ஆண்டனி படத்திற்கு இசையமைக்கும் இளம் பெண் ஷிவாத்மிக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ” ஆண்டனி ” .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் (ஷிவாத்மிக்கா)

இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் “, நிஷாந்த், வைசாலி, ரேகா, சம்பத் ராம், ‘வெப்பம்’ ராஜா, சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.

இந்த விழாவில் பேசிய S .A சந்திரசேகர் பேசியவை “இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது.

எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பேசினார்.

இந்த விழாவில் ஜெயசித்ரா அவர்கள் பேசியவை ” படக்குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர்.

இந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் .தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என பேசினார்.

இந்த விழாவில் ” வெப்பம் ராஜா ” பேசியவை ” படத்தில் உள்ள அனைவரும் மிக சிறப்பாக அவர்களது வேலைகளை செய்து உள்ளனர்.

இயக்குனர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்து உள்ளார்.19 வயது உடைய ஷிவாத்மிக்கா அருமையாக இசை அமைத்து உள்ளார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பன்னிருக்கார்.,PC ஸ்ரீ ராம் அவைகளை போல் இவரும் மிக பெரிய ஒளிப்பதிவாளராக வருவார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை , என பேசினார்.படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம்.கண்டிப்பா அவர் மிக பெரிய நடிகராக வருவார்.ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால் தான் ஆண்டனி படத்தில் இவர் நடித்து உள்ள கதாபாத்திரத்தை பண முடியும்.மிக சிறப்பாக செய்து உள்ளார் ” என பேசினார்.

விழாவில் நடிகை ரேகா பேசியவை ” மிகவும் சிரமப்பட்டு அருமையான படத்தினை கொடுத்திருக்கிறார்கள்.

படம் மிக பெரிய வெற்றியடைய வேண்டும். ஊடக நண்பர்களின் பங்களிப்பு எங்களுக்கு தேவை ‘ இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இயக்குனர் குட்டி குமார் பேசியவை” இந்த படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய நன்றி.

இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்து உள்ளோம்.ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்.

இரண்டு வித்யாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு மேல்,மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்க பட்டு உள்ளது.

உயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த்.மேலும்படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஷிவாத்மிக்கா அவர்களிடம் நல்ல திறமை உள்ளது. ரொம்ப நாளாவே மியூசிக் பன்னிருக்காங்க’ என பேசியுள்ளார்.

இசை அமைப்பாளர் ஷிவாத்மிக்கா பேசியவை ” படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிக பெரிய நன்றி.

இந்த படத்துல நாங்கள் அனைவரும் அறிமுகமாக கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம்.

வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்து உள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என பேசி உள்ளார்.

சந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி, பைரவா, கொடி, காலா போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன்.

இவர் அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

பிறந்த நாள் கொண்டாடும் சந்தோஷ் நாராயணனுக்கு இளையதளபதி விஜயிடமிருந்து ஒரு சப்ரைஸ் பரிசு வந்துள்ளது.

தனது கையெழுத்து போட்ட ஒரு கிரிக்கெட் பேட்டை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளார்.

இதை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விஜய்க்கு நன்றியை தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

விஷாலை அடுத்து விஜய் ஆண்டனியுடன் இணையும் அர்ஜுன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள காளி படம் மே 18 ரிலீஸாகிறது.

இதனையடுத்து
திமிரு பிடிச்சவன்’ படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் சிஷ்யர் கணேஷா இப்படத்தை இயக்குகிறார்.

இதன்பின்னர் ‘கொலைகாரன்’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை ஆண்ட்ரூ இயக்குகிறார்.

‘கொலைகாரன்’ படத்தில் அர்ஜுனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் இந்த கேரக்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது

ரஜினி வாய்ப்பளித்தும் மறுத்த எழுத்தாளர் பாலகுமாரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று மரணமடைந்தார்.

இவர் இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

ரஜினி நடித்த பாட்ஷாபடத்தில் ’ஒருதடவ சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி’ என்ற வசனத்தை எழுதியவர் .

குணா, ஜென்டில் மேன் உள்ளிட்ட பல படங்களில் வசனகர்த்தாவாகவும் அவர் பணியாற்றி உள்ளவர்.

இவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் இவர் பேசியதாவது…

என் நெருங்கிய நண்பர் பாலகுமாரன்.

சில மாதங்களுக்கு நாங்கள் சந்தித்து நிறைய பேசினோம்.

பாட்ஷா படத்திற்கு வசனம் எழுதினார்.

அதன் வெற்றிக்கு பின்னர் முழு நேர சினிமாவுக்கு அழைத்தேன்.

ஆனால் இலக்கியம் தான் என் உலகம். சினிமா வேண்டாம். பணம் புகழை மறுத்தார்.” என்றார் ரஜினிகாந்த்.

பாகுபலி தந்த ராஜமௌலியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவே பெருமைப்பட்டு கொள்ளும் வகையில் பாகுபலி படத்தை இயக்கி விருந்து படைத்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி.

இதன் இரண்டும் பாகங்களும் உலகளவில் மாபெரும் வசூலை ஈட்டியது.

இப்படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரையும் தன் அடுத்த படத்தில் இயக்கவுள்ளார் ராஜமவுலி.

இப்படத்திற்கு ஆர்ஆர்ஆர் என பெயரிப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதில் முக்கிய நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகையர் திலகம் படத்தின் மூலம் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ராஜமவுலியும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பெருமையாக குறிப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh may join with Rajamouli for his next project

விஸ்வாசத்தை முடித்துவிட்டு மீண்டும் சத்யஜோதியுடன் அஜித்; டைரக்டர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கிய விவேகம் படத்தில் அஜித் நடிக்க, சத்யஜோதி நிறுவனம் தயாரித்தது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் மீண்டும் அதே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் இணைந்தார் அஜித்.

விஸ்வாசம் என்று தலைப்பிடப்பட்ட அந்த படத்தின் சூட்டிங் தற்போது ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

இமான் இசையமைக்க, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு படத்தில் இணையவுள்ளாராம் அஜித்.

இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்குவார் என்றும் அல்லது என்னை அறிந்தால் பட இயக்குநர் கௌதம்மேனன் இயக்குவார் எனவும் தவல்கள் தெரிவிக்கின்றன.

After Viswasam movie Ajith plans to join again with Sathyajothi movies

More Articles
Follows