தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இவருடன் நாசர், வெற்றி, அபர்ணா பாலமுரளி, ஆகியோரும் நடித்திருந்தனர்.
இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
எனவே, படத்தின் இயக்குனருக்கு எம்எஸ் பாஸ்கர் தங்க செயின் பரிசளித்திருந்தார் என்பதை பார்த்தோம்.
இந்நிலையில் இப்படத்தை ரஜினிகாந்தும் பார்த்து தன் பாராட்டுக்களை இருவருக்கும் தெரிவித்துள்ளார்.
“பாஸ்கர்.. என்ன ஒரு நடிப்பு. பிச்சுட்டீங்க பாஸ்கர். உங்க நடிப்பு எப்பவுமே சூப்பர். இதில் ரொம்ப பிரமாதம்.
இதனையடுத்து இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கும் பாராட்டை தெரிவித்துள்ளார்.
நிறைய பேர் பாராட்டிய உடன் படத்தை பார்க்க தோன்றியது. எல்லாம் பாராட்டுக்கும் தகுதியான படம் இது.
நிறைய நல்ல படங்களை இயக்கி, வெற்றி பெற வாழ்த்துகள்” என்றாராம் சூப்பர் ஸ்டார்.
Rajinikanth Praises 8 Thottakkal MS Bhaskar and Director SriGanesh
