*குருதிப்புனல்* வரிசையில் அதர்வாவின் *குருதி ஆட்டம்*.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘8 தோட்டாக்கள்’ படத்தை இயக்கியவர் ஸ்ரீகணேஷ்.

இந்த படத்தை தொடர்ந்து அதர்வாவை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம்.

இந்த படத்துக்கு ‘குருதி ஆட்டம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறதாம்.

23 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற ஒரு பெயரில் கமலின் *குருதிப்புனல்* படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி படத்தை இயக்கும் மிஷ்கின்; ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதியும், தமன்னாவும் இணைந்து நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என கூறப்படுகிறது.

நயன்தாராவுக்கு ஆல்பம் கொடுத்து அசத்திய தல அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஸ்வாசம் படத்தில் அஜித், நயன்தாரா ஆகியோருடன் தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சிவா இயக்கும் இப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தனது சக நடிகர்களுடன் இயல்பாக பழகும் பழக்கம் கொண்ட அஜித், நயன்தாராவிற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

பின்பு அந்த புகைப்படங்களை ஆல்பமாக உருவாக்கி அவருக்கு பரிசளித்துள்ளார்.

இதனைக் கண்டு நயன்தாரா நெகிழ்ந்து போனதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக வீரம் படத்தில் நடித்த அப்புக்குட்டியை வைத்து அஜித் புகைப்படம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

மும்பையில் ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மும்பைக்கு பயணம் மேற்கொண்ட லதா ரஜினிகாந்த், சிவாஜி பார்க் பகுதியிலுள்ள ராஜ் தாக்ரேவின் இல்லத்துக்கு இன்று சென்றார்.

அங்கு ராஜ் தாக்ரே மற்றும் அவரது மனைவி ஷர்மிலாவை லதா ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்.

அரசியல் வழக்கம்போல இது நட்பு ரீதியிலான சந்திப்பு என சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த், சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்ரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

கடந்த 2010-ஆம் ஆண்டு பால் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த் பால் தாக்ரே தனக்குக் கடவுளைப் போன்றவர் என்றும் கூறியிருந்தார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில், அவரது மனைவி லதா, நவநிர்மான் சேனாவின் தலைவரும் மறைந்த பால் தாக்ரேவின் மருமகனுமான ராஜ் தாக்ரேவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெங்கட் பிரபு படத்தில் 5 கோடி; அப்புறம் 10 கோடிதான் என சிம்பு முடிவு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில்
செக்கச் சிவந்த வானம் படத்தில்
நடித்து முடித்துள்ளார் சிம்பு.

இப்படத்திற்குப் பின்னர் தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்த சிம்பு திட்டமிட்டு உள்ளாராம்.

ஆனால் வெங்கட் பிரபுவுக்காக, அவரது படத்தில் மட்டும் அதனை பாதியாக (5 கோடி) ஆக
குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர் , கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ரிலீஸ் தள்ளிப் போக இதான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்களைத் தயாரித்த, ‘கெனன்யா பிலிம்ஸ்’ தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’.

கேட்டரிங் கல்லூரியில் படித்த அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வைபவி சாண்டில்யா நாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இம்மாதம் 6-ஆம் தேதி ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் வந்துள்ள லேட்டஸ்ட் தகவலின்படி இம்மாதம் 6-ஆம் தேதியும் ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நிறைய கடன்கள் இருப்பதால் பொருளாதார ரீதியில் சிக்கலில் இருக்கிறாராம். இன்னொரு பக்கம் அவருடைய படங்களை வாங்கி வெளியிட்டவகையில் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு வருகின்றனர்.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று இயக்குனர் ஆனந்த் பல்கி டுவீட் செய்துள்ளார்.

சர்வர் சுந்தரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் கடும் அப்செட்டில் இருக்கிறார் சந்தானம்.

More Articles
Follows