விஜய்சேதுபதியின் 96 அதிகாலை காட்சிகள் ரத்துக்கு விஷால் காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள படம் ’96’.

ஓரிரு தினங்களுக்கு முன்பே இப்படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி போடப்பட்டது. நல்ல விமர்சனங்கள் வரவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

எனவே இன்று வெளியாகும் இப்படத்திற்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் திட்டமிடப்பட்டு இருந்தன.

நேற்று இரவு இந்தப் படத்தின் பிரிமீயர் காட்சிகள் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டன.

அதுபோல சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அதிகாலை சிறப்புக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இப்படத்தின் பைனான்ஸ் பிரச்சினையில் ஏற்பட்ட கடைசி நேர பஞ்சாயத்துகளால் பட வெளியீடு தாமதம் ஆனது.

இதனிடையே, தனக்கு சேர வேண்டிய பாக்கித் தொகையை ’96’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் தர வேண்டி இருந்ததால் படத்தை விஷால் தடுத்து நிறுத்தினார் என தகவல்கள் பரவியது.

இது குறித்து தரமணி, அண்டாவ காணோம் உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளரான ஜே. சதீஷ்குமார் அவர்கள் வாட்சப் மூலம் ஒரு தகவலைப் பரப்பினார்.

இதுகுறித்து விசாரித்த போது கிடைத்த தகவல்கள் இதுதான்…

விஷால் நடித்த ‘கத்திச்சண்டை’ படத்தைத் தயாரித்த நந்தகோபாலே தான் ’96’ படத்தை தயாரித்துள்ளா.

மேலும், விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தையும் முதலில் அவர் தான் தயாரிப்பதாக இருந்ததாம்.

‘துப்பறிவாளன்’ படத்தைக் காட்டி பைனான்சியர்களிடம் நந்தகோபால் 21 கோடி ரூபாய் கடன் பெற்றாராம். அதில் 9 கோடியை மட்டும் கொடுத்து விட்டு மீதி 12 கோடி ரூபாய் பாக்கி வைத்தாராம்.

அவர் இழுத்தடிக்கவே கடைசியில் விஷாலே துப்பறிவாளன் படத் தயாரிப்பை ஏற்று படத்தைத் தயாரித்து முடித்து வெளியிட்டார். அந்த சமயத்திலேயே விஷால் மேலும் 6 கோடிகளை விட்டுக் கொடுத்தாராம்.

ஆக மீதி 6 கோடி மட்டுமே பாக்கி இருந்தது.

எனவே மீதமுள்ள பணத்தை 96 வெளியீட்டிற்கு முன்பாக தருவதாக உறுதி அளித்திருக்கிறார் நந்தகோபால். அப்போதும் அவர் தராமல் இழுத்தடித்திருக்கிறார்.

இருந்தபோதிலும் அதில் சில கோடிகளை வாங்கிக் கொண்டு படத்தை வெளியிட கடிதம் கொடுத்துள்ளார் விஷால்.

மீதமுள்ள பணத்தை வெளியீட்டுக்கு முன்பு கொடுக்காத காரணத்தால்தான் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாம்.

தற்போது அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு இப்போது காட்சிகள் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி ‘96’ படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் 7 கோடி. இதில் 4 கோடியை திருப்பிக் கொடுத்து பைனான்சியர் பாக்கியை கொடுக்க ஏற்பாடு செய்தார் என கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக விஷாலிடம் பேச தயாரிப்பாளர் தொடர்ந்து முயற்சித்தும் அவர் போனை எடுக்கவில்லை என்கின்றனர்.

நந்தகோபால் தயாரித்த கத்திச் சண்டை சம்பள பாக்கியை விஷால் விட்டுக் கொடுத்திருந்தால் தயாரிப்பாளர் பைனான்சியர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்க மாட்டார் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

மேலும் கத்திச் சண்டை படம் மிகப் பெரும் நஷ்டம் எனத் தெரிந்தும் விஷால் சம்பளப் பாக்கியை விட்டுக் கொடுக்கவில்லை எனவும் ஒரு தகவல் பரவி வருகீறது.

இவை ஒருபுறம் இருக்க, நல்ல விமர்சனங்களை பெற்ற ’96’ படம் வெளியானால் மற்றொரு படத்திற்குப் பாதிப்பாக இருக்கும் எனவும் அதனால்தான் இந்த நெருக்கடியை வேறு சிலர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Producer JSK speaks against Vishal regarding 96 Movie release issue

ரஜினியின் பேட்ட படத்தில் த்ரிஷாவுக்கு அண்ணனாக சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்திரன் படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் பேட்ட.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அண்மையில் ரஜினி, விஜய்சேதுபதி மோதும் சண்டைக்காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட்டன.

அதனையடுத்து சில காட்சிகள் வாரணாசியில் படமாக்கப்பட்டது.

தற்போது ரஜினி மற்றும் திரிஷா இணையும் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்

இந்நிலையில் ரஜினியுடன் ஒரு முக்கிய கேரக்டரில் சசிகுமார் நடிக்க இணைந்துள்ளார்.

அவர் ரஜினிக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே சிம்ரன், பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம், நவாசுதீன் சித்திக், மணிகண்ட ஆச்சாரி உள்ளிட்ட பிரபலங்களும் பேட்ட படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sasikumar as Trisha brother in Rajinikanth Petta movie

தளபதி விஜய்யின் சர்கார் பேச்சு… சறுக்கல்..? சக்ஸஸ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக் காலமாகவே டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்துவிடுகிறது.

அதுவும் விஜய் படங்கள் இது பிரச்சினைகள் அதிகமாகவே காணப்படுகிறது.

தலைவா, கத்தி உள்ளிட்ட படங்களும் இந்த பிரச்சினைகளை சந்தித்தது.

கடந்தாண்டு வெளியான மெர்சல் திரைப்படமும் ஜிஎஸ்டி உள்ளிட்ட அரசியல் வசனங்களால் பெரும் சோதனைகளை சந்தித்தது.

ஆனால் அந்த பிரச்சினைகளே அப்படத்திற்கு விளம்பரமாக அமைய இந்தியா முழுக்க பிரபலமானார் விஜய்.

இந்நிலையில் அக். 2ஆம் தேதி சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அரசியல் பேச்சு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அரசாங்கம், ஊழல், முதல்வர் நல்லாட்சி, அறிவுரை என பலவற்றையும் பேசினார் விஜய்.

இதில் அரசியல் மெர்சலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இது அரசியல் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் இந்த பேச்சு சர்கார் ரிலீஸில் சறுக்கலை ஏற்படுத்துமா? அல்லது மெர்சல் போல பெரிய சக்ஸ்ஸை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Vijays political speech at Sarkar Audio launch news updates

கிராமப்புற ஆசிரியரை 3 வருடத்திற்கு தத்தெடுத்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், இசையமைப்பாளர் என பிஸியாக வலம் வந்தாலும் தமிழ் சமுதாயத்திற்காக எப்போதும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது குரல் கொடுப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க நிதியளித்த முதல் நடிகர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தாய்மொழியில் தமிழில் கையெழுத்து இட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், விழுப்புரம் மரக்காணம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியரை 3 ஆண்டுகளுக்கு தத்தெடுத்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு அந்த ஆசிரியரின் சம்பளம் சம்பந்தப்பட்ட அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுள்ளார்.

மேலும், ஆசிரியர் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற பள்ளிகளின் ஆசிரியர்களை தத்தெடுத்தால், கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பற்றாக்குறை நீங்கி விடும் என தெரிவித்துள்ளார்.

எனவே நல்ல உள்ளங்கள் தாமாகவே முன்வந்து ஆசிரியர்களை தத்தெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

GV Prakashs noble gesture for education He adopt a Govt teacher for 3 years

சீறும் புலிகள் படத்தில் விடுதலைப்புலி பிரபாகரனாக பாபி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிகர்தண்டா படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து தேசிய விருதை வென்றவர் பாபி சிம்ஹா.

அதனையடுத்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அண்மையில் சாமி2 படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

தற்போது ரஜினிகாந்துடன் பேட்ட, அக்னிதேவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்தப்படியாக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபாகரனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஸ்டூடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை லைட்மேன், நீலம் படங்களை இயக்கிய வெங்கடேஷ் குமார் இயக்குகிறார்.

இவர், மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். இவர் இயக்கிய நீலம் படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

In LTTE Chief Prabhakaran Biopic Bobby Simha Will Be Casted

ரஜினி என்ற புத்தகத்தை படிக்க முடியாது; பெருமைப்படுகிறேன்.. : மணிகண்ட ஆச்சாரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படம் பேட்ட.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் தமிழ் திரையுலகைச் சேர்ந்த விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் பாலிவுட்டை சேர்ந்த நவாசுதீன் சித்திக் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்த மணிகண்ட ஆச்சாரி என்பவரும் நடித்து வருகிறார்.

அண்மையில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கம்மட்டிப்பாடம் என்ற படத்தில் ரசிகர்களின் முழு கவனம் ஈர்த்தவர் மணிகண்ட ஆச்சாரி.

ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பரவசத்துடன் பகிர்ந்துள்ளார் அவர்.

“ரஜினி சாரிடம் நான் ஆச்சர்யப்பட்ட விஷயங்கள் மனிதநேயமும் நேரம் தவறாமையும் தான். இப்போதும் ஒரு இளைஞனைப் போல சுறுசுறுப்போடுதான் இருக்கிறார்.

மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் இயக்குனரிடம் சந்தேகங்களை கேட்டு அவர்களை சொல்வதை அப்படியே செய்கிறார்.

அவர் மிகப்பெரிய புத்தகம். என்னால் அந்த முழு புத்தகத்தையும் படிக்கமுடியாது. அவருடன் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார் மணிகண்ட ஆச்சாரி.

Manikandan Achari shares his working experience with Rajini in Petta

More Articles
Follows