‘நேர்கொண்ட பார்வை’ படம் பார்த்து தல-ய பாராட்டிய தலைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் வக்கீலாக நடித்த ‛நேர்கொண்ட பார்வை’ படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியானது.

போனிகபூர் தயாரித்திருந்த இப்படத்தில் வித்யாபாலன், ஸ்ரத்தா, அபிராமி, ஆதிக், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் ‛நேர் கொண்ட பார்வை’ படத்தை பார்த்து அஜித்தை தொடர்பு கொண்டு பாராட்டினாராம்.

Rajinikanth praises Ajith and Nerkonda Paarvai team

விஜய்சேதுபதி-ஸ்ருதிஹாசனின் ‘லாபம்’ கூட்டணியில் தன்ஷிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

இவர் தற்போது விஜய் சேதுபதி, ஸ்ருதி‘ஹாசன் இணைந்து நடிக்கும் “லாபம்” படத்தை இயக்கி வருகிறார்.

இவர்களுடன் கலையரசன், ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது-

ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் கபாலி, பேராண்மை படங்களில் நடித்த தன்ஷிகாவும் இணைந்துள்ளார்.

Kabali actor Dhanshika team up with Vijay Sethupathis Laabam

ஆடுகளம் எனர்ஜியை அசுரனுக்கும் கொடுத்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்கம் அரை டஜன் படங்களில் நாயகனாக நடித்து இசையமைத்து கொண்டிருந்தாலும் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் ஜிவி. பிரகாஷ்.

தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கும் தனுஷின் அசுரன் படத்திற்கும் இசையைமத்து வருகிறார்.

இப்பட பாடல் தகவல்களை அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு இணையத்தள பேட்டியில் அசுரன் பட பாடல் குறித்து பேசியுள்ளார்.

ஒரு பாடலுக்கு பழைய கால நாட்டுப்புற பாடல்களை அடிப்படையாகக் கொண்ட கருவிகளை பயன்படுத்தியுள்ளோம்.

ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ஒத்த சொல்லால பாடல் போன்ற எனர்ஜியை அந்த பாடல் கொடுக்கும்.

திருநெல்வேலி பாஷை கலந்த பாடலாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார்.

GV Prakash reveals There will be Aadukalam energy in Asuran

எம்ஜிஆர் பட டைட்டில் கிடைக்காமல் புதிய டைட்டில் வைத்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து இறுதியாக வெளியான வேலைக்காரன், சீமராஜா மற்றும் மிஸ்டர். லோக்கல் ஆகிய 3 படங்களும் தோல்வியை தழுவியது.

தற்போது மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஹீரோ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.

மேலும் மற்றொரு படமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பாண்டிராஜன் படத்திற்கு எஸ்கே 16 என்று தலைப்பிட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வந்தது.

இந்த படத்திற்கு எம்ஜிஆர் நடித்த ‛எங்க வீட்டுப்பிள்ளை’ தலைப்பை வைக்க திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதை தர மறுத்துவிடவே ‛நம்ம வீட்டுப்பிள்ளை’ என்று தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், சூரி, நட்டி என்கிற நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கின்றனர்.

இப்படம் செப்டம்பரில் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

Sivakarthikeyans 16 movie titled Namma Veetu Pillai

அஜித் வராவிட்டாலும் ஹிந்திக்கு அழைத்துச் செல்லும் போனிகபூர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் கடந்த வாரம் வெளியானது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றி குறித்து போனிகபூர் பேசும் போது…

நேர்கொண்ட பார்வை படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படத்தை அடுத்து அஜித்தின் 60வது படத்தை தயாரிக்கிறேன்.

ஆக்சன் கதையான இதில் பைக், கார் சேஸிங் காட்சிகள் நிறைய உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் சூட்டிங் தொடங்கவுள்ளது.

இப்படத்தை ஹிந்தியில் வெளியிடும் எண்ணமும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கெனவே அஜித்தை நேரடி ஹிந்தி படத்தில் நடிக்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அஜித் ஓகே சொல்லவில்லை. எனவே இப்படத்தை ஹிந்திக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கலாம்.

Nerkonda Paarvai producer Boney Kapoor talks about Ajith 60

சிங்கம் சூர்யா-சிறுத்தை சிவா இணையும் பட முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படம் செப்டம்பர் 20ல் திரைக்கு வருகிறது.

தற்போது ‛இறுதிச்சுற்று’ சுதா இயக்கும் ‛சூரரைப் போற்று’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா.

இந்த படத்தை அடுத்து அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 12ஆம் தேதி இயக்குனர் சிவாவின் பிறந்த நாள் என்பதால் சூர்யா 39 படத்தின் முக்கிய அறிவிப்பை மாலை 5.40 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Important announcement about Suriya 39 on Sivas Birthday

More Articles
Follows