BREAKING திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்; நானும் மாட்ட மாட்டேன்.. ரஜினி நெத்தியடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது…

’திருவள்ளூவர் ஞானி, சித்தர். அவர் நாத்திகரல்ல, ஆத்திகர். கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பாஜக, அவங்க டிவிட்டர்ல தனிப்பட்ட முறையில அதுபற்றி போட்டாங்க. அது அவங்க விருப்பம்.

நாட்டில் இவ்வளவு பிரச்னை இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு அதை, இவ்வளவு பெரிய விஷயமாக்கி, சர்ச்சையாக்கியது சில்லியாக இருக்கிறது.

என்னை, பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தது பேசினார். பாஜகவில் இணைய சொல்லி எனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை.

எனக்கு, பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது. திருவள்ளுவருக்கும் காவி சாயம் பூசறாங்க. திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன். எனக்கு ஐகான் விருது கொடுத்திருப்பதற்கு நன்றி.’ என்று பேசினார்.

Rajini press meet regarding Thiruvalluvar and BJP Controversy

BREAKING கமலின் கடைசி காலங்கள் பற்றி ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.

அப்போது மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலையை ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் ரஜினி பேசும்போது…

‘கமலின் கலையுலக தகப்பனார், என்னுடைய குரு கே.பாலசந்தர் சிலையை ராஜ்கமல் அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார் கமல்.

கமல் அரசியலுக்கு வந்தாலும் தாய் வீடான சினிமாவை விடமாட்டார். கமலுக்கு கலை உயிர்.

கமல் தன் கடைசி காலங்களில் அவர் சினிமாவில் நடிக்கவிட்டாலும் இந்த அலுவலகத்தில் வந்து இருப்பார். அவர் வேறு துறையில் (அரசியல்) இருந்தாலும் இங்கு வந்து அமருவார்.

ராஜ்கமல் தயாரிப்பில் எனக்கு ரொம்ப பிடித்த படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தை இரவு 2 மணிக்கு பார்த்து முடித்து கமல் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவரை பார்க்க முடியாது. உறங்குகிறார்கள் என்றார்கள்.

அவரை எழுப்பி கைகொடுத்து வாழ்த்தினேன். அவர் என்னை விட சின்ன வயது. இல்லை என்றால் அவர் காலில் விழுந்துருப்பேன்.

தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே அப்படியொரு முயற்சியை செய்திருந்தார் கமல்.

கமல் தயாரித்த அடுத்த படமான தேவர் மகன் ஒரு காவியம். கமல் எவ்வளவு சிந்தனை செய்து அந்த படத்தை எடுத்திருப்பார்.

நான் நிறைய சினிமா பார்ப்பேன். எனக்கு போர் அடித்தால் அடிக்கடி காட்பாதர், திருவிளையாடல், ஹேராம் படங்களை பார்ப்பேன். இதுவரை ஹேராம் படத்தை 30, 40 முறை பார்த்திருப்பேன்.

கே.பாலசந்தர் சிலையை திறந்தவுடன் அவருடன் நான் இருந்த ஞாபகங்கள் கண்முன் வந்து நிற்கிறது.

என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய கே பாலசந்தர் ஒன்றை சொன்னார். தமிழ் மட்டும் கற்றுக்கொள். நான் உன்னை எங்கு கொண்டுபோய் உட்கார வைக்கிறேன் பார் என்றார்.

அவர் தமிழ் ரசிகர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை அது.

கே.பி.க்கு மிகவும் பிடித்த குழந்தை கமல். அவர் மீது அபார பிரியம், தூரத்தில் இருந்துக் கொண்டே கமலை ரசித்துக் கொண்டே இருப்பார்’ என்றார்.

Rajini talks about Kamals last period in life at KB Statue inauguration

பிரசவ நேரத்தில் நிறுத்தி விட்டனர்; நடிகர் சங்க கட்டிடம் பற்றி நாசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் தமிழக அரசு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது குறித்து சங்கத்தின் சார்பில் உறுப்பினர்கள் நாசர், கார்த்தி, மனோபாலா, சச்சு, பூச்சி முருகன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த விபரம் வருமாறு:-

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த தேர்தல் முதல் எங்கள் அணி சட்ட ரீதியாகவே அணுகி வருகிறது. முந்தைய அணிகள் செய்த தவறுகளை நாங்கள் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.

இம்முறை தேர்தலுக்கு பல பிரச்சனைகள் வந்த போதிலும் அவற்றை சட்ட ரீதியாகவே சந்தித்தோம். இப்போது சங்கத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிக்கு எங்கள் ஒத்துழைப்பை அளிப்போம். அது எங்கள் கடமை.

ஆனால், எங்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் வைக்க முடியாத நிலையில் இதனை ஜனநாயக படுகொலையாகவே பார்க்கிறோம். ஆனால், அனைத்தையும் சட்ட ரீதியாகவே சந்திப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்கிறீர்கள் அப்படியானால் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களா ?

இல்லை. ஆனால் அவர் இன்று பொறுப்பேற்று கொண்டார் என்கிற போது அவருக்கு ஒத்துழைத்து கணக்கை ஒப்படைப்பது எங்களது கடமை. ஆனால் இதனை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்.

விஷால் அரசியலில் ஈடுபட்டதால் தான் இந்த பிரச்சனை நடப்பதாக சொல்வது பற்றி?

இது முழுக்க முழுக்க யூகத்தின் அடிப்படையாலானது. அவர் மீது குற்றமே சொல்லவில்லை எனும்போது ஏதாவது ஆதாரத்தின் படி குற்றம் சாட்டினால் நடவடிக்கை எடுக்கலாம் அப்படி எதுவுமே இல்லையே.

அமைச்சர்களை சந்தித்தீர்களா ?

சந்தித்தோம். ஆனால், அது பற்றி வெளியிட முடியாது. பிரச்சனை என்னவென்றால் கடந்த ஏப்ரல் மாதம் வரை பென்சன் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இப்போது வழக்கு நடப்பதால் கட்டடம் கட்டுவது தொடர்பாக எதுவும் நடக்க வாய்ப்பில்லை.

அடுத்த உறுப்பினர்கள் வந்து பொறுப்பேற்றால் தான் எல்லாம் நடக்க முடியும். ஆனால், நடிகர் சங்கத்தில் உதவி பெறுபவர்கள் சிலர் வழக்கு தொடர்கிறார்கள். அவர்களுக்கு ஆஜராகும் வக்கீல்கள் லட்சங்களில் ஃபீஸ் வாங்குபவர்கள்.

இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். நியாயமான தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அதற்கு சட்டப்படி போராடுவோம் என்றார் கார்த்தி.

அரசு சங்கத்திற்கு எதிராக இருக்கிறதா?

அதனை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

சிறப்பு அதிகாரியால் என்ன பிரச்சனை?

முன்னால் முதல்வர்கள் பலரும் பங்கு கொண்ட அமைப்பு தான் இந்த நடிகர் சங்கம். நாங்கள் வந்த பிறகு கடனை அடைத்திருக்கிறோம். கட்டடம் கிட்டதட்ட முடித்திருக்கிறோம். ஆனால், பிரசவ நேரத்தில் இதனை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

அரசு ஏன் சங்கத்திற்கு எதிராக இருப்பதாக நினைக்கிறீர்கள்?

அரசு அப்படி இல்லை என்றே நம்புகிறோம். ஆனால் இப்போது நடக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் சட்ட ரீதியாக சந்தித்து வெல்ல முடியுமென்று நம்புகிறோம். பத்திரிகைகளை நம்புகிறோம்.

கடைசியாக பூச்சி முருகன் அவர்கள் இப்போது நடந்து கொண்டிருப்பது ஜனநாயக படுகொலை இதனை பத்திரிகையாளர்கள் தான் தட்டிக்கேட்க வேண்டும் என்றார்.

Nadigar sangam members interaction with Press and Media

மஹிமா அதுல்யா இந்துஜா… மூவருக்கும் பற்றிய ஃபயர் லவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேயாத மான், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இந்துஜா.

குற்றம் 23, மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹிமா நம்பியார்.

காதல் கண் கட்டுதே, ஏமாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அதுல்யா.

இந்த நடிகைகள் மூவரும் நெருங்கிய தோழிகளாக உள்ளனர்.

இந்த நிலையில் இந்துஜா தன் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்த மஹிமா நாம கல்யாணம் பண்ணிக்கலமா? என கேட்டுள்ளார். அதற்கு அவரும் ஓகே சொல்ல அதுல்யாவும் கல்யாணம் செய்ய விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்துஜா என்னைக் கட்டிக்கலேன்னா உன்ன (அதுல்யா) நான் கட்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார் மகிமா.

பெண்கள் மூவரும் இப்படி பேசிக் கொள்வதால் இவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் என கிண்டலடித்து வருகின்றனர்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் சூர்யா & கௌதம் மேனன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் உருவாகி வருகிறது.

சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கவிருக்கிறாராம்.

கார்த்தி ஜோதிகா நடித்த படத்திற்கு சீமான் படத்தலைப்பா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜித்து ஜோசப்.

இவர் இயக்கும் புதிய படத்தில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இந்த நிலையில் ‘தம்பி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே இதே பெயரில் சீமான் இயக்கிய படத்தில் மாதவன் நடித்திருந்தார்.

விரைவில் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது.

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் டிசம்பர் 20ம் தேதி இப்படத்தை வெளியாகவுள்ளது.

More Articles
Follows