ரஜினி என்ற கடவுளுடன் சாமி தரிசனம் செய்தேன்; த்ரிஷா பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்,

இதில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றன்ர.

இதன் சூட்டிங் வாரணாசியில் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று ரஜினி சாமி தரிசனம் செய்துள்ளார்.

அப்போது அவருடன் நடிகை த்ரிஷாவும் உடனிருந்துள்ளார்.

இதுகுறித்து த்ரிஷா தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

“கடவுள் போன்ற ஒரு மனிதருடன் இணைந்து இறைவனை வழிபட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

Rajini and Trisha offer special prayers at Kashi Vishwanath Temple

*கொம்பு வச்ச சிங்கம்டா* படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர பாண்டியன் படத்தை தொடர்ந்து தனது 4வது படத்தில் மீண்டும் சசிகுமாருடன் இணைகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் சூரி, யோகி பாபு ஆகிய இருவரும் காமெடியன்களாக நடிக்கின்றனர்.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என முதலில் பேசப்பட்டது.

அவர் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்பட்டதால் வேறு நாயகியை தேடினர்.

இந்நிலையில் கவன் பட புகழ் மடோனா செபாஸ்டியன் இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

Madonna Sebastian to play Sasikumars pair in Kombu Vecha Singamda

அமலாபால் புகாரை நானும் கார்த்தியும் க்ளியர் செய்தோம்.; #METOO பற்றி விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சண்டக்கோழி2 பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் பேசியது…

இவ்வளவு மிகப்பெரிய படத்தை குறுகிய காலகட்டத்தில் முடிப்பது எளிதான விஷயம் கிடையாது.

கடைசி 45 நாட்கள் படப்பிடிப்பு மிகவும் கடினமாக இருந்தது. இப்படம் முடிந்து வெளியே வரும் போது முதலில் வரலட்சுமி அனைவரின் மனதிலும் இடம்பிடிப்பார்.

அடுத்து கீர்த்தி சுரேஷ். சண்டக்கோழி 2 வில் அவருடைய கதாபாத்திரம் அவ்வளவு அழகானது.

கடைசியாக இந்த விஷால் உங்கள் மனதில் நிற்பான். சண்டக்கோழி எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இரும்புத்திரைக்கு சிறப்பான இசையை தந்து படத்துக்கு வலு சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா, சண்டக்கோழி 2 வுக்கும் சிறப்பான இசையை தந்துள்ளார்.

சண்டக்கோழி 2 திருவிழா காலகட்டத்துக்கு ஏற்ற கலர்புல்லான படமாக இருக்கும். வெளியீட்டு தேதியை சொல்லிவிட்டு ஒரு படமெடுப்பது மிகவும் கஷ்டமான விஷயம்.

படக்குழுவுக்கு அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இனிமேல் அதை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். யுவன் ஷங்கர் என்னுடைய சகோதரன் மாதிரி. அவருடைய இசையில் பாடலும் மிகப்பெரிய ஹிட். முதல் பாகத்தை தயாரித்த என் சகோதரன் விக்ரமுக்கு நன்றி.

METOO விவகாரம் பற்றி கேட்டபோது…

நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன். METOOவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை.

ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றும்மொரு சமூகவலைதளம். அங்கு தான் கருத்து கூறவேண்டும் என்று இல்லை.
பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய கருத்துக்களை கூறலாம் என்று இருந்தேன். பாலியல் தொல்லைகள் நடப்பதற்கு முன்பே அமலா பால் புகார் செய்தது போல் எங்களிடம் புகார் செய்ய வேண்டும்.

மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார்.

நானும் கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். அதே போல் இதை போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

பிரச்சனை நடந்துவிட்டது என்று புகாரளிக்க சங்கம் ஒன்னும் காவல் நிலையம் அல்ல. பாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்” என்றார் விஷால்.

Vishal speech about METOO issue in Sandakozhi2 Pre Release Event

கட்டிப்பிடிக்க வந்த அமலாபாலை அவாய்ட் செய்த *ராட்சசன்* டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முண்டாசுப்பட்டி டைரக்டர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் மற்றும் அமலாபால் நடித்து வெளியான படம் ராட்சசன்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றி சந்திப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமலாபால்….

“ இப்படத்தில் என்னை நடிக்க வைத்த விஷ்ணு விஷாலுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பை முடித்து விட்டு நான் கிளம்பும் முன் இயக்குனரை பாசத்தோடு கட்டி அணைக்க முற்பட்டபோது, அவர் அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டார். அந்த அளவிற்கு இயக்குனர் மிகவும் நல்லவர்.

முண்டாசுப்பட்டி படத்தை முடித்த உடனே அவர் கல்யாணம் செய்திருக்கனும். இப்போ ராட்சசன் படத்தை முடித்துவிட்டார்.

அடுத்த படத்தை தொடங்குவதற்குள் அவர் கல்யாணம் செய்துக்கனும்.

பெண்கள் பல இடங்களில் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். #MeToo விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நான் இருப்பேன்’ என்று கூறினார்.

Ratsasan director Ramkumar avoid hug from Amala Paul

சென்னை அண்ணாநகரில் 10 தியேட்டர்களை திறந்த பிவிஆர் நிறுவனம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏற்கெனவே சென்னையில், பி.வி.ஆர். குழுமத்துக்கு சொந்தமாக சென்னை அம்ஞ்சிக்கரை அம்பா ஸ்கைவாக், வேளச்சேரி கிராண்ட் மால், பல்லாவரம் கிராண்ட் கலாடா, ரெட் ஹில்ஸ் SKLS GALAXY என்று நான்கு இடங்களில் மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதே பி.வி.ஆர். குழுமத்தின் 5-வது மல்டிப்ளக்ஸ் தியேட்டர் சென்னை அண்ணாநகரில் திறக்கப்பட்டுள்ளது.

பி.வி.அர்.குழுமத்தின் ‘ஐகான்’ திரையரங்க வளாகமாக அமைந்துள்ள இந்த மல்டிப்ளக்ஸில் மொத்தம் 10 ஸ்கிரீன்கள் இருக்கின்றன.

அதில் முதல் தியேட்டர் 444 இருக்கைகள் கொண்டதாகும். இரண்டாவது 177 இருக்கைக்கள், மூன்றாவது 366 இருக்கைகள், நான்காவது 388 இருக்கைகள், ஐந்தாவது 450 இருக்கைகள், ஆறாவது 190 இருக்கைகள், ஏழாவது 126 இருக்கைகள், எட்டாவது 115 இருக்கைகள், ஒன்பதாவது 136 இருக்கைகள், பத்தாவது 202 இருக்கைகள் என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள அத்தனை தியேட்டர்களிலும் உலகதரத்தில் சினிமாவை பார்த்து ரசிக்கும் விதமாக அதி நவீன் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அழகிய கலைவடிவத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த தியேட்டர் வளாகம் சினிமா ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை தரும் என்கின்றனர்.

ஹீரோயின் பால்கோவா; ஆனா எனக்கு தங்கச்சி… வேறென்ன வேண்டும் விழாவில் பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.எம்.ரெட் கார்பெட் பிலிம்ஸ், எஸ்.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் அனுமணி, சால திம்ம ரெட்டி இணைந்து தயாரிக்கும் படம் வேறென்ன வேண்டும்.

நரேன்ராம் தேஜ், பெரான கண்ணா, தர்ஷன், அனுபமா, சுப்பிரணி, ஆதித்யா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரேம்குமர் சிவபெருமான் ஒளிப்பதிவு செய்கிறார். சிவபார்வதி குமாரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு பேசினார்.

இந்த படத்தின் ஹீரோயின் பெரனா பார்க்க பால்கோவா மாதிரி இருக்கிறார். ஆனா நான் இதுக்கு மேல எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஏனென்றால் நாட்டு நிலைமை அப்படி. அவர் எனக்கு தங்கச்சி மாதிரி. என்று உஷாராக பேசினார் பேரரசு.

Director Perarasu speech at Verenna Vendum movie audio launch

More Articles
Follows