தனுஷின் ‘கொடி’யை உயர பறக்க வைக்கும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறைகளில் பன்முகம் காட்டி வரும் தனுஷ், இதுவரை 30 படங்களில் வரை நடித்துவிட்டாலும், முதன்முறையாக கொடி படத்தில்தான் இருவேடங்களில் நடித்துள்ளார்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இதில் தனுஷுடன் முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பின்னணி பாடகியான சித்ராவும் இணைந்துள்ளார்.

இவர் பாடியுள்ள பாடலை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். இது தன் வாழ்வில் பெருமையான விஷயம் என பதிவிட்டுள்ளார் விவேக்.

தீபாவளி ரிலீஸை குறிவைத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

வாழ்த்துவதில் இணைந்த ரஜினி-விஜய்-சூர்யா-தனுஷ்-சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் மற்றும் வெண்கலம் வென்ற வருண்சிங் ஆகியோருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தற்போது ரஜினிகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரைத்துறை மட்டுமல்லாது எந்த துறையானாலும் சாதனையாளர்களை தேடிச் சென்று வாழ்த்துவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே.

பாராட்டுவதற்கும் நல்ல மனசு வேண்டும் என்பது சரியாகத்தான் இருக்கிறது.

இளைய தளபதிக்கு ஈடு கொடுப்பாரா கீர்த்தி சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நாயர்களின் முதல் சாய்ஸாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது விஜய்யுடன் பைரவா படத்தில் டூயட் பாடி வருகிறார்.

விஜய் படங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விஷயங்களில் முக்கியமானது அவரது நடனம்தான்.

எந்தவிதமான மூவ்மெண்ட்ஸ் என்றாலும் மிக கேஷுவலாக செய்துவிடுவார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இருக்கின்றதாம்.

இதுவரை 3 பாடல்கள் படமாக்கப்பட்டுவிட்டதாம்.

இன்னும் 2 பாடல்களே மட்டுமே படமாக்கப்பட உள்ள நிலையில், விஜய்யுடன் நடனமாட கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம் கீர்த்தி.

விஜய்க்கு ஈடுகொடுத்து நடனமாடியிருக்கிறாரா? என்பதை தெரிந்து கொள்ள அடுத்த 2017 பொங்கல் வரை காத்திருப்போம்.

வசூல் முகனாக பட்டைய கிளப்பும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் வெற்றி பெற்ற ‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் 10 எண்றத்துக்குள்ள படம் வந்தாலும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

எனவே அண்மையில் வெளியான இருமுகன் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவானது.

மேலும் இதில் விக்ரம் ஏற்றிருந்த வேடங்கள் பாப்புலராக பேசப்பட்டது.

இந்நிலையில் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த விவரங்களை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மட்டும் ரூ 20.19 கோடி வசூல் செய்துள்ளது.

ஆந்திரா மற்றும்தெலுங்கானாவில் ரூ 13.5 கோடியும், கேரளாவில் ரூ 3.6 கோடி முறையே வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளில் ரூ 14 கோடி என மொத்தம் ரூ 51.19 கோடி வரை வசூல் செய்துள்ளது.

கிழமை வாரியாக நான்கு நாட்கள் விவரம்..

வெளியான வியாழக்கிழமையில் ரூ. 12.66 கோடியும், வெள்ளிக்கிழமை ரூ. 10.12 கோடியும், சனிக்கிழமை ரூ. 13.94 கோடியும், ஞாயிற்றுக்கிழமை ரூ. 14.47 கோடியும் வசூலித்துள்ளது.

இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

நயன்தாராவுக்கு வில்லனாக மாறிய கௌதம்மேனன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வா, நயன்தாரா நடிக்கின்றனர்.

இதில் அதர்வாவுக்கு ஜோடி நயன்தாரா இல்லையென்பதால் மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் வேடத்தில் கௌதம் மேனன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன்பு, நிவின்பாலி நாயகனாக நடிக்கும் படத்தில் கௌதம் மேனன் நடிக்க ஒப்புக் கொண்டதும், பின்பு விலகியதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரசிகர்களின் அன்பை திரும்பி கொடுக்க வரும் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை மேற்கொண்டார் கமல்ஹாசன்.

தற்போது ஓய்வில் இருக்கும் இவர், விரைவில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

இதுகுறித்து தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“நான் எழுந்து நடக்க தயாராகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்களுடைய அன்பே என்னை இவ்வளவு சீக்கிரத்தில் குணமடைய செய்தது.

சபாஷ் நாயுடு மற்றும் வருங்கால படங்களின் முமூலம் என் அன்பை திருப்பி செலுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows