பேட்ட படத்தில் ஆணவக்கொலை..? ரஜினி எடுக்கும் புது அவதாரம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு சென்சாரில் யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அடுத்த வருடம் 2019 பொங்கல் தினத்தில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் பேட்ட படத்தின் ஒன் லைன் கதை இதுதான் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் ஆணவக்கொலைகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

இதனை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

பேட்ட படத்தில் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, சசிகுமார், உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Petta movie will be based on Caste Killing case Honour Killing

அருள்நிதி – ஸ்ரத்தா ஸ்ரீநாத் இணைந்துள்ள பட டைட்டில் லுக் விரைவில் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘SP சினிமாஸ் தயாரிப்பு எண் 2’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சில மாதங்களுக்கு முன் சிறிய சம்பிரதாய சடங்குகளுடன் படப்பிடிப்பு துவங்கியது.

குறிப்பிடத்தக்க வகையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்சன் வேலைகள் பரபரப்பான வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

முன்னணி நடிகர்கள் அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகிய இருவருமே ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதைகளில் நடிப்பதில் எப்பொழுதும் ஆர்வம் காட்டுபவர்கள்.

இருவரும் இணைந்து நடிக்கும் இந்த “தயாரிப்பு எண் 2” மிகவும் சிறப்பான தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

பரத் நீலகண்டன் படத்தை இயக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்திய சென்சேஷனல் இசையமைப்பாளர் தர்புகா சிவா இசையமைக்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

நடிகர்கள்: அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யோகிபாபு, காயத்ரி, ரமேஷ் திலக், ‘எருமை சாணி’ விஜய், ‘கும்கி’ அஸ்வின், ‘ஜாங்கிரி’ மதுமிதா & மற்றும் பலர்.

தயாரிப்பாளர்கள்: S.P சங்கர், சாந்தப்பிரியா

இணை தயாரிப்பாளர்கள்: கிஷோர் சம்பத் & டெஷா ஸ்ரீ. டி

எழுத்து & இயக்கம்: பரத் நீலகண்டன்

ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்

இசையமைப்பாளர்: தர்புகா சிவா

படத்தொகுப்பு: ரூபன்

திரைக்கதை ஆய்வு & ஒலி வடிவமைப்பு: உதயகுமார்.டி

தயாரிப்பு வடிவமைப்புகள்: கமலநாதன்

சண்டைப் பயிற்சி: சுதேஷ்

பாடல்கள்: தாமரை

நிர்வாக தயாரிப்பு: சதீஷ் குமார்.டி

தமிழ் சவுண்ட் பார்ட்டி ஜாக்குவார் தங்கத்தை கிழித்த முன்னாள் கவர்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோ ஜெயந்த், மகாராஷ்ட்டிராவைச் சார்ந்த ஊர்வசி ஜோஷி இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் வேதமானவன்.

ஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி, செல்லம் அன்கோ கிரியேஷன்ஸ் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கியுள்ள படம் இது.

இப்படத்தில் டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை எஸ்.கண்ணன் கவனிக்க இசை பணியை இசை கவிஞர் செளந்தர்யன் மேற்கொண்டுள்ளார்.

‘சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிக்கு, இந்த சமூகம் என்ன வரவேற்பு கொடுக்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதையாம்.

தான் நீதிபதியாக இருந்தபோது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார் புகழேந்தி.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் கே. பாக்யராஜ் வேதமானவன் பட பாடல்களை வெளியிட்டார்.

கில்டு சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

ஜாக்குவார் தங்கம் எந்த மேடையில் பேசினாலும் தமிழர்கள் மட்டும் தான் தமிழ் படங்களில் பணி புரிய வேண்டும் என சவுண்ட்டாக பேசுவார்.

ஆனால் அவர் காலங்களில் அவர் மற்ற மொழி படங்களில் பணி புரிந்துள்ளார் என்பது வேறுகதை.

இந்நிலையில் இதனைக் கண்டிக்கும் வகையில் வேதமானவன் இசை விழாவில் கலந்துக் கொண்ட கர்நாடகாவின் முன்னாள் கவர்னரும் முன்னாள் நீதிபதியுமான மோகன் (வயது 89) பேசியதாவது….

நான் கர்நாடகாவில் கவர்னராக இருந்தேன். ஓய்வு பெறும்போது நான் ஒரு தமிழராக இருந்தபோதும அந்த மக்கள் என்னை விடவில்லை.

காரணம் நம்பிப்கை. நல்ல நடத்தை தான். அங்கு மொழி தேவையில்லை. அதுபோல் கலைஞர்களுக்கும் மொழி பேதம் கிடையாது.

தமிழ் படத்தில் தமிழர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என கூறும் ஜாக்குவார் அவர்கள் தமிழ் சினிமாவை தமிழர்கள் மட்டும்தான் பார்க்கனும்? என கூற முடியுமா? அவரால் முடியாது.” என பரபரப்பாக பேசினார் இந்த 89 வயது முன்னாள் நீதிபதி மோகன்.

கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் மைம் கோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மைம் கோபி சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர். இவர் மைம் கலை , நடிப்பு பயிற்சி ஆசிரியராகவும் இருக்கிறார். மைம் கலை மூலமாக பல நிகழ்ச்சிகள் நடத்தியும் வருபவர்.

சென்னை எழும்பூர் டான் போஸ்கோ பள்ளியுடன் இணைந்து மைம் நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் நிதியை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் மைம் நிகழ்ச்சியை டான் போஸ்கோ பள்ளி கலையரங்கில் நடத்தினார்கள்.

நடிகர்களாக டான் போஸ்கோ பள்ளி மாணவர்களையே பயிற்சி கொடுத்து நடிக்கவும் வைத்துள்ளார்.

இது பற்றி மைம் கோபி கூறுகையில்…

குழந்தைப்பருவத்தில் நாம் சொல்லிக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்தான் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது.

நல்ல பழக்கங்களும், உதவும் எண்ணமும், மனிதபிமானமும் சிறு வயதிலிருந்தே நாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும் என்கிற நோக்கில் டான் போஸ்கோ பள்ளி மாணவர்களை மைம் கலையை சொல்லிக்கொடுத்து அதை மேடையேற்றி அதில் வரும் நிதியை புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ உதவிக்கும், ஆதரவற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தினோம்.

தான் நடித்த நிகழ்ச்சியில் கிடைக்கும் வருவாய் எங்கோ இருக்கும் ஆதரவற்றவர்களுக்கும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவ உதவிக்கும் உதவப்போகிறது என்பதை இந்த மாணவர்களுக்கு உணர்த்தினோம்.

மாணவர்களும் ஆர்வத்துடன் இந்த மைம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் மத்தியில் உதவும் குணத்தை ஏறபடுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த டான் போஸ்கோ பள்ளி பங்குத் தந்தை லூயி பிலிப் மற்றும் நிற்வாகத்தினருக்கு எனது நன்றிகள். என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் நந்தகுமார், நடன இயக்குனர் சாண்டி, இமான் அண்ணாச்சி, நடிகை அர்ச்சனா, நடிகர் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மலையாளத்தில் விஜய்சேதுபதி அறிமுகம்; ஜெயராமுடன் இணைகிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில்தான் பீட்சா, தென்மேற்கு பருவக்காற்று படங்கள் வந்த மாதிரி இருந்தது. அதற்குள் 25 படங்களை முடித்துவிட்டார் விஜய்சேதுபதி.

மாத்ததிற்கு ஒரு படம் என்றளவில் நிறைய படங்களை கொடுத்து வருகிறார்.

இதனிடையில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தெலுங்கை அடுத்து மலையாளத்திலும் நடிக்கிறார்.

சனில் இயக்கத்தில் ஜெயராம் நாயகனாக நடிக்கும் மர்கோனி மத்தாய் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் இந்த சீதக்காதி.

Vijay Sethupathi set to make Malayalam debut with Jayaram

ஹன்சிகாவின் குணாதிசயங்களை குறிக்கும் *MAHA* லெட்டர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Magnetizing, Alluring, Hidden & Aggressive’ ஆகியவை இந்த ‘MAHA’ படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிக்கிறது.

மேலும், மொத்த படமும் நாயகி ஹன்சிகாவின் குணாதிசயங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்திருக்கிறது.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி மதியழகன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

“ஆம், ஒரு தயாரிப்பாளராக மிகக் கடுமையாக பணிபுரியும் இந்த குழுவை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தும் முதல் விஷயம், படக்குழுவினர் சொன்ன தேதிக்குள் முடித்துக் கொடுக்கும் போது தான்.

இயக்குனர் ஜமீல், ஹன்சிகா மொத்வானி, ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் மற்றும் குழுவில் உள்ள அனைவரின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி மதியழகன்.

“வழக்கமாக சினிமாவில், திறமையான கலைஞர்களை இயக்குநரின் நடிகர், தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் நான் தொடர்ந்து பெரும் பொறுப்புடன் செயல்படும் ஒரு தயாரிப்பாளரின் குழுவைக் கொண்டிருக்கிறேன் என கருதுகிறேன்.

இது எனக்கு ஒரு நேர்மறையான உணர்வைத் தருகிறது. இப்போதே எனக்கு படத்தின் தரம் கண் முன்னால் தெரிகிறது” என்றார்.

தயாரிப்பாளர் மதியழகன் வெவ்வேறு நிலைகளில் உருவாகி வரும், நயன்தாராவின் கொலையுதிர் காலம், அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ என நல்ல தரமான படங்களை தயாரித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்க, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘மகா’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அம்சங்களை கொண்ட ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படம்.

Maha title itself reveals 4 characters of Heroine Hanshika

More Articles
Follows