நம்பர் 1 விளையாட்டு; விஜய்-அஜித் ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 45 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த்.

அவரின் இடத்தை பிடிக்க கடந்த 15 வருடங்களாக விஜய், அஜித் ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனாலும் அவர்களால் முடியவில்லை.

இருந்தபோதிலும் ரஜினி பட வசூலை முறியடிக்க முயற்சி வருகின்றனர்.

ரஜினியின் இடத்தை பிடித்து விட்டால் நம்பர் 1 இடத்தில் வந்து விடலாம் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது.

அவர்கள் கூட அப்படி நினைப்பார்களோ எனத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் ரசிகர்கள் ரஜினி இடத்தை தல பிடித்துவிட்டார். தளபதி பிடித்துவிட்டார் என்பதை ஒவ்வொரு படம் வரும்போது சொல்வதை வாடிக்கையாக வைத்துள்னர்.

இந்நிலையில் நேற்று வெளியான 2.0 படத்தில் நம்பர் 1 இடத்தை பற்றி ஒரு வரி பன்ச் வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

இந்த நம்பர் 1, நம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு. The one and Only Super One நான்தான் என்பதுபோல பேசியிருக்கிறார். இது ரஜினி ரசிகர்களிடையை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No 1 game Rajinikanth warns Vijay and Ajith fans

மரணமடைந்த ரசிகரின் மகள் படிப்புச் செலவை ஏற்றார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயதான இவர் அங்குள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவர் நடிகர் சூர்யாவின் நற்பணி இயக்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறா.

இவர் கடந்த 13-ந் தேதி மணிகண்டன் நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

இதனையறிந்த நடிகர் சூர்யா அவரின் குடும்பத்தாரை சேலம் சென்று நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அதனுடன் அந்த குடும்ப செலவையும் ஏற்றுக் கொண்டு அவரின் மகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

இதைக்கேட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளனர்.

Actor Suriya help to his fans family

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் டிவி நடிகர் ரியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நடிக்கத் தொடங்கிய 6 வருடங்களில் ஒரு முன்னணி நடிகராகவும் ஒரு தயாரிப்பாளராகவும் உயர்ந்து விட்டவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் சார்பாக கனா என்ற படத்தை தயாரித்துள்ளார். இப்படம் அடுத்த டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அடுத்த படத் தயாரிப்பையும் தொடங்கியுள்ளார் சிவா.

கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இப்படத்தில் டிவி புகழ் ரியோ நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சிரின் கஞ்சவாலா நடிக்கிறார்.

இவர்களுடன் ராதா ரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது.

விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் ரியோ துணை நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TV fame Rio Raj team up with Sivakarthikeyans 2nd production movie

சர்கார் சாதனையை அடித்து நொறுக்கிய ரஜினியின் 2.0

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

லைகா நிறுவனம் இப்படத்தை ரூ.550 கோடி பொருட்செலவில் உருவாக்கியது.

படத்தை பார்த்த அனைவரும் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் மட்டும் ரூ. 2.64 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது காலா, சர்கார், மெர்சல், விவேகம் ஆகிய பட வசூல்களை விட அதிகம்.

விஜய் நடித்த சர்கார் படம் சென்னையில் முதல் நாள் ரூ. 2.37 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது.
மேலும் சர்கார் தீபாவளி தினத்தில் வெளியானது.

ஆனால் 2.0 படம் எந்த பண்டிகையும் இல்லாத நாளில் வியாழக்கிழமையில் வெளியாகி அந்த சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinis 2.0 movie beat Vijays Sarkar box office collection

Rajinis 2point0 movie beat Vijays Sarkar box office collection

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு உதவிய *கில்டு*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலால் பேரிடரில் இருக்கும் டெல்டா மக்களுக்கு கில்டு அமைப்பு நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளது.

இதற்கு தலைவர் திரு. ஜாக்குவர்தங்கம் தலைமையில் பொதுக்குழு செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் டெல்டா மாவட்டத்திற்கு சென்று மக்களை நேரிடையாக சந்தித்து நிவாரணம் உதவி செய்ய தீர்மானித்து இன்று அதற்காக ஒரு லாரி முழுவதும் நிவாரண பொருட்களுடன் குழு கிளம்பி சென்றது.

இதனை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் வழி அனுப்பி வைத்தார்.

இதன் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்பெறுவர்கள்.

Guild President Jaguar Thangam help for Gaja Cyclone affected peoples

காதலையும் கம்ப்யூட்டரையும் இணைக்கும் *இதுதான் காதலா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குறிஞ்சி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.எஸ்.முருகன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘இதுதான் காதலா’.

‘இதுதான் காதலா’ படத்தை வி.எஸ்.முருகன் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நாயகனாக சரண், நாயகியாக அஷ்மிதா, இரண்டாவது நாயகியாக ஆயிஷா நடிக்கிறார்.

மேலும் படத்தில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.எஸ்.முருகனும் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ‘காதல்’ சுகுமார், ‘கூல்’ சுரேஷ், பாலு ஆனந்த் ‘பயில்வான்’ ரங்கநாதன், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா, மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்துக்கு சங்கர் இசையமைக்கிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குனர் முருகன் கூறுகையில்,‘‘ஒரு விஞ்ஞான ரீதியான கதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.

காதல் என்பதை காலம்தான் நிர்ணயிக்கும் என்பதை வலியுறுத்தி காதலையும் கம்ப்யூட்டரையும் இணைத்து புதிய பாணியில் திரைக்கதை அமைத்து இந்த ‘இதுதான் காதலா’ படத்தை உருவாக்கியுள்ளோம்’’ என்றார் இயக்குனர்.

இந்தப் படத்திற்கான டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் எம்.எம்.தியேட்டரில் நடந்தது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், ‘ஊமை விழிகள்’இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ், படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Idhuthan Kaadhala movie connect with Computer and Love

More Articles
Follows