கடவுளை போல் ரஜினிக்கும் பவர் இருக்கு.; பாரதிராஜா பவர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12ஆம் தேதி வருகிறது.

அவரின் 70-வது பிறந்தநாளையொட்டி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் `எளிமை மனிதரின் 70வது பிறந்தநாள் விழா’ என்ற தலைப்பில் பிரமாண்டமாக விழா கொண்டாடப்பட்டது. மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி இந்த விழாவை ரஜினி ரசிகர்களுடன் நடத்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் கலந்துகொண்டனர். ரூ.6 லட்சம் மதிப்பில் 70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பாரதிராஜா பேசியதாவது…

ரஜினி என் மூச்சுக்கும் மேலானவர். சூப்பர் ஸ்டாருக்காக வரவில்லை. சூப்பர் மனிதருக்காக இங்கு வந்துள்ளேன். அடுத்தவர் மனதை காயப்படுத்தாத ஓர்மனிதர் என்றால் அது ரஜினி தான்.

16 வயதினிலே’ படத்தில் ரஜினியை ஒப்பந்தம் செய்தபின் அவருக்கு ரூ.3,000 சம்பளம் பேசினேன். ஆனால் ரூ.2,500 கொடுத்தேன். 500 ரூபாய் பாக்கி இருக்கிறது.

குரு சிஷ்யன்’ பட ரிலீஸ் சமயத்தில் என்னை படம் பார்க்க அழைத்தார். `இதெல்லாம் ஒரு படமா?’ என பார்த்துவிட்டு திட்டிடேன். `நீங்கள் படத்தை ரசிக்கவில்லை என்றால், படம் நிச்சயம் வெற்றிபெறும்’ என்றார் ரஜினி. அந்த அளவுக்கு நல்ல மனிதர், எளிமையானவர்.

அவருடன் 2 முறை முரண்பாடு ஏற்பட்டது. அப்போதும் ரஜினி என் மீது கோபப்படாமல் இருந்தார்.

கடவுள்களுக்கு உள்ளது போல் ரஜினிக்கும் ஒரு பவர் உள்ளது. அது தான் அனைவரையும் ரஜினியிடம் இழுக்கிறது’’ என பேசினார் ரஜினிகாந்த்.

Rajinikanth has some power like our Gods says Bharathiraja

ஹீரோவானார் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி; ஹீரோயின் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை தி.நகர் என்றாலே பெரும்பாலும் பலரின் நினைவுக்கு வருவது லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஷாப்பிங் தான்.

இந்நிறுவனத்தின் விளம்பர படங்களில் அதன் உரிமையாளர்களுள் ஒருவரான அருள் நடித்து வருகிறார். இவரை கிண்டல் செய்து பல மீம்ஸ்கள் வந்தாலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அவர் விரைவில் சினிமாவில் நடிக்க கதை கேட்டு வருவதாகவும் பல முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அடிக்கடி தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் இன்று எளிமையாக அருள் தயாரித்து நடிக்கும் முதல் பட பூஜை சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏ.வி.எம் சரவணன் நடிகர் பிரபு, விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏ.வி.எம் சரவணன் குத்து விளக்கு ஏற்ற, எஸ்.பி. முத்துராமன் கிளாப் அடித்து சூட்டிங்கை துவக்கி வைத்தார்.

இப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இவர்கள் அஜித், விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கியுள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

நாயகி யார்? என்றுதானே கேட்கிறீர்கள். டாப் ஹீரோயின்ஸ் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் கீர்த்திகா திவாரி என்பவர் நடிக்கிறார். 2வது நாயகியாக பிரபல நடிகை ஒருவர் நடிப்பார் எனத் தெரிகிறது.

முக்கிய வேடங்களில் பிரபு, நாசர், விவேக், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா ஆகியோர் நடிக்கின்றனர்.
வைரமுத்து முதல் பாடலை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

இந்த படத்தில் எதிர்பாராத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் இயக்குனர்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி.

Legend Saravana stores owner Aruls debut movie launch

‘தர்பார்’ ரஜினிகாந்த் இடத்தில் சந்தானம் & யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் நாயகனாக நடிக்க அவருடன் யோகிபாபு இணைந்துள்ள படம் ‘டகால்டி’.

பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், விநியோகஸ்தருமான, எஸ்.பி.செளத்ரி தமது 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளனர்.

சென்னை, திருக்கழுகுன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனோ, ஜெய்ப்பூர் என நான்கு மாநிலங்களில் வளர்ந்துள்ளது “டகால்டி”

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் ரஜினியின் “தர்பார்” படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திலும் அமர்க்களமாக இந்த படம் உருவாகியுள்ளது.

சந்தானத்திற்கு ஜோடியாக பெங்காலி நடிகை ரித்திகா சென் நடித்துள்ளார்.

தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், ராதாரவி, ரேகா, ஹேமந்த் பாண்டே, மனோபாலா, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி இந்திப் பட உலகின் பிரபலமான நடிகர் தருண் அரோரா ஆகியோருடன் வெளிநாடுகளிலிருந்து வந்த மாடல் அழகிகளும் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

விஜயநாராயணன் இசையையும், கார்கி பாடல்களையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஜாக்கி கலையையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத் தயாரிப்பையும், கவனித்துள்ளனர்.

ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட்டாக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த மாதம் டிசம்பரில் குடும்பங்களை குதூகலிக்க வருகிறது “டகால்டி.

சற்றுமுன் இப்பட டீசர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை கவரும் வகையில் சந்தானம் காமெடி விருந்தாக அமைந்துள்ளது.

Santhanam and Yogi babus fun filled Dagaalty teaser out

 

 

சேலை கட்ட மாட்டுறாங்க.. கால் மேல கால் போடுறாங்க..; தண்டுபாளையம் பட விழாவில் அபி சரவணன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் வெங்கட் பேசியதாவது,

“தண்டுபாளையம் ஒரு எக்ஸைட்மெண்டா இருக்குற புரோக்ராமா இருக்கு. பெரியவங்க எல்லாம் வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. தண்டுபாளையம் ஒரு சென்ஷேனல் பெயர்.

தண்டுபாளையம் ஒரு க்ரைம் ஹிஸ்டர். ஏசியாவிலே இது இரண்டாவது க்ரைம். எந்த போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டும் கண்டு பிடிக்க முடியல. இதில் முக்கியமான விசயம் என்னன்னா எத்தனையோ க்ரைம் படம் பார்த்திருப்பீங்க. நிச்சயமாக நான் ஒரு சேலஞ்சாக சொல்கிறேன்.

இதுபோல் ஒரு படத்தை க்ரைம் படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு டிபரெண்டான எக்ஸ்பீரியன்ஸ் இந்தப்படத்தில் இருக்கும். இப்படம் பார்த்து முடித்து வெளில வரும்போது ஒரு டென்சன் மனதில் இருக்கும். க்ரைம் பண்றவங்களை நிச்சயம் தண்டிக்கணும்.

அதே நேரம் நாமும் பாதுகாப்பாக இருக்கணும். இந்த கண்டெண்ட் தான் இந்தப்படம். சுமன் ரங்கநாத் மேடத்திற்கு தான் முதல் நன்றி சொல்லணும். கர்நாடகால உள்ள வெயில்ல தயங்காம நல்லா டெடிகேஷனா நடிச்சாங்க. அவங்களுக்கு நன்றி. இசை இயக்கம் இரண்டுமே படத்தில் சிறப்பா இருக்கும்” என்றார்

படத்தை வெளியிடும் பாலாஜி பேசியதாவது,

“இந்தப்படத்தை ரொம்ப அற்புதமா எடுத்திருக்காங்க. இது கொடூரமான படம்னு நிறைய பேர் சொல்றாங்க. ஆனால் கொடூரமானவங்களிடம் இருந்து நான் எப்படி தப்பிக்கணும் என்பதைச் சொல்லும் படம் இது” என்றார்

பாடலாசிரியர் சொற்கோ பேசியதாவது,

“ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி இது. இந்தப்புவனமே திரும்பி பார்க்கும் வகையில் உள்ளவர் எங்கள் pro புவன். இந்தப்படத்தின் கதாநாயகி மிக கம்பீரமான தோற்றத்தோடு இருக்கிறார். மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

படமெங்கும் ரத்தக்கறையாக இருந்தாலும் இந்தப்படம் ஒரு செய்தியைச் சொல்கிறது. நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்தப்படம் மதில்மேல் பூனை மாதிரி. ஒரே நேரத்தில் இருபது ட்யூன் போடுபவர் தான் இசை அமைப்பாளர். உடனுக்குடன் எழுதுபவர் தான் சிறந்த பாடலாசிரியர்” என்றார்

நடிகர் அபி சரவணன் பேசியதாவது,

“வெங்கட் சார் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும். ஹீரோயின் சுமன் ரங்கநாத் மேடம் பற்றி இப்பதான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன். அவங்க தான் மாநகரகாவல் படத்தில் நடித்துள்ளாராம்.

பக்கத்து மாநிலத்து நடிகையான அவர் எவ்வளவு அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். ஆனால் நம்மூர் நடிகைக்கு ஏன் இந்த எண்ணம் வர மாட்டேங்குதுன்னு தெரியல.

ரெண்டு நாளைக்கு முன்னாடி மீராமிதுன் பாக்கியராஜ் சார் முன்னாடி கால்மேல் கால்போட்டு இருந்தார். நம் பண்பாடு கலாச்சாரம்லாம் என்ன”? என்ற கேள்வியோட முடித்தார்

இயக்குநர் மற்றும் நடிகர் தருண்கோபி பேசியதாவது,

“இந்தப்படத்தின் ட்ரைலர் பார்க்கும் போது எனக்கு ஒரு கான்பிடண்ட் வந்தது. திமிரு படத்தில் ஸ்ரேயாரெட்டி கேரக்டர் மாதிரி சுமன் ரங்கநாத் கேரக்டர் செம்ம போல்டாக இருக்கிறது. நிச்சயமாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை அடையும்.

இந்தப்படத்தில் சினிமாட்டிக் இல்லை ஒரு லைவ் இருக்கு. இந்தப்படத்தின் வெற்றி தயாரிப்பாளர் வெங்கட் அவர்களுக்கு முழுமையாகப் போய்ச்சேரும்” என்றார்

நடிகை சுமன் ரங்கநாத் பேசியதாவது,

“என்னோட முதல்படம் புதுப்பாட்டு. சென்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்குள்ள சாப்பாடு, இங்குள்ள கலாச்சாரம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பா இங்குள்ள படங்கள் எல்லாம் பார்ப்பாங்க.

இந்தப்படத்தில் நடிக்க கேட்டதும் உடனே சம்பதித்தேன். ஏன்னா இந்தக்கேரக்டர் ரொம்ப சேலன்ச்சிங்காக இருந்தது. எனக்கு வித்தியாசமான ரோல்களில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை.

எனக்கு ஒரு விஷன் இருக்கு. எனக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு நன்றி. எனக்கு சினிமாவை ரொம்ப பிடிக்கும். என் கேரக்டர்களை நான் காதலிப்பேன். இந்தப்படம் எனக்கு மிகச்சிறப்பான அனுபவம்.

ரொம்ப கஷ்டமான லொக்கேஷனில் படம் எடுத்தோம்.. முள், வெயில் எல்லாம் சோதித்தாலும் எங்கள் வேலைகளை சரியாகச் செய்துள்ளோம். இந்தப் படத்தில் இசை ரொம்ப நல்லாருக்கு. இயக்குநர் நாயக் சாருக்கு ரொம்ப நன்றி. இந்தப்படம் தமிழில் வெளிவருவது ரொம்ப சந்தோஷமாக இருந்தது” என்றார்.

Abi Saravanan controversial speech at Dandu Palaiyam Trailer launch

தலைவர் 168 கூடையில் குஷ்பூ.; மீண்டும் ரஜினியுடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கிய மன்னன் படத்தில் நாயகியாக விஜயசாந்தி நடித்திருந்தாலும் அதில் முக்கிய கேரக்டரில் ரஜினியுடன் நடித்திருந்தார் குஷ்பூ.

அதன்பின்னர் அண்ணாமலை படத்தில் குஷ்பூடன் இணைந்து கூடையில் என்ன பூ என ரசிகர்களை கேட்டு அவருடன் டூயட் பாடினார் ரஜினி.

மேலும் மன்னன், பாண்டியன் மற்றும் குசேலன் உள்ளிட்ட படங்களிலும் இவர்கள் இணைந்து நடித்தனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் தலைவர் 168 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ நடிக்கவிருக்கிறாராம்.

(இந்த படத்திலும் கூடையில் என்ன பூ என கேட்பாரோ?)

சிவா இயக்கவுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இமான் இசையமைக்க, இந்த படத்தில் காமெடியனாக சூரி நடிக்கவுள்ளார் என அறிவித்துள்ளனர்.

நாயகி யார்? என இதுவரை அறிவிக்கவில்லை. இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆர்யாவின் டெடி படத்தில் இணையும் 90ML பட மாசூம் சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கஜினிகாந்த் மற்றும் காப்பான் ஆகிய படங்களை அடுத்து ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.

சக்தி சவுந்தரராஜன் இயக்கி வரும் இந்த படத்திற்கு டெடி என தலைப்பு வைத்துள்ளனர்.

தடம் பட இயக்குனர் மகிழ்திருமேனி இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

சாக்ஷி அகர்வால் கருணாகரன் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்த நிலையில் 90எம்எல் படத்தில் ஓவியாவுடன் இணைந்து சரக்கு அ(ந)டித்த மாசூம் சங்கரும் இணைந்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள தனுஷ் ராசி நேயர்களே படத்திலும் மாசூம் சங்கர் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

More Articles
Follows