திருமா-வேல்முருகனை எச்சரித்த ரசிகர்களுக்கு ரஜினி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தை பிரபல லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கை தமிழர்களுக்கு 150 வீடுகளை வழங்க திட்டமிட்டு, அதில் கலந்து கொள்ள ரஜினியை அழைத்தனர்.

ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ரஜினியை தடுக்க, இலங்கை பயணத்தை ரத்து செய்தார் ரஜினி.

எனவே, ரஜினியின் இலங்கை பயணத்தை தடுத்த, திருமாவளவன், வேல்முருகன் ஆகியோருக்கு எதிராக இலங்கையின் யாழ்பாணம், முல்லை தீவு உள்ளிட்ட இடங்களில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகிந்த ராஜ்பக்சேவுடன் கை குலுக்கிய திருமாவளவனுக்கு ரஜினியை தடுக்க என்ன தகுதி இருக்கிறது ? தலைவா வா… என்பது போன்ற வாசகங்களை வைத்து போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில் தனக்கு ஆதவாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன், நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.

நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும், நேரம் கூடிவரும் போது சந்திப்போம்.

நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கண்டித்து இலங்கையில் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருப்பது இதுவே முதன்முறை என்று சொல்லப்படுகிறது.

Rajini said Thanks to Srilanka peoples who warned Tamil political leaders

‘பாம்பு சட்டை’ ஆடம்தாசனை பாராட்டிய ‘கபாலி’ ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா தயாரிப்பில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், பானு நடித்த பாம்பு சட்டை படம் அண்மையில் வெளியானது.

ஆடம்தாசன் இயக்கிய இப்படம் கிட்டதட்ட 3 ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கி கிடந்தது.

படம் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த கபாலி இயக்குனர் ரஞ்சித் இயக்குனரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

“நல்ல சினிமா தரவேண்டும் என்ற ஆடம்தாசனின் முயற்சி படம் முழுக்க தெரிகிறது. அனைவரும் தியேட்டருக்குப் போய்ப் பார்க்க வேண்டிய படம் இது. மிகத் துணிச்சலான கதை, பாத்திரப் படைப்பு அருமை,” என்று பாராட்டியுள்ளார் ரஞ்சித்.

Kabali director Pa Ranjith has praised and wished Director Adam Dasan for his debut movie Paambu Sattai for its bold content and fine making.

ரஜினியின் இலங்கை பயணத்தை தடுத்தது ஏன்? – திருமாவளவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில நாட்களாகவே, சினிமா உலகின் ஹாட் டாப்பிக் ரஜினியின் இலங்கை பயணமும், அதன்பின்னர் அது ரத்தானது பற்றிய விவாகரமும்தான்.

இந்நிலையில் இதுகுறித்து பேச சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் திருமாவளவன்.

அப்போது அவர் கூறியதாவது…

“தற்போது இலங்கையில் அசாதரண சூழ்நிலை உள்ளது.

இலங்கையில் சிங்கள ராணுவத்திடம் சரணடந்தவர்களின் நிலை என்ன என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

போரின் போது ஆக்கரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை திருப்பி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டால் சிங்கள அரசு அந்த போராட்டத்தை திசை திருப்பிவிடும்.

இதனால் உலக அரங்கில் பேசப்படும் இலங்கை தமிழர் பிரச்னை தடைப்பட்டுவிடும்.

அவர் இப்போது செல்ல வேண்டாம் என்றுதான் தெரிவித்தேன்.

மற்றபடி அவர் இனிவரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.” என்று தெரிவித்தார் திருமாவளவன்.

Thirumavalavan explains why he stopped Rajinis Srilanka trip

‘டைரக்டரின் பர்ஸ்ட் ஹீரோ புரொடியூசர்தான்..’ ‘ரஜினிமுருகன்’ பொன்ராம் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய ‘ஒரு காதலின் புதுப்பயணம்’ ஆல்பத்தின்
வெளியீட்டு விழா இன்று பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி,பிரஜின், நிஷாந்த் தயாரிப்பாளர் இளையஅரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

*விழாவில் ரஜினிமுருகன் பட இயக்குநர் பொன்ராம் பேசும்போது*

” இந்தக் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது
வாய்ப்பு தரமுடியவில்லை .அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால்
அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.
புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பது
சாதாரணம் அல்ல. முதல் படவாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு
கதாநாயகன்- ஹீரோ.எல்லாமே. அதை மறந்து விடக் கூடாது. இந்த நான்கு நிமிட பாடல்
ஆல்பத்தைப் பார்த்தேன். நல்ல வேளை இரண்டு முறை போட்டார்கள். அதற்குள் பாடல்,
கதை, காட்சியழகு எல்லாமே இருந்தன.

இதுமாதிரி ஆல்ப முயற்சி தன்னை சோதித்துக் கொள்ளும்ஒரு முயற்சிதான். எஸ்.எம்
எஸ்.ராஜேஷ் கூட ஒரு காட்சியை மாதிரிக்கு எடுத்துக் காட்டி விட்டுத்தான்
படவாய்ப்பை பெற்றார். திரையிட்டபோது இதை முதல் முறை பாடலாகப் பார்த்தேன்.
இரண்டாவது முறை அதில் இருந்த கதையைப் பார்த்தேன்.
இந்த ஆல்பம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். “என்று கூறி வாழ்த்தினார்.

*நடிகர் பிரஜின் பேசும் போது* ,

“குமரன் முதலில் இயக்கிய ‘வயோல்’ குறும்படம் சர்வதேச விருதுகளைப் பெற்றது.
இந்த ஆல்பமும் ஒரு படம் போல உணர்ந்து செய்திருக்கிறார். ஒன்றரை வருஷத்துக்கு
முன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அதில் வரும் வில்லன் வேடம் பிரமாதமாக
இருக்கும். கதாநாயகனைவிட பெரியதாக

இருக்கும். அதை செய்ய ஆர்வமாக இருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு நிஷாந்துக்குப்
போய்விட்டது. நான் கதாநாயகன் ஆகிவிட்டேன். போராடினால்தான் வெற்றி கிடைக்கும்.
நாங்கள் 5 ஆண்டுகள் போராடி’பழைய வண்ணாரப் பேட்டை’ படம்எடுத்தோம். முதல்வர்
மரணம், வர்தாபுயல் வந்ததால் சரியாகப் போகவில்லை. ஆனால் எங்கள் உழைப்பு
இன்றும் பாராட்டப்படுகிறது.” என்றார்.

*நடிகர் மைம் கோபி பேசும்போது,*

“இந்தக் குமரனை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும் முதலில் இவர் ஆக்ஷன் சொன்னது
என்னை வைத்து ‘மாற்றம்’ குறும்படம் எடுத்த போதுதான்.

நான் முடியாது என்று எப்போதும் சொல்ல மாட்டேன். ஒரு ஈ கதாநாயகனாகும் போது,ஒரு
ஈ வில்லனாக முடிகிற போது நாம் கதாநாயகனாக ஆக முடியாதா? நான் எல்லாரையும்
ஊக்கப் படுத்தியே பேசுவேன். முயற்சி திருவினை ஆக்கும். தம்பி குமரன்
இயக்குநராகியிருக்கிறார். வாழ்த்துக்கள். தம்பி.”என்றார்.

*இயக்குநர் குமரன் பேசும்போது,*

” நான் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டது இந்த ஒரு நாளுக்காகத்தான். கல்லூரிப்
படிப்பு முடிந்து உதவி இயக்குநராகவும் முடியாமல் இருந்த போது என் அம்மா, அப்பா
இருவருமே பிடிச்சதை நீ பண்ணுடா நாங்க உனக்கு உதவி செய்கிறோம் என்றார்கள். அதை
என்னால் மறக்க முடியாது ‘வயோல்’குறும்படம் நிறைய விருதுகள் பெற்றது .

இந்த ஆல்பத்தைத் தயாரிக்க முன் வந்த ரெஜினா பிக்சர்ஸ் ரெக்ஸை மறக்க முடியாது .
நாயகன் ரெக்ஸ், நாயகி பார்வதி இருவரையும் எதுவுமே தெரியாமல் வாருங்கள்
என்றுதான் கூப்பிட்டேன்
.
அப்படி வந்து இப்படி அழகாக நடித்துவிட்டார்கள். பூஜையே போடாமல் என் அடுத்த படம்
இந்த ஆல்ப அறிவிப்புடன் தொடங்கி விட்டது. அதற்கு உழைக்க இந்த நிமிடத்திலிருந்தே தொடங்கி
விட்டேன்.”என்றார்.

*நடிகர் ‘ஆடுகளம்’ நரேன் பேசும்போது,*

” நான் இதை எதிர் பார்க்கவில்லை. அசத்தி விட்டாய் குமரன், இது ஆல்பம் அல்ல.
ஒரு படம் முழுப் படம் பார்த்த திருப்தியைத் தந்து விட்டது..”என்றார்.

*ஆல்பம் இசையமைப்பாளர் ஜுபின் பேசும்போது,*

” முதலில் குமரன் இந்தக் கதையைச் சொன்ன போது, அது ஒரு உண்மை நிகழ்ச்சி என்ற
போது ஆச்சரியமாக இருந்தது. நான் கதைக்குள் இறங்கி உடனே வரிகளும் எழுத
ஆரம்பித்துவிட்டேன். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் போன போது எல்லாரும் ‘
வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும் ‘ என்ற போது என் கவனம் இதன் மீது
போனது. தனியே வந்து ‘இரு உயிர் இடம் மாறும் ஒரு காதலின் புதுப்பயணம் ‘ என்று
வரிகள் போட ஆரம்பித் துவிட்டேன்.”என்றார்.

ஆல்பம் வெளியீட்டு விழாவிலேயே இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பும் வெளியிடப்
பட்டது. அனாமிகா பிக்கர்ஸ் சார்பில் ‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தை விநியோகம்
செய்த இளைய அரசன் ஹன்சிகா எண்டர் டெய்ன் மெண்ட்ஸ் சார்பில் புதிய படத்தைத்
தயாரிக்கிறார். குமரன் இயக்கத்தில் பிரஜின் ,நிஷாந்த் நடிக்க உருவாகவுள்ளது
படம்.

நிகழ்ச்சியில் ‘பழைய வண்ணாரப் பேட்டை’ இயக்குநர் ஜி.மோகன்,ஆல்பம் நாயகன்
ரெக்ஸ் ,நாயகி பார்வதி, நடன இயக்குநர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் அர்ஜுன்,
எடிட்டர் தீபக், கலை இயக்குநர் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

Oru Kadhalin Puthuppayanam songs album launch

 

 

கீர்த்தி-சமந்தா நடிக்கும் ‘சாவித்ரி’ படத்தில் சூர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழில் உருவாகவுள்ளது.

இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடிக்க, நடிகை ஜமுனா ராணி கேரக்டரில் சமந்தா நடிக்கிறார் என்பதை பார்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இதனையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார். வேறு எந்த படங்களில் நடிக்கவும் சூர்யா ஒப்புக் கொள்ளவில்லை. என தெரிவித்தனர்.

Suriya is not part of Keerthy and Samantha starrer Savithri biopic movie

நடிகர் சங்க அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினி-கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாசர் தலைமையிலான நிர்வாகிகள் பதவியேற்ற உடன் நடிகர் சங்கம் கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்று உறுதியளித்தனர்.

இந்த கட்டிடத்திற்கான அனுமதி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இருந்து தற்போதுதான் கிடைத்துள்ளதாம்.

அதன்படி மார்ச் 31ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதற்கான அவசர செயற்குழு கூட்டத்தில் நாசர், விஷால், பொன்வண்ணன், பிரசன்னா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்துக் கொண்டு முதல் செங்கல்லை எடுத்து வைக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் திரைத்துறை சார்ந்த 23 திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

Rajini Kamal will participate in Nadigar Sangam Building function

More Articles
Follows