ராஜன் தேஜேஸ்வருடன் இணைந்த விஜய்யின் ஷாஜகான் பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘செயல்’ படத்தில் நாயகனாக நடித்துள்ள ராஜன் தேஜேஸ்வர் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தாக வேண்டும் என்கிற வெறியோடு களத்தில் குதித்திருக்கிறார்.

இது இவருக்கு முதல் படம் என்றாலும் அடுத்தடுத்து படங்கள் செய்யவிருக்கும் எதிர்காலத் திட்டத்தோடு இருக்கிறார்.

செயல் படத்தை C.R. கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நிர்மலா ராஜன் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்க, நாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.

மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ‘ஆடுகளம்’ ஜெயபாலன், தீனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகியிருக்கிறார்.

ஒளிப்பதிவு – V.இளையராஜா, இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில், சண்டை பயிற்சி – கனல் கண்ணன், நடனம் – பாபா பாஸ்கர், ஜானி, கலை – ஜான் பிரிட்டோ, தயாரிப்பு நிர்வாகம் – ஏ.பி.ரவி, தயாரிப்பு – C.R.ராஜன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர்.

தன்னுடைய சினிமா பிரவேசம் பற்றி புதுமுக நடிகர் ராஜன் தேஜேஸ்வர் பேசும்போது,

“எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது.

அந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக வெறியாகவே மாறிவிட்டது. சினிமாவைத் தவிர வேறு எந்தத் துறையையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

சினிமாவில் நடிக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற ஒரே திட்டத்தோடு இருந்தேன்.

அந்த நேரத்தில்தான் இயக்குநர் ரவி அப்புலுவை சந்தித்தேன். எனது லட்சியத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த அவர் எனக்காகவே உருவாக்கப்பட்டதை போன்ற ஒரு கதையை சொன்னார்.

எனக்கு எந்த மாதிரியான கதையில் நடிக்கனும்னு ஆர்வம் இருந்ததோ, அதற்கு ஏற்ற மாதிரியான கதையாக அது இருந்ததால் எனது முதல் படமாக அதையே தீர்மானித்து ஓ.கே. சொன்னேன். அதுதான் இந்த ‘செயல்’ திரைப்படம்.

விஜய்யை வைத்து ‘ஷாஜகான்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி அப்புலு 14 வருடங்களுக்குப் பிறகு அடுத்ததாக இயக்குகிற இந்த இரண்டாவது படத்தில் நான் நடிக்கும் பாக்யம் கிடைத்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

அப்படியும் அந்தக் கதைக்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் என் அப்பாவே ‘செயல்’ படத்தைத் தயாரிக்க முன் வந்தார். அப்படி ஆரம்பித்த ‘செயல்’ படம் மே 18-ம் தேதி வெளியாக உள்ளது.

முதல் படத்திலேயே பக்காவான கமர்ஷியல் கதை எனக்குக் கிடைச்சிருக்கு. இந்த படத்தில் எனக்கு ஆக்‌ஷன் இருக்கு. காமெடி இருக்கு. காதலும் இருக்கு. யானை பலம் கொண்ட ஒருவனை சாதாரண சராசரியான ஒருவன் மோதி சாய்ப்பதுதான் கதை.” என்றார் ராஜன் தேஜேஸ்வர்.

Rajan Tejaswar teams up with Shajahan director for Seyal movie

சூர்யாவுடன் ஜோடி போடும் கார்த்தி-விஜய் சேதுபதி பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து சூர்யாவின் 37வது படத்தையும் இயக்குகிறார் கே.வி.ஆனந்த்.

முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

கே.வி.ஆனந்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சூர்யா ஜோடியாக சாயிஷா சாய்கல் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இவர் தற்போது ஆர்யாவுடன் கஜினிகாந்த், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், விஜய் சேதுபதியுடன் ஜூங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sayesha Saigal romance with Suriyas 37th movie

ரஜினி-விஜய்-அஜித்தான் ஹீரோ; நான் இல்ல… சிவகார்த்திகேயன் ஃபீலீங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ்.

இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷாயாதவ் நடித்துள்ளார்.

இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி..

மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது..

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது…

“இந்த விழாவில் கலந்துகொள்வது என் கடமை. இதன்மூலம் தான் தினேஷ் மாஸ்டருக்கு கைமாறு செய்யமுடியும்.

விஜய் டிவி ஷோவுல ஆடும்போது உடம்பு அலுக்காமல், வேர்க்காமல் ஆடணுமா, தினேஷ் மாஸ்டரை தொடர்பு கொள்ளுங்கள் என கிண்டலடித்தேன்..

ஆனால் எதிர்நீச்சல் படத்தில் என்னை ஆடவைத்து பெண்டு நிமிர்த்திவிட்டார்..

ஒரு துறைல இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்..

விஜய் டிவி இருந்து சினிமாவுக்கு வந்தபோது, ஏம்ப்பா நல்லாத்தானே விஜய் டிவியில போய்ட்டிருக்கு. எதுக்கு நீ இப்போ நடிக்க போற.

ஹீரோ எல்லாம் உன்னால முடியாது என்றார்கள்.

ரஜினி, விஜய், அஜித்தான் ஹீரோஸ். நான் இல்ல. நான் ஜஸ்ட் ஒரு Lead Actor அவ்வளவுதான். என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அவுங்க சொல்றதையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு போகவேண்டும்..

நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்தப்படத்தை வாங்கியிருப்பது, மற்றவர்கள் எல்லாம் இந்தப்படத்தில் உங்கள் படத்தை பாராட்டுவது என 5௦ சதவீதம் தாண்டி விட்டீர்கள்..

மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் நூறு சதவீதம் வெற்றியை அடைவீர்கள்” என வாழ்த்தி பேசினார் சிவகார்த்திகேயன்.

Only Rajini Vijay Ajith are heros I am lead actor says Sivakarthikeyan

காளி படத்தின் அரும்பே பாடலால் மெய் சிலிர்க்கும் ஷில்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி இசையமைத்து, தயாரித்து நடித்துள்ள காளி படம் 18ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் “காளி” படத்தில் வரும் “அரும்பே” இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.

அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத்.

இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார்.

” காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது.

சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் பட்டியல் என இந்த படத்தில் வெற்றிக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளன.

என்னுடைய கதா பாத்திரத்தின் பெயர் பார்வதி. என் நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம்.

நான் நவ நாகரீகமான சூழ் நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கதாபாத்திரமோ முற்றிலும் மாறாக கிராமிய சூழ்நிலையில் வளரும் பெண். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் பாத்திரம். மனோதத்துவ ரீதியாக மிக மிக பலம் பொருந்திய கதாபாத்திரம்.

“அரும்பே” பாடல் நான் எண்ணி கூட பார்த்திராத உயரத்தை தந்து உள்ளது.

ரசிகர்கள் என்னை ஏற்று கொண்டு என்னை மேலும் உச்சத்தில் கொண்டு போவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்.

தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, கதாநாயகன் விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு நான் காலம் முழுக்க கடமை பட்டு உள்ளேன்” என்கிறார் அழகு புயல் ஷில்பா மஞ்சுநாத்.

Kaali movie heroine Shilfa Manjunath talks about Arumbae song

எழுத்தாளர் பாலகுமாரன் மரணம்; சிவகுமார்-நாசர்-லிங்குசாமி நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று மதியம் காலமானார்.

இலக்கிய உலகிலும் திரையுலகிலும் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

அவருக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் பேசியதாவது…

பாலகுமாரனின் எழுத்துக்களுக்கு முழுவதும் அடிப்படையே அவருடைய அம்மா என்று தான் சொல்ல வேண்டும். நடுத்தர வர்க்கத்து பெண்களின் வலிகள் வேதனைகள்.

சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தை தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர் பால குமாரன். 150 நாவல்கள் எழுதுவது என்பது சாதாரணமான ஒன்று அல்ல.

சினிமா மீது அவருக்கு முதலிலிருந்தே ஒரு காதல் இருந்தது. பாலகுமாரன் எழுத்துக்களுக்கு விகடன் மற்றும் கல்கி போன்ற பத்திரிகைகள் மிகப்பெரிய உதவியாக இருந்தது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற ஒரு தொடரையும் பிரபல பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ளார்.

கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர் இவர். அவருடைய நாயகன் மற்றும் குணா படங்களுக்கு இவர் தான் திரைக்கதை வசனம். காதலன் , ஜென்டில்மேன், ஜீன்ஸ் போன்ற பெரிய அளவில் ஓடிய படங்களுக்கு இவர் தன்னுடைய எழுத்துக்களை அர்பணித்துள்ளார்.

பாலகுமாரனுக்கு 45 வயதில் தான் ஆன்மிக ஆர்வம் வந்தது. அப்போது திருவண்ணாமலைக்கு செல்ல ஆரம்பித்த அவர் அதன் பின்னர் ஆன்மீகத்திலேயே பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

அதன் பின்னர் பட்டினத்தார் பாடல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஆன்மீக நூல் ஒன்றை எழுதியுள்ளார். என்னை பொறுத்த வரை பாலகுமாரன் முழுவதுமாக வாழ்ந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

அவருக்கு மனைவி உண்டு, காதல் மனைவி உண்டு. சூர்யா மற்றும் கௌரி என்று இரு குழந்தையும் உண்டு. அவரை முழுமையாக வாழ்ந்த மனிதராக தான் நான் பார்க்கிறேன்.

சித்தர்களின் வார்த்தைகள் படி ஆன்மா மட்டுமே நிரந்தரம். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்றார் நடிகர் சிவகுமார்.

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் பற்றி நடிகர் நாசர் !!

பாலகுமாரன் அய்யா அவர்களை என்னுடைய முதல் பட செட்டில் வைத்து தான் முதன் முதலாக சந்தித்தேன். அப்போது தான் இலக்கியம் எனக்கு பரிட்சயமான சமயம்.

நிறைய புத்தங்கங்களை படித்துக்கொண்டு இருந்த போது பாலகுமாரன் அவர்களின் புத்தகங்களையும் படித்தேன். மனித உணர்வுகளை மிகவும் ஆழமாக கூறிய எழுத்தாளர் அவர்.

அவர் நடிகர்களுக்காக சொன்ன விஷயம் நடிகர்கள் எவ்வளவு புத்தங்கள் படிக்கிறார்களா, எவ்வளவு மனித உறவுகள் பற்றி தெரிந்துகொள்கிறார்களோ அவ்வளவு தூரம் நல்ல நடிகராக முடியும். அவர் அன்று சொன்னதை நான் இன்றும் கடைபிடிக்கிறேன்.

நாயகன் படைத்தில் அவர் எழுதிய வசனத்தை நானும் பேசி நடித்துள்ளேன். அவருடைய புத்தங்கங்கள் மற்றும் நாயகன் போன்ற படங்களின் கடைசி பிரதி இருக்கும் வரையில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

எழுத்தாளர் பாலகுமாரனை பற்றி இயக்குநர் லிங்குசாமி பேசியது :-

நான் ஜென்டில்மேன் படத்தில் வேலை செய்யும் போது எனக்கு எழுத்தாளர் பாலகுமாரனை தெரியும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் இயக்குனர் ஷங்கர், வசந்தபாலன் போன்ற இயக்குநர்கள் ஆரம்பித்து வசந்தபாலன் வரை பலருடன் அவர் இனைந்து பணியாற்றியுள்ளார்.

சினிமா மற்றும் இலக்கியத்தில் ஜொலிக்க கடுமையான உழைப்பு மட்டும் போதாது வெறிவேண்டும் என்று கூறியவர் அவர். ஒரு காலத்தில் சுஜாதாவும் அவரும் தான் தமிழில் மிகப்பெரிய எழுத்தாளர்கள்.

ஒரு வாரத்தில் 7 நாட்களும் அவருடைய கதைகள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. அவருடைய ஆன்மீகமும் , எழுத்தும் மிகச்சிறந்தது. அவருடன் ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. அவருடைய ஆன்மா சாந்தியடைய நான் பிராத்திக்கிறேன் என்றார்.

Cinema celebrities pays final respect to writer Balakumaran

என் செம படத்தை விட ஒரு குப்பைக் கதை ஹிட்டாகனும்.: பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாண்டிராஜ் தயாரிப்பில் ஜிவி. பிரகாஷ் இசையமைத்து நடித்துள்ள படம் செம.

பாண்டிராஜின் உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் அர்த்தனா பினு நாயகியாக நடிக்க, யோகி பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த வாரம் மே 25ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் இன்று டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நாயகனாக நடித்துள்ள ஒரு குப்பைக் கதை படத்தின் இசை விழாவில் பாண்டிராஜ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது.. அடுத்த வாரம் நான் தயாரித்துள்ள செம படம் வெளியாகிறது.

அதே நாளில் இந்த ஒரு குப்பைக் கதை படமும் வெளியாகிறது.

என் செம படத்தை விட இந்த படம் மிகப்பெரிய ஹிட்டாகனும்.” என்று பேசினார்.

Oru Kuppai Kathai movie must win more then my sema movie says Pandiraj

More Articles
Follows