ஐசரி கணேஷ் தயாரிப்பில் மீண்டும் இணையும் பிரபுதேவா நயன்தாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சங்கத்துக்கு உதவும் வகையில் பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகவிருந்த இந்த படத்தில் சாயிஷா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

கடந்த 2017-ம் ஆண்டு இந்த படம் தொடங்கப்பட்டது.

ஆனால் சில பிரச்சினைகளால் இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் இந்த படத்தை தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் பிரபுதேவா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நாயகியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

கார்த்தியும் விஷாலும் இணைந்து நடிப்பார்களா? என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா.

அதனையடுத்து இருவரும் சில ஆண்டுகள் காதலித்தனர். திருமணம் வரை சென்ற அவர்களது காதல் திடீரென முறிந்தது.

தற்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வருகிறார்.

இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் ஐசரி கணேஷ் தரப்பில்… ‘கருப்புராஜா வெள்ளைராஜா’ படம் மீண்டும் உருவாகவில்லை. அதுகுறித்து பரவிவரும் செய்திகள் உண்மையில்லை. ” என கூறியுள்ளார்.

பசியால் இறந்த தாயை எழுப்ப முயன்ற குழந்தை.; குழந்தையை தத்து எடுத்தார் ஷாருக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் மே 27ந் தேதி அன்று பீகார் மாநிலம் முசார்பர்புர் நகர் ரயில் நிலையத்தில் ஒரு இளம் தாய் பசியால் உயிரிழந்தாக கூறப்படுகிறது.

அவரது உடல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கிடத்தப்பட்டு, துணியால் மூடப்பட்டிருந்தது.

தன் தாய் இறந்ததை கூட அறியாத பிஞ்சுக் குழந்தை தாயை எழுப்ப முயன்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கானின் ‘மீர்’ பவுண்டேஷன் அந்த குழந்தையை தத்து எடுத்துள்ளது.

இது தொடர்பாக டிவிட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

பெற்றோரை இழந்த வலியை, தாங்க இறைவன் குழந்தைக்கு வலிமை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த வலி எப்படி இருக்கும் என்று தமக்கு தெரியும் என்று குறிப்பிட்ட ஷாரூக், நமது அன்பும் ஆதரவும் குழந்தைக்குத் தேவை என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவுக்கு மருந்து.; ரஷ்யாவில் AVIFAVIR; ஜப்பானில் AVIGAN..; இந்தியாவில்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

இதற்கு மருந்து கண்டுபிடிக்க கடந்த 6 மாதங்களாக உலக மருத்து வல்லுனர்கள் முயற்சித்து வருகின்றனர்.

கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனாவுக்கு “அவிஃபாவிர்”(Avifavir) என்ற மாத்திரையை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

1990களில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபாவிபைராவிர் (Favipiravir) மாத்திரையில் சில மாற்றங்கள் செய்து இந்த மாத்திரையை உருவாக்கி வருகிறார்களாம்.

இதே மாத்திரையை கொண்டு தான் அவிகன் (Avigan) என்ற பெயரில் ஜப்பான் நாட்டிலும் ஆராய்ச்சி நடைப்பெற்று வருகிறது.

இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி & மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

‘மாயபிம்பம்’ படத்திற்கு கை கொடுத்த ‘மாஸ்டர் பீஸ்’ & ‘மாஸ்டர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக, அமரகாவியம், காதல், மைனா, 96, உள்ளிட்ட காதல் பட வரிசை காவியம் படைக்க போகும் படம் ‘மாயபிம்பம்’. (நாங்களும் பாத்துட்டோம்ல..)

கே.ஜே.சுரேந்தர் இப்படத்தை எழுதி இயக்கியதோடு ‘செல்ஃப் ஸ்டார்ட் ப்ரொடக்ஷன்’ சார்பில் தயாரித்திருக்கிறார்.
ஆகாஷ், ஹரிருத்ரன், ஜானகி, ராஜேஷ்பாலா, அருண்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

புகைப்படம் – எட்வின் சகாய், இசை – நந்தா, படத்தொகுப்பு – வினோத் சிவகுமார், கலை – மார்ட்டின் தீட்ஸ், நடனம் – ஸ்ரீக்ரிஷ், ஒலி – ஷான்சவன், டிசைன் – சந்துரு.

இந்த படம் வெளியீட்டுக்கு தயாராகி 2 வருடங்களை கடந்துவிட்டாலும் இன்னும் ரிலீசாகவில்லை.

இதன் இயக்குநர் சுரேந்தரும் புதுமுகம் என்பதால் அப்படத்தைத் தயாரிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

எனவே தங்கள் மகனின் கஷ்டத்தை உணர்ந்த பெற்றோர் தங்களின் வாழ்நாள் சேமிப்பையே கொடுத்துள்ளனர்.

படத்தை பார்த்த பெற்றோர், குடும்பத்தார் நண்பர்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.

பிரபல டைரக்டர்கள் பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், பாண்டிராஜ், வெற்றிமாறன் போன்றவர்கள் இந்த படத்தை பார்த்து பிரமித்து “காதலின் வலியை யதார்த்தமாக சொல்லியிருக்கிறீர்கள்,” என வாழ்த்தியுள்ளனர்.

தற்போது இப்பட உரிமையை மாஸ்டர் பீஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. உலகளவில் இவர்கள் படத்தை வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஜீன் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு விஜய்யின் மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மாயபிம்பம் படத்தின் நியூ லுக் போஸ்டரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Maayabimbum New look will be released by Master Director Lokesh

பட்டாசு மறைத்து வைக்கப்பட்ட பழத்தை தின்ற கர்ப்பிணி யானை மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் பிரபலமான பலவற்றில் யானையும் ஒன்று. யானைகள் இல்லாத பெரிய கோயில்களே இல்லை எனலாம்.

திருச்சூர் பூரம் திருவிழா என்றால் யானைகளை பார்ப்பதற்காகவே பெருமளவில் கூட்டம் கூடும். ஆனா அதே கேரளாவில் யானை ஒன்று கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காட்டுள்குள் உணவு கிடைக்காத யானை ஒன்று ஊருக்குள் சுற்றித் திரிந்துள்ளது. அது கர்ப்பிணி யானை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த யானைக்கு மக்கள் சிலர் அண்ணாச்சி பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்துள்ளனர்.

அதை அறியாமல் தின்ற யானை பட்டாசு வெடித்து பலத்த காயமடைந்து அந்த சூடு தாங்காமல் அருகேயுள்ள ஆற்று தண்ணீரில் இறங்கி நின்று உயிருக்கு போராடியுள்ளது.

பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் பெண் யானையை மீட்க போராடியுள்ளனர் வனத்துறையினர்.

ஆனால் முயற்சி தோல்வியில் முடிய யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த நிகழ்வு நடந்தாலும் சில தினங்கள் ஆனாலும் தற்போது தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மே 27 மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்தது. பின்னர் அதன் உடலை மீட்டு வன பகுதிக்குள் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தினை வனத்துறை ஊழியர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனைப் பார்த்த அனைரும் சம்பந்தப்பட்டவர்களை மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஆஷிக் அலி என்பவர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளதாவது..

காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக பட்டாசுகளை நிரப்பிய அண்ணாச்சி பழங்களை வயலில் பயன்படுத்துவார்கள்.
உணவு தேடி ஊருக்குள் நுழைந்த யானை அந்த பழத்தை சாப்பிட்டு இருக்கிறது.

யானையின் வாயில் பட்டாசு வெடித்ததையடுத்து யானையின் உடல் நலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் யானையால் ஒன்று செய்ய முடியாமல் தவித்துள்ளது.

தன்னுடைய வாயில் ஏற்பட்ட காயத்தை சரி செய்து கொள்ள அல்லது பட்டாசு காயத்தால் ஈக்கள் மற்ற பூச்சுகள் தீண்டுவதை தவிர்க்க யானை நீரில் நின்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Pregnant elephant dies after being fed pineapple stuffed with crackers

பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை சினிமாவாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கையை திரைப்படமாக்கி வருவது தற்போது அதிகரித்து வருகிறது-

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவாகிறது.

அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெலுங்கில் ‘ராஜு காடு’ என்கிற படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி இந்தப்படத்தை இயக்க உள்ளார். கோனா பிலிம் கார்ப்பரேஷன் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

பல மொழிகளில் இந்தப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

கர்ணம் மல்லேஸ்வரியாக நடிக்கப்போவது யார்? என்ற அறிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி தனது 13 வயதில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றார்..

2000-ல் சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் 69 கிலோ. எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே பெண்மணி என்ற பெருமையை பெற்றார். ஆந்திர பிரதேசத்தின் இரும்புப்பெண்’ என்கிற பெருமையும் இவருக்கு உள்ளது.

More Articles
Follows