ரசிகர்களால் பெருமை; எங்களை பிரிக்க முடியாது என ரஜினி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார்.

விரைவில் தன் அரசியல் கட்சி மற்றும் கொடியை அறிவிக்க உள்ளார்.

இதனிடையில் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இதில் மன்ற விதிகளை மீறியதாக சிலரை ரஜினிகாந்த் நீக்கினார்.

அவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள் என்பதற்காக காரணத்தை ஒரு நீண்ட அறிக்கையாக சில தினங்களுக்கு முன் வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.

தற்போது நீக்கப்பட்டவர்களில் சிலர் நேரடியாகவும், கடிதம் மூலமும் ரஜினியிடம் மன்னிப்பு கோரியுள்ளர்.

இதனையடுத்து, அவர்களை மீண்டும் மக்கள் மன்றத்தில் இணைப்பது குறித்து, சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் ரஜினிகாந்த்.

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியுள்ளதாவது…

நான் கடந்த 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்த சில உண்மைகளை சொல்லியிருந்தேன்.

அது கசப்பானதாக இருந்தாலும், அதில் உள்ள உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களை போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு பெருமைப்படுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும், எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் சென்றாலும், அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்.”

என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No power can split me and my fans says Rajinikanth

*டகரு* படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற *கொம்பன்* முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சசிகுமார் நடித்த ‘குட்டிப் புலி’, கார்த்தி நடித்த கொம்பன், விஷால் நடித்த ‘மருது’ ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா.

தற்போது கௌதம் கார்த்திக், சூரி, மஞ்சிமா மோகன் நடிக்கும் ‘தேவராட்டம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு மதுரை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘டகரு’ என்ற கன்னட படத்தின் ரீமேக் உரிமையை இயக்குனர் முத்தையா கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சிவராஜ்குமார் நடித்திருந்த ‘டகரு’ படம் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Muthaiah got remake rights of Kannada Super Hit Tagaru

டூப் போடும் ஹீரோக்களுக்கு தன்ஷிகா சேலஞ்ச்..; வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தவர் தன்ஷிகா.

இதனையடுத்து இவரது நடிப்பில் ராணி, விழித்திரு, காலக்கூத்து என அடுத்தடுத்து படங்கள் வெளியானது.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு கன்னடம் என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது தெலுங்கு & கன்னடத்தில் தயாராகும் Udgarsha என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்காக அவர் டூப் இல்லாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்து வருகிறார்.

அதாவது ஆக்சன் நடிகர்களை போலவே ரிஸ்க் எடுத்துள்ளார்.

சில நடிகர்கள் ரிஸ்க் எடுக்காமல் டூப் போடுவது நாம் அறிந்த ஒன்றுதான்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உனக்கு மட்டும்தான் பதவியா? எங்களுக்கில்லையா.? ரஜினி ரசிகன் பெயரில் திமுக கிண்டல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெறும் ரசிகர்மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்தக் கருத்துக்கு அப்பாவி ரசிகன் என்ன சொல்லுகிறான்? என்பதாக வடிவமைத்து திமுக.வின் நாளேடான முரசொலியில் கிண்டலடித்துள்ளனர்.

என்ன தலைவா? கடைசியில் இப்படி காலை வாரி விடுகிறாய்? உனக்கு கொடி பிடித்து கோஷம் போட்டு அப்பா அம்மா பெயரைக் கூட எடுத்துவிட்டு உன் பெயரை எங்கள் பெயர் முன் இணைத்து, ஊர் ஊராக, தெருத்தெருவாக உனக்கு மன்றம் அமைத்து, உன் படம் ரிலீசாகும் நாளே எங்களுக்குத் திருநாள் என்று வாணவேடிக்கை எல்லாம் நடத்திக் கொண்டாடிய எங்களை இப்படி கேவலப்படுத்துவது நியாயமா? என்று ரசிகன் கேட்பது போல் எழுதப்பட்டுள்ளது.

அதன் பின்னர்….

தன் குடும்பத்தைப் பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வரவேண்டாம், மன்றத்துக்காக யாரையும் செலவு செய்யவேண்டும் என்று நான் சொன்னது கிடையாது என்று ரஜினி சொல்லியிருந்தார்.

அதற்கு அப்பாவி ரசிகன், ‘காலைத்தான் வாரி விட்டாய் என்று நினைத்தால், இப்போது குழியும் பறிக்கிறாயே தலைவா. செலவு செய் என நீ சொன்னது கிடையாது.

ஆனால் இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள் செலவு செய்து உன் புகழ்பாடி போஸ்டர் அடித்து ஒட்டியதை எல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டுதானே தலைவா இருந்தாய்.

உன் ஆனந்தமே எங்கள் ஆனந்தம் என்று எங்கள் வயிறைக் கட்டி வாயைக்கட்டி உனக்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை நீ அறியமாட்டாயா? அப்போதெல்லாம் வாய் மூடிக்கொண்டிருந்துவிட்டு இப்போது புத்திமதி சொல்லப் புறப்பட்டிருக்கிறாயே. இதுதான் நேர்மையா? என்று கேட்கிறான் என்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.

‘30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிடமுடியாது என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.

இதற்கு, ‘நீ திரையில் தோன்றியபோது கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து விசில் எழுப்பி, ஆரவாரக் கூச்சல் போட்டு வாழ்க கோஷம் முழக்கிய எங்களைத் தகுதியற்ற கூட்டமாக்கிவிட்டாயே தலைவா.

உன் மனசாட்சி இதை எப்படி ஏற்கிறது? 30,40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும்போது, இத்தனை ஆண்டு காலம் உன்னை, உயர்த்திப் பிடித்த எங்களுக்கு அரசியலில் ஈடுபடத் தகுதி இல்லை என்பது எத்தகைய நியாயம் தலைவா? என்று எழுதப்பட்டுள்ளது.

‘முதலில் நீங்கள் உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

அதன் பிறகுதான் மற்றவை எல்லாம்’ என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

இதற்கு அப்பாவி ரசிகன், ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லையா எனக் கூறியதுதான் எங்களுக்கு இதனை நினைவூட்டுகிறது.

உங்கள் குடும்பத்தை மனைவி மக்களைப் பார்த்துக்கொண்டு நீங்கள் இருக்கவேண்டியதுதானே.

பின் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என மற்றவர்கள் எங்களைப் பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்வது தலைவா? வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்’னு சொல்லி வர்றதுக்கு முன்பே எங்களுக்கு ஆப்பு வச்சிட்டியே தலைவா. இது சரிதானா? என்று கேட்கிறான் என்பதாக சிலந்தி பகுதியில் எழுதப்பட்டுள்ளது.

’கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும்’ என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்கமாட்டேன், அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன் என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.

‘அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல; என்றால் வரும் சட்டசபை தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் தலைவா? பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையிலே உறுதியாக நின்று போராடவேண்டியதுதானே.

உங்களுக்கு மட்டும் முதல் அமைச்சர் பதவி வேண்டும், நாங்கள் எல்லாம் அதற்கு நாயாய் பேயாய் உழைக்கவேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் பதவி ஆசைபடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா? என்று கேட்கப்பட்டுள்ளது.

இப்படியே இன்னும் போய்க்கொண்டிருக்கும் அந்தக் கட்டுரையின் முடிவில், உன்னை நினைத்து செயல்பட்ட எங்களை தூக்கி எறிந்துவிட்டாய். உன்னை நம்பி நாங்கள் ஆடிக்கொண்டிருந்தோம். ஆனால் நீயோ யாருடையோ கயிற்று அசைவிலோ ஆடும் பொம்மையாகிவிட்டாய்.

ஹூ ஈஸ் பிளாக் ஷூப் மே… மே… மே… என்று முடிந்துள்ளது அந்தக் கட்டுரை.

2020ஆம் ஆண்டில் செல்வராகவன்-தனுஷ் இணையும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் தற்போது சூர்யா, ரகுல்பிரீத்தி சிங், சாய் பல்லவி நடித்து வரும் என்.ஜி.கே படத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து மீண்டும் தன் தம்பி தனுஷ் உடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறாராம்.

இது புதுப்பேட்டை படத்தின் 2ஆம் பாகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது நான்கு ஹீரோக்கள் நடிக்கும் சரித்திர படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதன் பின்னர் ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.

இவற்றை எல்லாம் முடித்துவிட்டு 2019ஆம் ஆண்டு இறுதியில் அண்ணன் செல்வராகவன் படத்தில் நடிப்பார் என்றும் இந்த படம் 2020ல் ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

Selvaraghavan and Dhanush will teams up again at 2020 year

யோகிபாபுவின் காதல் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளுக்கு நாள் ‘காற்றின் மொழி’ படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஈர்த்து வருகிறது. அப்படத்தின் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெரிய நடிகர்களின் பெயர்கள் உதாரணத்திற்கு சிம்பு அப்படத்தில் நடித்திருப்பதாக வந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது, அண்மைக் காலங்களில் நகைச்சுவையில் எல்லோரையும் கவர்ந்து வருகிறார் யோகிபாபு. அவர் ‘காற்றின் மொழி’ படத்திற்காக சில காட்சிகளில் நடித்திருக்கிறார். ஜோதிகாவுடன் நடித்த இரண்டு காட்சிகளுமே நகைச்சவை மிகுந்து இருக்கும். அரங்கத்தில் மிகப்பெரிய சிரிப்பலைகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று படக்குழு தெரிவிக்கிறது.

RJ வாக நடிக்கும் ஜோதிகாவிற்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரவர்களின் காதலைப் பற்றி பேசுகின்றனர். அதில் ஒரு அழைப்பாளராக யோகிபாபுவும் பேச, ஜோதிகா அவருக்கு காதலில் ஏற்படும் பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்று தீர்வு சொல்லும் விதமாக அந்த காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

BOFTA-வின் G.தனஞ்செயன், S.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் விதார்த், லக்ஷ்மி மஞ்சு, M.S.பாஸ்கர், மனோபாலா, குமரவேல், மோகன்ராமன், உமா, பத்மநாபன், சீமா தனேஜா மற்றும் சிந்து ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

A.R.ரகுமானின் உறவினரான A.H.காஷிப் இசையமைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே இசையமைத்தப் பாடல் அனைவரையும் மயக்கத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, கலையை கதிர் கவனிக்கிறார். உடைகளை பூர்ணிமாவும், பிரவின் KL எடிட்டிங் செய்கிறார். ராதா மோகன் இயக்கிய இப்படத்திற்கு பொன் பார்த்திபன் வசனங்களை எழுதியிருக்கிறார்.

More Articles
Follows