்ந்து பாப் ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

‘ரேணிகுண்டா’ நிஷாந்த் மோஹந்தாஸ்.
ஜீன்ஸ் படத்தில் ‘கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு’ பாடலுக்குப் பின் பிரத்யேகமாக விடுமுறையக் கொண்டாட பாடல் இல்லையே என்ற ஏக்கத்தை தங்களின் பாப் பாடல் நிறைவேற்றும் என்று அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

நான் ‘ரேணிகுண்டா’ படத்தில் அறிமுகமானேன். அந்தப் படம் எனக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தது. அதன் பின்னர் நிறைய படங்கள் நடித்துவிட்டேன்.

ஆனால், இயல்பில் நான் ஒரு நடனக்கலைஞர். எனது நடனத் திறமையை சினிமாத்துறையில் நிரூபிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை.

ஆனால் அதற்கான வாய்ப்பு திரையில் இதுவரை அமையவில்லை.
அப்போதுதான் ஆல்பம் தயாரிக்கும் யோசனை வந்தது.
இசையமைப்பாளர் V2 விஜய் விக்கி மற்றும் பினு ஜேம்ஸுடன் பேசினேன்.

நானும், அண்டனியும், ரேமண்டும் வெறும் நடனமாக யோசித்து வைத்திருந்த ஒரு திட்டத்துக்கு இசையமைத்து உயிர் கொடுத்தார் V2 விஜய் விக்கி.

பினு ஜேம்ஸ் தயக்கமேதுமின்றி தயாரிப்பில் இறங்கினார். எங்கள் கூட்டு முயற்சியில் வீக் எண்ட் ‘கே பாப்’ ஸ்டைலில் ஆல்பம் உருவாகிவிட்டது.

பாப் ஆல்பம் வீடியோ உருவாக்க வேண்டும் என்பது எங்களின் கனவு. வீக் எண்ட் மூலம் அதை நிறைவேற்றியுள்ளோம்.

எல்லா பாப் ஆல்பங்களிலும் வெஸ்டர்ன் ஸ்டைல் உருவாக்கத்தின் தாக்கம் தான் இருக்கும். ஆனால், நாங்கள் ஆசிய ஸ்டைல் மேக்கிங் தாக்கத்தோடு ‘கே பாப்’ ஸ்டைலில் ஆல்பம் உருவாக்கியுள்ளோம்.

என்னுடன் இந்த ஆல்பத்தில் ஆண்டனி வாங், ரேமண்ட் இணைந்து நடனமாடியுள்ளனர். பாடல் வரிகளை கு.கார்த்தி இயற்றியுள்ளார்.

V2 விஜய் விக்கி இசையமைத்துள்ளார்.கவுசிக் கிரிஷ் பாடியுள்ளார். ஆண்டனி வாங் நடனத்தை வடிவமைத்துள்ளார்.

நான் தான் ஆல்பத்தை இயக்கியுள்ளேன். பினு ஜேம்ஸ் தயாரித்துள்ளார். அஷ்வந்த் தயாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலரிஸ்டாக சுரேஷ் ரவி பணியாற்றியுள்ளார்.

எடிட்டிங் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் தீபக் துவாரக்நாத். இந்த ஆல்பம் உருவாக்கத்தில் இணைந்துள்ள நாங்கள் அனைவருமே நண்பர்கள். நட்பு என்ற ஒரு புள்ளி தான் எங்களை இணைத்து இன்று புதிய பரிமாணத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

நாங்கள் இனியும் இதுபோன்ற ஆல்பங்களில் இணைந்திருக்க முடிவு செய்திருக்கிறோம்.
எங்களின் WeekEnd வீக் எண்ட் ஆல்பம் நிச்சயமாக கொரோனா ஊரடங்கால் தவித்துவருவோருக்கு ஒரு ஸ்டரெஸ் பஸ்டராக இருக்கும்.

இவ்வாறு நிஷாந்த் கூறினார்.

இந்த பாடல் நேற்று சோனி மியூசிக்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பாடல் : https://youtu.be/hUtk7fikG3s

Renigunta fame Nishanth releases new album

நல்லாத் தானே போய்ட்டு இருக்கு.. தமிழ்நாட்ட ஏன்யா பிரிக்கனும்..; தலை சுற்றிய வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதல்வா் ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார் வடிவேலு.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் வடிவேலு பேசியதாவது…

“ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார்.

மக்களே வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.

நான் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு விட்டேன்.

தமிழகத்தை பிரித்து கொங்கு நாடு தனி நாடு பற்றிய சர்ச்சை கேள்விக்கு…

ராம் நாடு, ஒரத்தநாடு ஏற்கெனவே உள்ளன. தமிழ்நாடு நன்றாக உள்ளது.

அதை ஏன் பிரிக்கனும். இதையெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது.”

இவ்வாறு வடிவேலு பேசினார்.

Vadivelu donated Rs 5 lakhs to cm corona relief fund

வரி கட்டியாச்சு.. ரியலிலும் ஹீரோதான் விஜய்.. ஆதாரங்களை அடுக்கும் ரசிகர்கள்.; BEAST டைரக்டருக்கு REQUEST

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த தனது ரோல் ராய்ஸ் சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் அவர்கள் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தார்.

அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அந்த தொகையை கொரோனா நிவாரண நிதியாக அளிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பல தகவல்கள் வெளிவருகின்றன.

அதாவது நடிகர் விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பு வரி செலுத்தியுள்ளார். அதற்கு தான் தற்போது வரி விலக்கு கேட்கிறார்.

அது தொடர்பான வரி கட்டிய ரசீதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காருக்கான ஆயுட்கால வரியை கட்டிய பிறகே வரியை குறைக்க விஜய் கேட்டுள்ளார் என்கின்றனர்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜய் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

எனவே ரோல்ஸ் ராய்ஸ் காரில் நடிகர் விஜய் வருவது போல காட்சியை வைக்க வேண்டும் என நெல்சனுக்கு விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Thalapathy Vijay fans support on Rolls Royce issue

லிங்குசாமியின் ‘RAP019’ சூட்டிங் ஸ்பாட் தளத்தில் ஷங்கர் திடீர் விசிட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு திரை முன்னணி நாயகன் ராம் பொதினேனி நடிக்கும் #RAPO19 படப்பிடிப்பிற்க்கு திடீர் விசிட் அடித்தார் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் வருகை புரிந்தார்.

இயக்குநர் லிங்குசாமி, நாயகன் ராம் பொதினேனி, நாயகி கீர்த்தி ஷெட்டி, நடிகை நதியா மற்றும் நடிகர்கள், தொழில் நுட்ப குழுவினர் அனைவரும் இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இயக்குநர் ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில், படத்தினுடைய பாடலை கேட்டுவிட்டு, மிக அழகான மெலோடியான பாடல் என பாராடினார்.

மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.

அரசு அறிவித்துள்ள கோவிட் சம்மந்தமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முறையாக கடைப்பிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விரைவில் திரைக்கு கொண்டுவரும் நோக்கத்தில், முழுக்க முழுக்க, ஸ்டைலீஷ், ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாகும் RAPO19 படத்தின் படப்பிடிப்பு, வெகு தீவிரமான வேகத்தில் நடைபெற்றுவருகிறது.

Director Shankar’s surprise visit to Rapo19 shooting spot

நாடார் சங்கங்கள் சார்பாக 1 கோடியே 1 லட்சம் கொரோனா நிதியளித்த எர்ணாவூர் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக பணியாற்றி வருகின்றது.

எனவே கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு நிதி வழங்குமாறு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனவே பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் ரூ.1 கோடியை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

“இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

நாடார் பேரவை, நாடார் சங்கங்கள் சார்பாக 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அளித்துள்ளோம்.

எம் ஜி ஆர் , ஜெயலலிதா நினைவிடங்கள் போல் காமராஜர் நினைவிடமும் புதுப்பொலிவு பெற வேண்டும்” என்றார் எர்ணாவூர் நாராயணன்.

Ernavur Narayanan donated Rs 1 crore to CM corona relief fund

கிரிக்கெட்டர் சௌரவ் கங்குலியின் வாழ்க்கையும் சினிமாவாகிறது..; ஹீரோ இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாவது வழக்கமான ஒன்றுதான்.

மகாத்மா காந்தி முதல் ஜெயலலிதா வரை வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகியுள்ளது.

அரசியல் தலைவர்களை போல கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி ஆகியோரின்
வாழ்க்கையும் சினிமாவாகி பெரும் வெற்றி பெற்றன.

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, உலக கோப்பையை வென்றது.

தற்போது ஜீவா நடிப்பில் ’83’ என்ற பெயரில் இது உருவாகி விரைவில் வெளியாகவுள்ளது.

இதுபோல் டாப்ஸி நடிப்பில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை ’சபாஷ் மித்து’ என்ற பெயரில் சினிமாவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உருவாகவுள்ளது.

சௌரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார்.

சவுரவ் கங்குலி கேரக்டரில் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Star Actor in talks for Sourav Ganguly Biopic?

More Articles
Follows